ரொம்ப வருடங்களுக்கு முன்பு கடவுள் ஒரு கழுதையை படைத்தார் . கடவுள் சொன்னார் " நீ கழுதையாக பிறப்பாய். காலை முதல் மாலை வரை உழைப்பாய் உனக்கு புத்தி கிடையாது. உன் ஆயுள் 50 வருடம்."
உடனே கழுதை சொன்னது "எல்லாம் சரி; ஆனால் எனக்கு ஆயுள் 20 வருடம் மட்டும் போதும். " கடவுளும் ஒப்புக் கொண்டார்.
அடுத்ததாக கடவுள் ஒரு நாயைப் படைத்தார். " நாயே நீ மனிதனையும் அவன் வீட்டையும் காவல் செய்வாய். அவன்
தரும் உணவையே நம்பி வாழ்வாய். உன் ஆயுள் 25 வருடங்கள். "
நாய் சொன்னது "எல்லாம் சரி கடவுளே ; ஆனால் எனக்கு ஆயுள் 10 வருடம் மட்டும் போதும்." கடவுளும் ஒப்புக் கொண்டார்.
அடுத்ததாக கடவுள் ஒரு குரங்கினை படைத்தார். " குரங்கே நீ அங்கும் இங்கும் தாவும் வாழ்க்கை வாழ்வாய்.
மக்களை குஷி படுத்துவாய். உன் ஆயுள் 20 வருடங்கள். "
குரங்கும் சொன்னது " எல்லாம் சரி கடவுளே; ஆனால் எனக்கு ஆயுள் 10 வருடம் மட்டும் போதும். "கடவுளும் ஒப்புக் கொண்டார்.
கடைசியாக கடவுள் ஒரு மனிதனை படைத்தார். அவனிடம் சொன்னார் " ஏய் மனிதா ! நீ மட்டுமே யோசிக்கும் தன்மை கொள்வாய் . உன் அறிவால் இந்த உலகை ஆள்வாய் . உனக்கு ஆயுள் 20 ஆண்டுகள்."
பேராசைக்கார மனிதன் தனக்கு கழுதை வேண்டாம் என்று சொன்ன 30 வருடங்கள், நாய் வேண்டாம் என்று சொன்ன 15 வருடங்கள், குரங்கு வேண்டாம் என்று சொன்ன 10 வருடங்கள் என்று எல்லோருடைய ஆயுளையும் கேட்டான்.
கடவுளும் ஒப்புக் கொண்டார்.
ஆக, அன்றில் இருந்து இன்று வரை மனிதன் தன்னுடைய ஆயுளில் முதல் 20 வருடம் சந்தோசமாக இருக்கிறான்.
அடுத்த 30 வருட கழுதையின் ஆயுளில் குடும்ப பொதியை சுமக்கிறான். அடுத்த 15 வருட நாயின் ஆயுளில் வளர்ந்த
தன் பிள்ளைகளின் பராமரிப்பில் அவர்கள் தருவதை சாப்பிட்டு வாழ்கிறான். அவன் தன் வயதான காலத்தில் , குரங்கின் 10 வருட ஆயுள் போல் பிள்ளைகள் மற்றும் பேரன்களின் வீடுகளுக்கு அலைந்து திரிந்து வாழ்க்கையை
கழிக்கிறான்.
எனவே, பேராசைக்கார மனிதன் தான் கேட்டு வாங்கிய ஆயுளில் , எல்லா விலங்குகளின் வாழ்க்கையும் வாழ்கிறான்.
பேராசை பெரும் நஷ்டம்.
Excellent Mathi!
ReplyDeleteமனித வாழ்க்கையைப் புதிய கோணத்தில் சொல்லியிருக்ககீங்க.
வெரி நைஸ்! நான் மிகவும் ரசித்தேன்.
THANK U AKILA
ReplyDeleteam ur fan...
ReplyDelete