7/26/10

பெண்நிறைய கோபம்
கொஞ்சம் சண்டைகள்
அவள் நண்பர்களிடம் .....

கொஞ்சம் ஆசைகள்
நிறைய  பாசங்கள்
அவள்  சொந்தங்களிடம்

எதிர்பார்பே இல்லாத
காலங்களில் ...
எல்லாமே கிடைத்தது
எதிர்பாராமல் ......

எல்லாவற்றையும்  விட்டே
வருகிறாள் ....இன்னொரு
வீட்டிற்கு   மகாராணி ஆஹும் போது...

சில நேரம் கோபங்கள்
நிறைய நேரம் சண்டைகள் .....

நிறைய ஆசைகள் ...
சில மகிழ்ச்சிகள்...

இப்படியே போகும் அவளின்
பயணம் ...

சில நேரம்
சொல்வதுண்டு ..
பல நேரம்
சொல்லாமல் அழுவதுண்டு ...

எதையும் தங்குவாள்
தன் அன்பினால் !!!!!

7/14/10

நட்சத்திரம் ...இரவு பிச்சைக்காரியின்
ரவிக்கை பொத்தல்கள்!!!!

நிலா சிறுமி மார்கழி
நோன்பிற்கு
கோலம் போட
தப்பு தப்பாய்
வைத்த புள்ளிகள் !!!

காதலியை காணாது
தவித்து காதலன்
விட்ட கண்ணீர் துளிகள் .!!!....

7/13/10

மறக்கவே நினைக்கிறன்...உன்னை நினைக்கும் போது
என்னுள் கோடி பட்டாம் பூச்சிக்கள்
சிறகடித்து பறக்கின்றன ....
உன் பார்வையில்
என்னுள் கோடி பூக்கள்
மலர்கின்றன ....
உன்னை மறக்கவே
நினைக்கிறன்
மறந்தாலும் நினைக்கிறன்
எல்லாமே எனக்காய்  செய்தாய்
என்னை கேட்காமலே
என்னுள் வந்தாய்
ஏனோ !!
மனதை விட்டு செல்ல மறுக்கிறாய் !!!!

நிலா...

 

நிலவு என்பது தங்க தட்டு ....
விண்மீன்கள் வெள்ளி புள்ளிகள் !!!!
ஒரு தேவதை ...
வானம்  அதில் கோலம் போட
தங்கத்தட்டு கொண்டு வந்தாள்...
கதிரவன் காலையில் வர
காண வெட்கபட்டு
அதை அங்கேயே விட்டு சென்றாள்..
கோலம் முடியாமல் ...வெறும்
புள்ளிகளாகவே இருக்கின்றன !!!!

மீண்டும் !!!!!என்னை பிடிச்சிருக்கா
என்று நான் கேட்ட நாள்
வேண்டும் மீண்டும் !!!!

எனக்கு கொஞ்சம் டைம்
வேண்டும் என்று நீ
கேட்காத நாள் வேண்டும்
மீண்டும் !!!

என்னை ஆசையில்
தவிக்க விட்ட நாட்கள்
வேண்டும் மீண்டும் !!!

இருவரும் ஒரே பாட்டை
ரசித்த நாட்கள் வேண்டும்
மீண்டும்!!!

எனக்காக நீ அழுத நாட்கள்
வேண்டும் மீண்டும் !!!

என் கவிதைகளை நீ
ரசித்த நாட்கள் மீண்டும்
எனக்காய் வேண்டும் !!!

என் கனவுகளில்
என்னை தூங்க விடாமல்
நீ கொஞ்சிய நாட்கள்
வேண்டும் மீண்டும் !!!

காதல் வேதனை
அனுபவித்த நாட்கள்
வேண்டும் மீண்டும் ..

அன்பே !! உன்னை மீண்டும்
காதலிக்கும் உரிமை
எனக்கே வேண்டும் ...

ரிங் அடிக்கும் போன் அதை
நீயே எடுக்க வேண்டும்
என்று நான் தவித்த நாட்கள்
வேண்டும் மீண்டும் ...

பிறர் எடுத்தல் கட் செய்து
கோபத்தில் நான் மூட் அவுட்
ஆஹும் நாட்கள் வேண்டும்
மீண்டும்

உன் யதார்த்த பார்வையை கூட
காதல் பார்வையாய் நான்
கற்பனை செய்த நாள்
வேண்டும் மீண்டும் மீண்டும் !!!!

ஒரு நொடியேனும்!!!!பிரிவின் வலியை உன்னால்
உணர்ந்தேன் !!!
ஒரு நொடி கூட உன் நினைவுகள்
என்னை விட்டு செல்வதில்லை ....
ஏனோ நீ சென்றாய் ...
உன் வருகை அதையே என் மனம்
எதிர்பார்த்து காத்திருக்கிறது ...
உன்னை சந்தித்த அந்த கடைசி
நிமிடங்கள் என்னை கடக்க வில்லை
இன்னும் ....
உன்னை பார்த்த என் கண்கள் இன்னும்
தூங்க வில்லை ...
நீயும் இப்படி என்னை ஒரு
நொடியேனும் யோசிப்பாயா ?

நீயே சொல்லிவிடு .....உன் பெயரையே சுவாசிக்கிறேன்
தினமும் ....கோடி முறை ....
உன் கண்களையே  காண தவிக்கிறேன்
நீயோ தவிர்க்கிறாய் ....
என் ஆசைகள் எல்லாமே உனக்கு
வேடிக்கையாய் இருக்கிறது !!!
ஏதோ அலைகள் சொல்ல வந்து
சொல்லாமல் போவதை போல ...
என்னுடனே இருக்கிறேன் என்கிறாய்
இருந்தாலும் .உன் வார்த்தை ...
அதையே எதிர்பார்க்கிறது  என் மனம் !!!!
உன் மௌனம் அதை என் மனம்
அறியாது !!!!
சொல்ல நினைத்ததை சொல்லிவிடு ...

என்னில் நீ !!!!விடியலில் என் விழிப்பாய்.....
நீ !!!!
இரவில் என் தவிப்பாய் .....
நீ !!!!
உன்னை நினைக்கும்
ஒவ்வொவொரு நொடியிலும்
என் புன்னகையாய் நீ !!!!
உன்னை கடக்கும்
ஒவ்வொவொரு சாலையிலும்
என் பிறப்பிடமாய் நீ !!!!

இரவின் குரல்ஒரு நாள் இரவில் ....
வானத்தை பார்த்து அழுதேன்  .... ....
நட்சத்திரங்கள் எல்லாம் என்னை பார்த்து
சிரிக்கின்றன.....
என் வலியின் வேதனை புரியாமல் !!!!

7/12/10

100 மார்க்ஸ்!!!

 

ஒரு பையன  ரொம்பவே happy  ஆஹா வந்தான் ஸ்கூல் இல் இருந்து..

மகன்: அப்பா அப்பா .... நான் 100 மார்க்ஸ் வாங்கிட்டேன் பா...

அப்பா :ஒ அப்படியா ....ரொம்ப நல்லது ...உனக்கு என்ன வேணுமோ வாங்கி தருகிறேன் ...மார்க்ஸ் எல்லாம் சொல்லு பார்ப்போம்..

மகன் :அது வந்து ....அது வந்து ..

அப்பா :என்னடா இழுவை ...மேட்டர் கு வாடா ...

மகன் :தமிழ் ,கணக்கு, அறிவியல் ,இங்கிலீஷ் எல்லாம் சேர்த்து தான் பா  100

அப்பா :அதானே பார்த்தேன் ...ஒரு நிமிஷம் ஆடி போய்டேன் டா...

7/11/10

மறைக்க முடியாது....

அழகான சாலைகள் ...அங்கும் இங்குமாய் சில கடைகள் ...என்றிருந்தது அந்த ஊர் ..அதிலே கல்யாணம் ஆஹாத பெண்ணும் ஆணும் பேசிகொல்வதே பாவம் என்று என்னும் மனிதர்கள் ...அதிலே தப்பி பிறந்தனர்

மீனாவும் ரவியும் ..தினமும் இருவரும் பார்த்து கொள்வது வழக்கம் ..ஒரே நேரத்தில் இருவரும் வேலைக்கு

செல்வர்கள்.. ஒரே சாலையை ஒரே நேரத்தில் கடப்பார்கள்.. இப்படியே நிறைய வருடங்கள் ஓடி போனது ..

தினமும் இருவரின் மனதிலும் தோன்றும் ஒரு கேள்வி.. " இன்று அவனை பார்ப்போமா?/" இன்று அவளை பார்ப்போமா ? இருவரின் மனதும் நன்கு அறியும் ..ஒருவரை ஒருவர் என்ன நினைகிறார்கள் என்று ..

ரவியின் மனதில் சின்ன ஆசை தோன்றியது . எப்படியும் அவளை பேச வைக்கணும் என்று ..ஆம்.. இருவரும் பேசினதே கிடையாது ..வெறும்  பார்வைகள் தான் பேசின .ரவி ரொமவே யோசித்தான் ...

மறு நாள்.. மீனா வின் கண்களில் ரவி இல்லை .. துடித்து போனாள்...வலியை உணர்ந்தாள்.. நாட்கள் நகரவே  இல்லை....ஒரு வாரம் கழித்து ரவி அந்த சாலையில்.. மீனா விற்கு அழுகை  வரவில்லை ..கோபமே வந்தது .ரவியோ தான் நடத்திய தேர்விற்கு முடிவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறான் ...மீனா வேகமாக ரவியை நோக்கி வந்து ...ஏன்டா ஒரு வாரமாய் வரல ...என்ன ஆச்சு? உடம்பு சரி இல்லையா ரவி ? இப்போ சரி ஆஹிடுச்சா? என்று கேட்டுகிட்டே இருக்காள்..ரவி பேச வைத்து விட்டான்..மீனாவின் உண்மையான அன்பு வெளி வந்தது ...உணமையான அன்பை மறைக்கவே முடியாது ....

7/10/10

பிரட் பட்டர் டோஸ்ட்

தேவையானவை :

  • பிரட்

  • பட்டர்

  • சீனி  • முதலில் பிரட் இல் பட்டர் கொஞ்சம் add  பண்ணவும் ..

  • fry  pan  இல் வைத்து கொஞ்சம் டோஸ்ட் பண்ணவும் .

  • சீனி கொஞ்சம்  பட்டர் தடவின பகுதியில் தூவவும்.

  • திருப்பி விடவும்.உடனே எடுத்து விடவும் ..

  • பிரட் பட்டர் டோஸ்ட் ரெடி !!!!