12/31/10
HAPPY NEW YEAR !!
எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !!! நம் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களும் சந்தோசங்களும் அவ்வபோது வந்து வந்து போகும் ..கடந்த வருடங்களில் நடந்த கஷ்டங்களை எல்லாம் தூக்கி போட்டு விட்டு வரும் புது வருடத்தை இனிதாய் ... மகிழ்ச்சியாய் வரவேற்போம் !!! எல்லோரும் ஏதாவது பழக்க வழக்கங்களை மாற்ற RESOLUTION எடுப்பார்கள் ..அப்படி எதோ ஒன்று எடுப்போம்..அதை கடை பிடிப்போம் .இந்த புது வருஷத்தில் நம் ஆடம்பரமாக கொண்டாடினாலும் ..யாரோ ஒரு ஏழை பிள்ளைக்கு இனிப்பு வாங்கி கொடுத்தால் அதன் மகிழ்ச்சியில் நம் புத்தாண்டு இனிதாய் பிறக்கும் .. என்னை மிகவும் மாற்றிய ஒரு சின்ன தத்துவம் .அதை எல்லோருடனும் பகிர விரும்புகிறேன் ..
" விட்டு கொடுபவர்கள் கெட்டு போவதில்லை !!!
கெட்டுபோபவர்கள் விட்டு கொடுப்பதில்லை !!! "
நான் இதை பின்பற்ற போகிறேன் ....நீங்க ?
12/28/10
மார்கழி மாதம் !!
இது மார்கழி மாதம்!! நாம் எல்லோருக்கும் தெரியும் ..எனக்கு என்னவோ இந்த மாதத்தை கொஞ்சம் கூட பிடிக்காது . ஏன் என்றால் ..சீக்கிரமே எழும்பி கோலம் போடணுமே ... இந்த மார்கழி மாதம் பஜனைகள், அழகு கலர் கோலங்கள் என கிராமங்களில் நன்றாக பின்பற்றுவார்கள்..
என்னுடைய பாட்டி வீடு இருந்தது ஒரு கிராமம் .அங்கு அதிகமாக கிறிஸ்துமஸ்விடுமுறயில் தான் அதிகமாக செல்வது வழக்கம் .அந்த மாதிரி விடுமுறையில் தான் காலையில் கொஞ்ச அதிக நேரம் தூங்க முடியும் ஆனாலும் தூங்கவே விட மாட்டங்க .காலையில் நாம் தூங்கினாலும் அந்த பஜனை சத்தத்தில் தூக்கமும் வராது.
ஆனால் மெல்லிய ஓசையுடன் கூடிய அந்த சத்தம் இனிமையாக இருக்கும். அந்த சத்தத்தில் தூக்கம் கலைந்து பார்த்தால் என்னுடைய அத்தை கோலம் போட்டு கொண்டு இருப்பாங்க .. எனக்கும் ஆசையா இருக்கும் ..ஆனால் சின்ன பிள்ளை நீ எல்லாம் போட கூடாது என்று சொல்லிடுவாங்க . உள்ளுக்குள்ளே திட்டி கொண்டு பாட்டி கிட்டே போய் புகார் சொல்லிடுவேன் . அடுத்து எனக்கு என்று கொஞ்சம் கோல மாவு கொடுத்து ஒரு ஓரமாக கோலம் போட சொல்லுவாங்க .. எதோ பெரிய வெற்றி கிடைத்த சந்தோசம் மனதில் இருக்கும் ..ஆனால் கோலம் என்னவோ ஒரு மாதிரி தான் இருக்கும் ...சின்ன பிள்ளைக்கு அவ்ளோ தான் தெரியும் .
இதெல்லாம் நடந்தது எனது ஐந்தாம் வகுப்பில் ...அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புத்தகத்தில் வரைந்து பழகினேன் .. எங்க வீட்டில் வீடு முற்றத்தில் போட்டு பழகுவேன் ..ஒரு பத்தாம் வகுப்பில் ஓரளவிற்கு கோலம் போல வந்தது .அடுத்து அழகாக வரும் கல்லூரி படிக்கும் போது . ஆனால் நிறைய சோம்பேறி தனம் எனக்குள் வந்து விட்டது .எங்க அம்மா என்னை கொஞ்சம் கோலம் போட்டு வாம்மா !! என்று ..எப்படி ??? என்னை வேண்டாம் என்று சொல்வீங்க ..இப்போ மட்டும் ஏன் என்னை எழுப்றீங்க என்று நான் கேட்ட நாட்கள் இப்போ என் கண் முன்னே !!
அப்போ எங்க வீடில் முற்றம் பெரியது .எவ்ளோ பெரிய கோலம் என்றாலும் போடலாம் .ஆனால் போட விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறேன் ..இப்போ எங்கே இந்த காலத்தில் எல்லாம் இருக்கவே இடம் இல்லை .இதில் கோலத்திற்கா ? என்று கேட்கிறாங்க ?
இந்த கோலம் போடுவதில் நிறைய மருத்துவ குறிப்புகள் இருக்குது .காலையில் சுத்தமான காற்று !! சுவாசிப்பதால் நல்ல ஆரோக்கியம் ..அடுத்து கோலம் குனிந்து போடுவாங்க அந்த காலத்தில் எல்லாம் .அது ஒரு உடற்பயிற்சி போல ..இப்போ எல்லாம் ஸ்டூல் ,முக்காலி போன்றவை கொண்டு போடுறாங்க .(நானும் தான் ) ..இடமா பற்றி சொல்லிக்கிட்டு இருந்தேன் ..
இப்போ எல்லாமே பிளாட் என்பதால் ..அடுத்த வீடுக்கும் பக்கத்துக்கு வீடுக்கும் கொஞ்சம் தான் தூரமே ..அதில் எங்கு கோலம் போடறது.. அதனால் இப்போ ஆசை நிறைய இருக்கு கோலம் அழகாய் போட ..ஆனால் இடம் இல்லை ..அப்போ இடம் இருந்தது ..ஆசை இல்லை !! விஜய் வசனம் மாதிரி இருந்தால் அடிக்காதீங்க ...இருந்தாலும் அப்போ அப்போ கோலம் போடுவேன் .கோலங்கள் சில ..உங்கள் பார்வைக்கு !!!
இது நான் கார்த்திகை அன்று போட்ட கோலம் !!
12/24/10
12/18/10
TOP 10 SONGS !!! 2010 .
12/16/10
கனவில் தான் !!!
குமரேசன்.. இவர் பார்க்கும் அத்தனை படங்களிலும் இவர் தான் கதாநாயகன். நாற்ப்பது வயதாகியும் பத்து வயதில் தொற்றிக்கொண்ட சினிமா பைத்தியத்தை விடாமல் தன்னுடனே வளர்த்து கொண்டிருக்கும் ஒரு கனவு தொழிற்சாலை. கொஞ்சம் முட்டைக் கண் , நேர் வகிடெடுத்து முன் நெற்றி தெரிய சீவி , சோடா புட்டி கண்ணாடி போட்டு சைடு சீன்களில் வந்து போகும் காமெடி நடிகர் போல இருப்பார். ஆனால் மனதில் அந்த கால ஜெமினி முதல் இந்த கால ஜெயம் ரவி போல தன்னை அழகன் என்று நினைப்பவர்.
தன் இளம் வயதில் சினிமாவில் போல் தன்னை யாராவது காதலிப்பார்கள் என்று முயற்சிகள் செய்தது தொடர் தோல்விகளை மட்டுமே வெற்றியாக பெற்ற போராளி. அவராக பத்து பதினைந்து பெண்கள் பின்னாடி சுற்றியும் தோல்வி. ஆனால் சினிமாவில் போல் செருப்படி வாங்குவதில் மட்டும் தோல்வி கிடைக்கவில்லை. பார்த்தார் குமரேசன்! பேசமால் சினிமாவில் வரும் கதாநாயகிகளை காதலிக்கத் தொடங்கினர். செருப்படியும் மிஞ்சியது. எல்லா கதாநாயகிகளும் இவரைக் காதலித்தே ஆக வேண்டும். ஏனென்றால் இவர் காதலிப்பது கனவுகளில் மட்டும் தான். ஆமாம் கதாநாயகிகள் அனைவரும் இவரின் காதலிகள்.
குமரேசன் சினிமா பைத்தியமாக இருந்தாலும் ஒரு வழியாக படித்து பட்டம் பெற்று ஒரு சிறிய கம்பெனியில் அக்கௌன்ட் பார்க்கும் பணியில் இருந்தார். இவர் கண்ட கனவுகளை அடுத்த நாள் ஆபீசில் எல்லோரிடமும் ரொம்ப சுவாரசியமாய் சொல்லுவார். மற்றவர்களும் இவரின் கனவுகளைக் காமடி பீஸ் என்று சிரிப்பார்கள். ஆனால் குமரேசன் இதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை. இப்படியே போனால் தன் பிள்ளை தறுதலை பிள்ளை ஆகி விடுவானோ என்று குமரேசனின் அப்பா தன் தூர உறவு செல்லம்மாளை இவனுக்குப் பெண் பார்த்தார்.
தனக்கு கல்யாணம் என்றதுமே குமரேசன் தன் மனைவி ஒரு சினேகா அல்லது ஒரு தாமனா போல என்று கற்பனை பண்ணினான். இவனின் குணம் தெரிந்து கல்யாணம் அன்று மட்டுமே பெண்ணைக் காட்டினார்கள். குமரேசனின் கல்யாண கனவு எல்லாம் வீணாகப் போனது. செல்லம்மா " கோபுரங்கள் சாய்வதில்லை " " அருக்காணி " போல் இருந்தாள். இருந்தாலும் என்ன செய்ய ! கல்யாணமும் முடிந்தது. கல்யாணமானாலும், குமரேசன் செல்லமாளிடம் முகம் கொடுத்து பேசுவதே இல்லை. தினமும் ராத்திரி ஷோ படம் பார்த்து பார்த்து தன் கதாநாயகிகளுடன் குடும்பம் நடத்தினான். இதில் பெரிய கூத்து என்னவென்றால் தன் கனவுகளை தன் மனைவியிடமே சொல்லூவான். செல்லம்மா ஒன்றும் எதுவும் கூறுவதில்லை. அவளும் இந்த கிறுக்கு மாமாவுக்கு தன்னை விட்டால் வேறு எவளும் கிடைக்க மாட்டாள் என்று சிரித்துக் கொள்வாள்.
இப்போது ! "விண்ணை தாண்டி வருவாயா " திரிஷாவை பாக்க இன்று நாற்பதாவது தடவை போகிறார் இந்த நாற்பது வயது குமரேசன். படம் வந்தும் நாற்பது நாள் தான் ஆகிறது. இப்பல்லாம் தினமும் இரவு திரிஷா முகம் தான் இவர் கனவில் . இன்றும் வழக்கம் போல் தூங்க தொடங்கினர் குமரேசன்!
அடுத்த நாள் அவரின் முகம் ரொம்ப வாட்டமாய் இருந்தது. செல்லம்மாளுக்கு புரியவே இல்லை. ஆபீஸ் போனதும் குமரேசன் தன் கனவை வழக்கம் போல் சொல்லுவான் என்று நண்பர்கள் பார்த்தார்கள். குமரேசனும் சொன்னான் - வழக்கம் போல் கனவு வந்துச்சு. ஆனால் எந்த கதாநாயகி என்று தான் தெரிய வில்லை. ரொம்ப பழகிய முகம். ஆனால் நினைவுக்கே வரவில்லை எனக்கு என்றார். எல்லாரும் அவரை பாவமாய் பார்த்தார்கள். குமரேசன் நாள் முழுவதும் அந்த முகத்தையே யோசித்தார்.
சாயங்காலம் குமரேசன் வீட்டுக்கு போனார். எதிரே செல்லம்மா வந்தாள். குமரேசன் அப்பாவியாய் அவளிடமே தன் கனவை சொல்லி யாராக இருக்கும் என்றார். செல்லமாவுக்கு வந்ததே பாருங்க கோபம். அவரை ஒரு மேலும் கீழுமாய் பார்த்தாள்..சிரிப்பதா அழுவதா இல்லை அவனை போட்டு மிதிப்பதா என்று தெரிய வில்லை.ஏன் என்றால் அவன் கூறிய அடையாளங்களை வைத்து பார்க்கும் பொது கனவில் வந்ததோ அவளின் முகம் தான் ..சினிமா நடிகைகள் முகம் பார்த்து சலித்து போன அவனுக்கு தன் மனைவியின் முகம் வந்திருக்கு ..அவள் சந்தோஷத்தில் .." மாமா என் முகமா என்று பாருங்க " என்றாள் ..குமரேசனுக்கு தன் கனவில் யார் வந்தாள் என்று தெரிந்ததில் சந்தோசம் .மனைவிக்கு கணவனின் கனவில் ஒரு நாளேனும் வந்தாச்சு என்பதில் சந்தோசம் ...குமரேசன் அன்று முதல் தன் மனைவியை நேசிக்க தொடங்கினான் செல்லமாவின் நீண்ட நாள் பொறுமைக்கு பதில் கிடைத்தது ...கனவில் எப்போவுமே செல்லம்மா தான் !!! ( வடை போச்சே என்று அவர் ஏங்கின நாட்கள் நமக்கு எங்கே தெரிய போகுது )
12/13/10
சிட்டி !!!!
ஹலோ எல்லோருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி ஒன்னு சொல்ல போறேன் ..என்ன தெரயுமா? கொஞ்சம் யோசிங்களேன் ...நான் முதல் மதிப்பெண் எல்லாம் வாங்கல!! என் பொண்ணு இன்று நான் சொன்னதை எல்லாம் கேட்கல ..எனக்கு கோபம் வராமல் இல்ல !!!
நான் சமைத்ததை சூப்பர் என்று சொல்ல வில்லை என் கணவர் !!! என் நண்பர்கள் எல்லோரையும் மொத்தமாக மீட் பண்ணவும் இல்ல !!! அப்புறம் என்ன சந்தோசம் என்று கேட்கிறீங்கள ??? சொல்றேன் ...ஓவர் பில்ட் அப் என்று சொல்வது கேட்கிறது என் காதில் ..... சொல்றேன் ..எனக்கு செல்ல பிராணி வளர்க்கணும் என்று ரொம்ப நாளா ஆசை ..இடம் அமைய வில்லை ...மீன்கள் மட்டும் வளர்க முடிந்தது.. நாய் என்றால் ரொம்ப பிடிக்கும் ...ஏனோ முடியவே இல்ல ...எங்க அம்மா கிட்டே கேட்டு இருக்கேன் ..வளர்க்கணும் என்று ? அம்மா உன்னை வளர்க்கவே கஷ்டபடுகிறேன் ...இதில் அதையுமா ?? என்று சொல்லி விட்டார்கள் ..திருமணத்திற்கு பிறகு ...என் கணவரையே பெட் ஆக்கி கொண்டேன் . :-) என் பிள்ளைகள் கேட்கிறாங்க இப்போ ...என் அம்மா சொன்ன அதே வசனம் தான் ...உங்களையே பர்த்துக முடியல ...இதிலே அது வேறயா ??? என்று ..என்ன ஒரு மனித குணம் பாருங்க ..குரங்கு போல ...எனக்கு குரங்கு ரொம்ப பிடிக்கும் ...சரி என்ன சந்தோசம் என்று சொல்லவே இல்ல பாருங்க ..என் ஆசை என் பிள்ளைகளின் ஆசை எல்லாம் இப்போ நிறைவேறி ஆச்சு ...அபப்டியே உங்க வலது கை சைடு பாருங்க ...உங்க நண்பர்களின் முகம் நியாபகம் வந்தாதா ?? நான் ஒரு குரங்கை என் பெட் ஆக்கிருகேன் ...பேரு "சிட்டி " சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தப்பா நினைச்சிகதீங்க ....என் பொண்ணு கிட்டே பேரு கேட்டேன் .ரோபோ வந்ததில் இருந்து சிட்டி சிட்டி தான் ..அதனால் வெச்சுட்டோம் ...பெயர் சூடும் விழ எல்லாம் முடிந்தது ...கூப்பிட முடியல எல்லோரயும் ..
சரி ஏன் குரங்கை ?? என்று நீங்க கேட்பது கேட்கிறது ...நாய் ,பூனை ஆடு ,மாடு எல்லாவற்றையும் வீட்டில் வளர்க்கலாம் ..ஆனால் குரங்கை முடியுமா ? நம்ம ப்ளாக் இல் என்றால் நீங்க எல்லோருமே நல்லா பர்த்துகுவீங்க..சாப்பாடு எல்லாம் நான் போடா விட்டாலும் நீங்க போடலாம் .more என்று இருக்குல அதை கிளிக் பண்ணி குடுக்கலாம் .சமத்தாக சாப்பிடும் ..சரி எங்க சிட்டி ...இல்ல இல்ல நம்ம சிட்டி எப்படி என்று நீங்க தான் சொல்லணும் .
12/10/10
சமைத்து தான் பாருங்களேன் !!!!
தேவையான பொருட்கள் :
-----------------------------------------
பாஸ்மதி ரைஸ் : ஒரு கப் ..( பாஸ்மதி இல்லையெனில் பச்சரிசி )
ONION ------- 2
தக்காளி ------- 2
இஞ்சி பூண்டு விழுது --- 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை
புதினா இலை ( கொஞ்சமாக )
கரம் மசாலா தூள் --- 2 ஸ்பூன்
மிளகாய் தூள் -- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் --- 1 / 2 ஸ்பூன்
ஏலக்காய் -- 2
பட்டை -- 1
கிராம்பு - 3
தண்ணீர் -- 1 கப் அரிசி என்றால் ஒன்னரை கப் தண்ணீர் எடுக்க வேண்டும் .
(பிரியாணி கும் இதே அளவு தான்..அரிசி 2 கப் எடுத்தால் ..2 * 1 1 /2 ) கணக்கும் படிக்கணும் போல சமைப்பதற்கு !!!
இதை எல்லாம் ரெடி பண்ணிகோங்க...எப்படி என்று சொல்கிறேன் .நல்ல கேட்டுகோங்க .
1 .. முதலில் தேவையான அளவு அரிசியை ஒரு 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்
குக்கர் இல் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் ..பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் எல்லாவற்றயும் போட்டு தாளிக்கவும் ..கரிகிவிடாமல் பார்த்து கொள்ளவும் ( சிம் இல் வைத்து கொள்ளலாம் ).. .
2 . வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும் .
3 . தக்காளியும் சேர்த்து வதக்கவும் ..மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள்
கரம்மசாலா எல்லாவற்றயும் சேர்க்கவும் .
4 நன்கு வாசனை வரும் வரை வதக்கவும் .
5 . தேவையான . அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கணும் ...அதை மறந்தால் கஷ்டபட்டது எல்லாமே குப்பையில் தான் ...உப்பு ஒரு 1 ஸ்பூன் போதும் .
6 .ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு ..சேர்க்கவும் .கொத்தமல்லி புதினா இலை சேர்த்து மூடவும் ..வெயிட் போடாமல் ஆவி வரும் வரை வெயிட் பண்ணிட்டு.வந்ததும் அடுப்பை சிம் இல் வைத்து .5 நிமிடங்கள் கழித்து ஆப் பண்ணவும் .
மொத்தமாக ஆவி போனதும் திறக்கவும் ..
7 .கொஞ்சம் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும் .
( இப்போ பார்த்த அதே செய்முறை தான் சிக்கன் பிரியாணி கும் .தக்காளி சேரத் பின்னர் ..சிக்கன் யும் சேர்த்து வதக்கவும் ..கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கவும் (3 ஸ்பூன் ))
VEG பிரியாணி என்றால் தேவையான காய்கறிகளை சேர்க்கவும் தக்காளி வதக்கும் போது )
உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறன் ..நீங்க தான் சொல்லணும் ..எப்படி என்று ??
12/5/10
என் மனதினில் ...
அழகான காலங்கள் ...
அழியாத சந்தோசங்கள் !!!
என் கல்லூரி காலங்கள் ..
சண்டை போட்ட
மறு நிமிடம்
பேசி கொண்ட அந்த
நாட்கள் .....ஏன் ?
இல்ல இன்று !!!
கேட்காமலே வருகின்றன
கோபங்களும் ...
ஏமாற்றங்களும் !! என்னிடம் ...
கடந்த காலங்கள் ...
நினைத்து ...நிகழ்
காலங்களை தொலைக்கிறேன் !!!
----------------------------------------------------------------
என் நினைவுகளால்
உன்னை செதுக்கினேன் !!
அழகிய சிலையாய் ..நீ
இன்று ..
என் முன்னே
காதலாய் !!!
..
.
11/27/10
மெகா சீரியலும் நம் மக்களும் !!!
11/16/10
செல்லமே !!!
என் மகளின் வயதில் நான் இல்ல விட்டாலும் ....
என் மகள் கூட விளையாடும் போது நானும் சின்ன குழந்தை தான் .என் மகளுக்கும் எனக்கும் ...நிறைய நேரங்களில் சண்டை தான் .செல்ல கோபங்கள். சாப்பிட மிகவும் அடம் தான் ..சாப்பிடாமல் விட மனம் கேட்காது .அப்படி இருக்க ஒரு யோசனை வந்தது ..என்ன பண்ணலாம் ??சின்ன பிள்ளைகளை கை ஆள்வது மிகவும் கஷ்டம் என்றே எண்ணி இருந்தேன் .ஆனால் நிறைய ஐடியா இருக்கு.அவங்களை நம் வசம் கொண்டு வர .
11/4/10
என் சிறு வயதில் தீபாவளி !!!
சிறு வயதில் தீபாவளி என்றால் ஒரு மாசத்திருக்கு முன்பே எப்போ வருது ? எத்தனை நாள் லீவ் என்றெல்லாம் பார்க்கும் ஆர்வம் ..என்ன டிரஸ் வாங்கலாம் ..அதற்கு மேட்ச் ஆஹா வளையல் ,செயின் ,கம்மல் எல்லாம் வாங்கும் வழக்கம் .தீபாவளிக்கு பலகாரங்கள் சுடும் போதே டேஸ்ட் பண்ணி அது சரி இல்ல இது சரி இல்ல என்று நிறைய முறை சொல்லிருக்கேன் .எங்க அம்மாவும் அதை சரி பண்ணுவாங்க .இரவில் விழித்திருந்து கோலங்கள் போட்டு தான் தூங்குவோம் ..காலை தூக்கம் எவ்வளவு சுகம் தெரயுமா? இன்னும் குளிக்காமல் என்ன பண்றே என்று வாங்கும் திட்டுகள் இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றது.சீயகயும் எண்ணெயும் ரெடி அக இருக்கும் . நன்கு குளித்துவிட்டு ..சாப்பிட வருகையில் இட்லி கூட கைமா குருமாவும் மணக்குமே .....அயோ ரொம்ப சூப்பர் தெரயுமா ?
10/21/10
கற்பனையில் ஓர் உலகம் !!!
அஞ்சலி ! பத்து வயது சுட்டிப் பெண். சின்ன வயது என்றாலும் கொஞ்சம் பக்குவமான பெண். ஏன் என்றால் அவள் பிறந்தது ஏழைக் குடும்பத்தில் தான். அவளின் அம்மா அப்பா அவளுக்கு வீட்டு கஷ்டங்களை அவ்வப்போது எடுத்து சொல்வார்கள். எனவே தான் அந்த பக்குவம். அம்மா அப்பா ஏழை என்றாலும் அவளுடைய நல்ல நண்பர்கள். அது அவள் செய்த பாக்கியம் என்றே நினைத்தாள். பக்கத்து வீட்டு மது ! அஞ்சலியின் தோழி ! பள்ளித் தோழியும் கூட. மது நல்ல வசதியான பெண். அவள் அணியும் ஆடை, வளையல், கம்மல் பாசி என்று எல்லா பொருளிலும் அவளின் வசதி தெரியும். அஞ்சலி சின்ன பொண்ணு தானே. தனக்கு இப்படி இல்லையே என்று அவளின் குட்டி மனதும் அசைப் படத்தான் செய்யும்.
அஞ்சலி தன் அம்மாவிடம் எல்லா விசயங்களையும் சொல்லுவாள். ஏன் மது பற்றி கூட சொல்லுவாள். ஆனால் எனக்கும் அவள் மாதிரி டிரஸ், பாசி வேண்டும் என்று தன் ஆசைகளை மட்டும் காட்டிக் கொள்வதில்லை. அம்மா அப்பா வருத்தப் படுவார்கள் என்று எண்ணுவாள். இருந்தாலும் அவள் மனதில் உள்ளதை தனக்கென்ற ஒரு கற்பனை உலகில் இருப்பதாய் எண்ணி அதில் செல்ல தொடங்கினாள்.
அது ஒரு குட்டி கற்பனை உலகம். அங்கே அவள் ஒரு குட்டி ராணி. அவள் கேட்டது எல்லாம் கிடைத்தது. தோழி மதுவை விட அழகான டிரஸ், நகைகள் என்று எல்லாம்
ஏராளம் ஏராளமாய். அஞ்சலிக்கு தன் நிஜ உலகை விட கற்பனை உலகம் மிகவும்
பிடித்துப் போனது.
அஞ்சலி தன் அம்மா அப்பாவிடம் இருந்து தனிமையில் இருக்க ஆரம்பித்தாள். மகளின் மாற்றம் ஏழைப் பெற்றோர்களுக்குப் புரிய வில்லை. தன்னுடைய கற்பனை வாழ்வில் நிஜ வாழ்வை தொலைக்க ஆரம்பித்தாள். மனதளவில் ஓடிய அஞ்சலியின் கற்பனை வாழ்வு தூக்கத்தில் புலம்பலாய் வரத் தொடங்கியது. அம்மாவுக்கு கொஞ்சம் புரியத் தொடங்கியது.
அம்மா ஒரு நாள் அஞ்சலியிடம் ஆறுதலாய் பேசினாள். " அஞ்சலி ! கற்பனை வேறு. நிஜம் வேறு. கற்பனையில் வாழும் வாழ்க்கையை நிஜத்தில் அனுபவிக்க முடியாது. கற்பனை வாழ்வில் உழைப்பே இல்லாமல் எல்லாம் வாங்கி விட முடியும். ஆனால் நிஜத்தில் நீ உழைத்தால் தான் எல்லாம் கிடைக்கும். கற்பனை செய். ஆனால் அதிலேயே வாழ நினைக்காதே. கற்பனையை நிஜமாக்க நன்றாக படி. இன்று நம்மிடத்தில் இருக்கும் ஏழ்மை தொடர் கதை அல்ல. உன் உழைப்பு கூட அதை மாற்ற முடியும்."
இருந்தாலும் அஞ்சலியால் தன் கற்பனை வாழ்வில் இருந்து உடனே வெளி வர முடிய வில்லை. அவளின் அம்மா அப்பா அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே கொண்டு வருகிறார்கள்.
அஞ்சலியைப் போல இன்று நிறைய பிள்ளைகள் தன் ஏக்கங்களை மனதில் சுமந்து கொண்டே வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் மனமறிந்து அவர்களை அரவணைத்து கொண்டு செல்வது பெற்றோர்களின் கடமையே !!!
10/17/10
நினைவை அழிக்காதே !

என்னுடன் பேசாத உன்
10/15/10
மரங்களை வெட்டுங்கள் ....
மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாகமரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....!!! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!!
( ( இது எனக்கு வந்த மெயில் தான் . இருந்தாலும் எல்லோருடனும் பகிர விரும்புகிறேன் )
10/14/10
மீன் குழம்பு ..( ஆற்று மீன் )
10/8/10
தனிமை .
தொலைத்தாலும் தொலையாதது
10/5/10
அழியா நினைவுகள் ... கிடைக்காத சந்தோசங்கள் !!!!

என் சிறு வயதினில்...
என் பாட்டி வீடு சென்ற
ஞாபகங்கள் !!!
அலை மோதின என்னுள்...
இன்றும்....
நான் போகும் போது.
அன்று..
என் அன்னையின் கை பிடித்து.
இன்று..
என் மகளின் கை பிடித்து..
எத்தனை அழகான காலங்கள் ...
போகாமலே நனைகிறேன்
நினைவுகளில்..
கிராமம் தான்..
எங்குமில்லா அமைதி ..
கிடைக்காத பாசங்கள்..
பார்க்காத மனிதர்கள்..
புரியாத மொழிகள்..
அங்கு மட்டுமே..
வயல் வரப்பில் நான்
நடந்தேன் அழகாய்..
முடியவில்லை
என் மகளால் ..
புதிய பாதை அவளுக்கு..
அம்மா
இது தான் "ரைஸ் செடியா?"
ஆம் என்றேன்
அவளிடம்..
இது போல் குட்டி குட்டி கேள்விகள்
அவளுக்கு..
புரிய வைத்தேன் நான்
தென்னையில்
உள்ள தூக்கணாங் குருவி கூடு !

அழகிய வீடு !
அடித்த காற்றில் கீழே விழுந்தது போல்.
.என் குட்டி தேவதை
அதை எடுத்துக்கொண்டாள்..
அவளின் பார்பி பொம்மைக்கு
இனி அது வீடாம்..
தாகம் என்று நினைக்கையில்
தோட்டக்காரன் நின்றான்
இளநீரோடு!
ஆசை தீர தாகம் தனித்தோம்..
வயல்வெளியில்
விவசாயிகளின் பாடலோடு வேலை ..
புரியவில்லை அவளுக்கு..
புரிந்தது அவர்களின்
கபடமில்லா பாசம் ..
வயல் பார்த்து
பம்ப் செட்டில் குளித்து
தென்னை ஓலையில்
குட்டி தூக்கம் போட்டு
களைத்து வீடு வருகையில்..
வாசம் துளைத்தது
பாட்டி வைத்த மீன் குழம்பு..
ஆசையாய் சாப்பிட்டோம்
பாட்டியின் பாசத்தையும் சேர்த்து.
ஐயோ... இன்னும் எத்தனையோ !!!
விவரிக்க வார்த்தைகள் போதாதே..
என் மகளுடன் நானும்
குழந்தையாய் ஏங்குகிறேன் ..

என்று வருமோ..
அடுத்த என் மகளின்
விடுமுறை நாட்கள் என்று ???
10/4/10
CUTE SMS :
-------------------
A FLIGHT WAS FLYING THROUGH THE CLOUDS.SUDDENLY IT LOST THE BALANCE .EVERY ONE STARTED SHOUTING IN FEAR.BUT A SMALL BOY KEPT PLAYING WITH HIS TOY.AFTER AN HOUR FLIGHT LANDED SAFELY.A MAN ASKED THE BOY "HOW COULD YOU PLAY WITH UR TOY WHEN EVERY ONE WAS AFRAID? " THE BOY SMILED AND SAID " MY DAD IS A PILOT ..I KNOW HE WILL LAND ME SAFELY "
"LOVE IS ALWAYS TRUST "
9/21/10
கிடைக்குமா ??

கல்லூரியின் முதல் நாள் ...
பிறந்த வீட்டை விட்டு
புகுந்த வீடிற்குள்
நுழைந்ததை போல் உணர்வு !!!
புதிய புதிய முகங்கள் ...
பழகிய முகத்தை தேடின
என் விழிகள் !!!
ஏங்கியது என் மனம் ....
பள்ளியில் பழகிய சிநேகங்கள்
யாரேனும் உண்டா
புதிய் இடம் ...
காட்டிற்குள் விட்டது
போல பயம்!!!
கல்லூரி முதல்வரின்
முதல் உரை ..
ஏகப்பட்ட அறிவுரைகள் ...பள்ளிக்கே ஓடிடலாம
என எண்ணங்கள்
ஓடின மனதினில் !!!
தனக்கென எழுதப்பட்ட
உரையை முடித்தார் ...முதல்வர் !!!
வகுப்பறைக்கு சென்றேன் ....
சற்றே பள்ளியை விட
அழகாய் இருக்க...
கொஞ்சம் மகிழ்ந்தது
என் மனம் !!!
தனிப்பட்ட அறிமுகம் செய்தோம் ..
ஆசிர்யர்கள்
"உங்கள் நண்பர்கள் நாங்க" என்றனர் ..
அப்படியா ?
மகிழ்ச்சியில் என் மனம் ...
முதல் இடை நிலை தேர்வுகள் ...
ஆசிரியரின் சுயரூபம்
தெரிந்தது ..ஆம்
பள்ளியில் கூட வீடுபாடம்
இல்லீங்க ....இங்கே பக்கம் பக்கமாய் ....
புதிய முகங்களில் சிலர் ...
ஆகினர் என் நண்பர்களாய் ...
சில நேரம் சண்டைகள் ...
நிறைய சந்தோசங்கள் ....
காலங்கள் சென்றன
கட கடவென !!!
கல்லூரியில்
சந்தோசமாய் கழிக்கும் இடம் ...
எங்க கான்டீன் தாங்க!!!
சாப்டனும் என்று இல்ல
அரட்டை சும்மா ...
சாப்பிட போனால் ...
எங்க ராசி
எதுவும் கிடைக்காது !!
ஆனந்த லஞ்ச் டைம் ---
ஆம் வித விதமாய் !!!
எல்லோர் உணவும்
எங்க உணவு தான் !!!
சந்தோசமாய் போன காலங்கள்...
.இதோ முடியும் நேரம் ...
எங்க ஜூனியர்ஸ் ...
எங்களை விரட்ட
ஏற்பாடு செய்த விழா !!!!
ம்ம்ம்ம் ..பேர்வெல் தாங்க !!!

மூன்று வருடம் சந்தோசமாய்
வாழ்ந்த ஒரு உலகினில் ...
கடைசியாய் வாழும் அந்த நாள் ...
எல்லோரும் மூழ்கினோம்
சோகத்தில் !!
சோகங்கள் ...
சந்தோசங்கள் ...
சண்டைகள் ..
வாழ்த்துக்கள் ...
போட்டிகள் ...
மன்னிப்புகள் ...
என வாழ்கையை கற்று தந்த அந்த காலம் ..

"கேட்டாலும் நினைத்தாலும் திரும்ப கிடைக்காதது "
9/20/10
ஹி ! ஹி ! கடி ஜோக்ஸ் !!!

கிரீம் பிஸ்கட்ல கிரீம் இருக்கும். ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்காது .
மின்னல பார்த்தா கண்ணு போயிரும் ஆனா மின்னல பாக்காட்ட மின்னல் போயிரும் .
லஞ்ச் பேக்ல லஞ்ச் எடுத்துட்டு போகலாம் ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல எடுத்துட்டு போக முடியாது.
மெழுகு வச்சு மெழுகு வத்தி செய்யலாம் ஆனா கொசுவ வச்சி கொசு பத்தி செய்ய முடியாது
பச்சை மிளகால பச்சை கலர் இருக்கும், ஆனா குடை மிளகால குடை இருக்காது.
9/18/10
ஏன் ??

நீயில்லாத வாழ்க்கை
வண்ணங்கள் இல்லாத
வானவில் போலானது --
எனக்கு !!!

மறக்கவே நினைத்தேன்
அன்று -- உன்னை !!!
இன்று நீ ..
நினைக்கவே மறுக்கிறாயா ??

ஒவ்வொரு நொடிகளையும்
உன் நினைவுகளால் கழிக்கிறேன் ......
. இன்று !!!
உன் நினைவுகளில்
ஒரு நொடியேனும்
என் நினைவுகள் ????

எல்லா அன்பையும் தந்தாய் !!!
என் இதயம் சுமை கண்டது ...
இன்று எல்லா அன்பையும்
பறித்தாய் ...
மேலும் சுமை கொண்டது !!
9/16/10
நினைவில் நனைகிறான்

ஷாம். ஒன்றாவது படிக்கும் துறுதுறு குழந்தை. ஸ்கூல் பாக் , லஞ்ச் பேகோடு அம்மாவுக்காக காத்திருந்தான். ச்சே ! என்ன அம்மா இது ! அப்பான்னா கரெக்டா வந்திடுவாங்க ! ஊருக்கு போயிருக்கும் அப்பா சீக்கிரம் வந்திடுவங்கன்னு அம்மா சொன்னாங்களே ! கொஞ்ச நேரம் போனது.
ஷாம். ஒன்றாவது படிக்கும் துறுதுறு குழந்தை. ஸ்கூல் பாக் , லஞ்ச் பேகோடு அம்மாவுக்காக காத்திருந்தான். ச்சே ! என்ன அம்மா இது ! அப்பான்னா கரெக்டா வந்திடுவாங்க ! ஊருக்கு போயிருக்கும் அப்பா சீக்கிரம் வந்திடுவங்கன்னு அம்மா சொன்னாங்களே ! கொஞ்ச நேரம் போனது.

ஷாம் தானாகவே வீட்டுக்கு கிளம்பி விட்டான். மழை வரும் போல் மேகம் இருந்தது. ஸ்கூல் க்கு வெளியே ஐஸ் கிரீம் கடை. ஷாமின் அப்பா அவ்வப்போது அவனுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பார். மலை பிரதேஷம் என்பதால் அப்பா அவனை நடந்து வந்துதான் கூப்பிட்டு உப்பு மூட்டை ஏற்றிக் கொண்டு கதை சொல்லிக் கூப்பிட்டுப் போவார். அவனும் ஐஸ் கிரீம் வாங்கிக் கொண்டான். கதை சொல்லத்தான் அப்பா இல்லை.
மழை லேசாகத் தூறியது. ஷாம் ஒரு கையில் லஞ்ச் பாக் , மறு கையில் ஐஸ் கிரீம் என்று நடக்கத் தொடங்கினான். மழைக்கு எங்காவது ஒதுங்கலாம் என்று நினைத்தான். சுற்றிலும் மரங்கள் மட்டுமே. மழை பெய்யும் போது மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என்று அப்பா சொன்னது ஞாபகம் வந்தது. கொஞ்சம் வேகமாய் நடக்கத் தொடங்கினான். கால் வலிக்கத் தொடங்கியது. ஷாமுக்கு அப்பாவின் உப்பு மூட்டை ஞாபகம் வந்தது .சே ! அப்பா வந்ததும் ஜாலியாய் உப்பு மூட்டை ஏறனும் என்றான் .

நடக்கும் போதே " கலைவாணி " தியட்டர் ..வந்தது ..நிறைய பேர் மழைக்கு ஒதங்கி இருந்தனர் .ஷாமும் ஒதுங்கினான் ." வேட்டைக்காரன் " விஜய் சாமை பார்த்து சிரிக்கிறான் .ஷாமும் சிரித்தான் .என்னவோ ஷாமுக்கு விஜய் என்றால் அவ்வளவு பிடிக்கும் .அப்பாவுக்கு சினிமா பிடிக்காது .விஜய் படம் என்றால் அப்பா கூட்டிட்டு போவர் .ஒரு கையில் ஐஸ் க்ரீம் .இன்னொரு கையில் பாப்கார்ன் என்று சாம் படம் பார்க்கும் அழகே தனி ...அப்பா வந்ததும் கண்டிப்பா வேட்டைக்காரன் பார்க்கணும் எப்று நினைத்து கொண்டான் மனதினில் ....
மழை கொஞ்சம் குறைந்தது ..ஷாமும் வீடிருக்கு கிளம்பினான் .அப்பாவின் நெருங்கிய நண்பர் சாமை பார்த்தார் ..சாம் வா ... நன் கொண்டு பொய் விடுகிறேன் என்றார் ..இல்லை அங்கிள் ..அப்பா யாரையும் தொந்தரவு பண்ண கூடாது என்ற சொல்லிருகாங்க ...அனால் ஒரே ஒரு உதவி பண்ணுங்க ...அப்பாவை சீக்கிரம் வர சொல்லுங்க என்று சொல்லி விட்டு போய் விட்டான்.

வீடு நெருங்கி விட்டது ..இந்த பூங்காவை தாண்டினால் போதும் ..ஷாமின் அப்பாவிருக்கு கிரிக்கெட் பிடிக்கும் ..அம்மா அப்பா ஷாம் மூவரும் இங்கே தான் கிரிக்கெட் விளையாடுவர் ..அப்பா வந்ததும் கிரிக்கெட் விளையாடனும் என்று மனதினில் நினைத்து கொண்டான் .
வீடு வந்து விட்டன் சாம் .அழகான குட்டி வீடு ..அதை சுற்றி தோட்டம் ..அதில் மழை பெய்தால் சாம் அப்பா இருவரும் ஆடும் ஆட்டமே தனி .எல்லோரும் சேர்ந்து மழையில் நனைந்து விளையாடுவர் . அதையும் நினைத்து கொண்டான் .

காலிங் பெல் அமுக்கினான். அம்மா நிர்மலா வந்தாள். என்ன அம்மா ! ஏன் சீக்கிரம் வரலை! மழை பெய்ததுடா! கொஞ்சம் லேட்டாக வரலாமென்று நினைத்தேன். ஏம்மா ! அப்பா இன்னைக்கு ஊரில் இருந்து வந்துடுவாங்களா ! கால் ரொம்ப வலிக்குதும்மா ! ஷாம் பாவமாய் அம்மாவைப் பார்த்தான். நிர்மலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆனால் சுவரில் மாட்டி இருந்த அப்பா " ரமேஷின் " போட்டோ மட்டும் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
ஆம் ! ஆபீஸ் வேலையை மும்பை சென்ற போது அங்கு நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் பலியான அப்பாவி மனிதர்களில் ரமேஷும் ஒருவன். இன்று அவனின் மகன் அனாதையாய் நிற்கிறான். ஊரே அறிந்த தன் அப்பாவின் மரணம் பாவம் இந்த பிஞ்சு குழந்தைக்கு தெரிய வில்லை
நிர்மலா அழுகையை அடக்க முடியாமல் " ஒ " வென அழத் தொடங்கினாள். கூடவே வெளியே மழையும் பெரிதாய் அழத் தொடங்கியது. அம்மாவின் அழுகை புரியாமல் ஷாம் மழையில் தன் அப்பாவின் நினைவுகளோடு விளையாட ஆரம்பித்தான்

காலம் தான் சொல்லும் இந்த பிஞ்சு மனதிற்கு பதில் ...
9/14/10
என் உயிர் உள்ள வரை !!
என்னை உணர்ந்த நாள்
உன்னை கண்ட முதல் நாள் !!!
என் நாட்கள் நகர மறுத்தன
உன்னை காணமல் ..
என் கண் பார்வை
உனக்காய் தவமிருந்தது ...
என் உலகமே உருமாறி
போனது ...உன் அன்பினால் ..
.நம் அன்பினை
நட்பென்று பெயர் சூட்டி கொண்டோம் ..
.பூவின் வாசத்தை தடுக்க
முடியுமா ?
நம் நட்பின் வாசம் காதலை பிறப்பித்தது..
யாருமே எட்ட முடியாத உயரத்தில் ...
ஆனந்த களி பாடினோம் ..
நீ அருகினில் இல்லாத நேரங்களில்
நம் நினைவுகள் தாலாட்டுகிறது //
நீயும் உன் நினைவுகளும்
என்னுடனே ....'என் உயிர் உள்ளவரை !!
9/10/10
தேங்காய் சாதம் !!
வடித்த சாதம் -- உதிரியாக ஒரு கப்
கடலை பருப்பு -- கொஞ்சம்
முந்திரி -- கொஞ்சம்
கிஸ்மிஸ் -- கொஞ்சம்
கருவேப்பிலை --கொஞ்சம்
காய்ந்த மிளகாய் --கொஞ்சம்
கடுகு , உளுந்த பருப்பு --கொஞ்சம்
தேங்காய் துருவல் - ஒரு கப்

செய்முறை :
- முதலில் கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கடுகு ,உளுந்த பருப்பு போட்டு தாளிக்கவும் .
- அடுத்து முந்திரி ,கிஸ்மிஸ் ,கருவேப்பிலை ,காய்ந்த மிளகாய் ,கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்
- பின்னர் தேங்காய் துருவலை நன்றாக வதக்கி ,,சாதம் சேர்த்து கிளறவும் .தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- சேர்த்து கிளறவும்
- சூடாக சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் நல்ல இருக்கும் ..
- சாதம் மீந்து போனால் இப்படி செய்து காலி பண்ணலாம்
9/9/10
தீவீரவாதம் !!
நேற்று ரஷ்யாவில் நடந்த ஒரு தற்கொலை படை சம்பவம் பற்றி அனைவரும் அறிந்திருப்போம் .காலையில் செய்தித்தாள் படிக்கும் போது அறிந்து கொண்டேன் .தீவீரவாதம் இப்போது மிகவும்
வருத்தப்பட வேண்டியுள்ளது என்னவென்றால் சம்பந்தமே இல்லாதவர்கள் தான் இதில் பலியாகின்றனர் .
நம் இந்தியாவில் நடந்த மும்பை சம்பவத்தில் கூட ஏராளமானோர் பலியானர் .ஏன் தான் இப்படி எல்லாம் பண்றங்களோ? யார் மீது வெறுப்போ அவர்களை மட்டும் பலி வாங்கலாம் தானே .சின்ன குழந்தைகள் எல்லாம் என்ன பாவம் பண்ணினார்கள் ? ஆனால் தீவரவாதிகளுக்கு தண்டனை சீக்கிரம் குடுக்கிறதும்இல்லை நம் இந்தியாவில் ..அவனை வைத்து நிறைய பேரை கண்டு பிடிக்கிறோம் என்று ..பிடித்த ஒருவனையும் தவற விட்டு விடுகின்றனர் .இன்னும் வருந்த வேண்டிய விஷயம் என்ன வென்றால் ..நம் ராணுவத்தில் அதிகாரிகளே நிறைய தகவல்களை வெளி ராணுவத்திற்கு விற்கின்றனர் ..இந்திய பணத்தில் தன் வயிறை நிறைத்து விட்டு ..உளவு சொல்லும் இவர்களை என்ன பண்றது ? இவர்கள் இருக்கும் வரை தீவரவாதம் ஒழியவே ஒழியாது !!
( இது பற்றி உங்க கருத்துகளை சொல்லுங்கள் ..)
9/7/10
மனிதனின் விலங்கு வாழ்க்கை !!
ரொம்ப வருடங்களுக்கு முன்பு கடவுள் ஒரு கழுதையை படைத்தார் . கடவுள் சொன்னார் " நீ கழுதையாக பிறப்பாய். காலை முதல் மாலை வரை உழைப்பாய் உனக்கு புத்தி கிடையாது. உன் ஆயுள் 50 வருடம்."
உடனே கழுதை சொன்னது "எல்லாம் சரி; ஆனால் எனக்கு ஆயுள் 20 வருடம் மட்டும் போதும். " கடவுளும் ஒப்புக் கொண்டார்.
அடுத்ததாக கடவுள் ஒரு நாயைப் படைத்தார். " நாயே நீ மனிதனையும் அவன் வீட்டையும் காவல் செய்வாய். அவன்
தரும் உணவையே நம்பி வாழ்வாய். உன் ஆயுள் 25 வருடங்கள். "
நாய் சொன்னது "எல்லாம் சரி கடவுளே ; ஆனால் எனக்கு ஆயுள் 10 வருடம் மட்டும் போதும்." கடவுளும் ஒப்புக் கொண்டார்.
அடுத்ததாக கடவுள் ஒரு குரங்கினை படைத்தார். " குரங்கே நீ அங்கும் இங்கும் தாவும் வாழ்க்கை வாழ்வாய்.
மக்களை குஷி படுத்துவாய். உன் ஆயுள் 20 வருடங்கள். "
குரங்கும் சொன்னது " எல்லாம் சரி கடவுளே; ஆனால் எனக்கு ஆயுள் 10 வருடம் மட்டும் போதும். "கடவுளும் ஒப்புக் கொண்டார்.
கடைசியாக கடவுள் ஒரு மனிதனை படைத்தார். அவனிடம் சொன்னார் " ஏய் மனிதா ! நீ மட்டுமே யோசிக்கும் தன்மை கொள்வாய் . உன் அறிவால் இந்த உலகை ஆள்வாய் . உனக்கு ஆயுள் 20 ஆண்டுகள்."
பேராசைக்கார மனிதன் தனக்கு கழுதை வேண்டாம் என்று சொன்ன 30 வருடங்கள், நாய் வேண்டாம் என்று சொன்ன 15 வருடங்கள், குரங்கு வேண்டாம் என்று சொன்ன 10 வருடங்கள் என்று எல்லோருடைய ஆயுளையும் கேட்டான்.
கடவுளும் ஒப்புக் கொண்டார்.
ஆக, அன்றில் இருந்து இன்று வரை மனிதன் தன்னுடைய ஆயுளில் முதல் 20 வருடம் சந்தோசமாக இருக்கிறான்.
அடுத்த 30 வருட கழுதையின் ஆயுளில் குடும்ப பொதியை சுமக்கிறான். அடுத்த 15 வருட நாயின் ஆயுளில் வளர்ந்த
தன் பிள்ளைகளின் பராமரிப்பில் அவர்கள் தருவதை சாப்பிட்டு வாழ்கிறான். அவன் தன் வயதான காலத்தில் , குரங்கின் 10 வருட ஆயுள் போல் பிள்ளைகள் மற்றும் பேரன்களின் வீடுகளுக்கு அலைந்து திரிந்து வாழ்க்கையை
கழிக்கிறான்.
எனவே, பேராசைக்கார மனிதன் தான் கேட்டு வாங்கிய ஆயுளில் , எல்லா விலங்குகளின் வாழ்க்கையும் வாழ்கிறான்.
பேராசை பெரும் நஷ்டம்.