தனக்கு கல்யாணம் என்றதுமே குமரேசன் தன் மனைவி ஒரு சினேகா அல்லது ஒரு தாமனா போல என்று கற்பனை பண்ணினான். இவனின் குணம் தெரிந்து கல்யாணம் அன்று மட்டுமே பெண்ணைக் காட்டினார்கள். குமரேசனின் கல்யாண கனவு எல்லாம் வீணாகப் போனது. செல்லம்மா " கோபுரங்கள் சாய்வதில்லை " " அருக்காணி " போல் இருந்தாள். இருந்தாலும் என்ன செய்ய ! கல்யாணமும் முடிந்தது. கல்யாணமானாலும், குமரேசன் செல்லமாளிடம் முகம் கொடுத்து பேசுவதே இல்லை. தினமும் ராத்திரி ஷோ படம் பார்த்து பார்த்து தன் கதாநாயகிகளுடன் குடும்பம் நடத்தினான். இதில் பெரிய கூத்து என்னவென்றால் தன் கனவுகளை தன் மனைவியிடமே சொல்லூவான். செல்லம்மா ஒன்றும் எதுவும் கூறுவதில்லை. அவளும் இந்த கிறுக்கு மாமாவுக்கு தன்னை விட்டால் வேறு எவளும் கிடைக்க மாட்டாள் என்று சிரித்துக் கொள்வாள்.
இப்போது ! "விண்ணை தாண்டி வருவாயா " திரிஷாவை பாக்க இன்று நாற்பதாவது தடவை போகிறார் இந்த நாற்பது வயது குமரேசன். படம் வந்தும் நாற்பது நாள் தான் ஆகிறது. இப்பல்லாம் தினமும் இரவு திரிஷா முகம் தான் இவர் கனவில் . இன்றும் வழக்கம் போல் தூங்க தொடங்கினர் குமரேசன்!
அடுத்த நாள் அவரின் முகம் ரொம்ப வாட்டமாய் இருந்தது. செல்லம்மாளுக்கு புரியவே இல்லை. ஆபீஸ் போனதும் குமரேசன் தன் கனவை வழக்கம் போல் சொல்லுவான் என்று நண்பர்கள் பார்த்தார்கள். குமரேசனும் சொன்னான் - வழக்கம் போல் கனவு வந்துச்சு. ஆனால் எந்த கதாநாயகி என்று தான் தெரிய வில்லை. ரொம்ப பழகிய முகம். ஆனால் நினைவுக்கே வரவில்லை எனக்கு என்றார். எல்லாரும் அவரை பாவமாய் பார்த்தார்கள். குமரேசன் நாள் முழுவதும் அந்த முகத்தையே யோசித்தார்.
சாயங்காலம் குமரேசன் வீட்டுக்கு போனார். எதிரே செல்லம்மா வந்தாள். குமரேசன் அப்பாவியாய் அவளிடமே தன் கனவை சொல்லி யாராக இருக்கும் என்றார். செல்லமாவுக்கு வந்ததே பாருங்க கோபம். அவரை ஒரு மேலும் கீழுமாய் பார்த்தாள்..சிரிப்பதா அழுவதா இல்லை அவனை போட்டு மிதிப்பதா என்று தெரிய வில்லை.ஏன் என்றால் அவன் கூறிய அடையாளங்களை வைத்து பார்க்கும் பொது கனவில் வந்ததோ அவளின் முகம் தான் ..சினிமா நடிகைகள் முகம் பார்த்து சலித்து போன அவனுக்கு தன் மனைவியின் முகம் வந்திருக்கு ..அவள் சந்தோஷத்தில் .." மாமா என் முகமா என்று பாருங்க " என்றாள் ..குமரேசனுக்கு தன் கனவில் யார் வந்தாள் என்று தெரிந்ததில் சந்தோசம் .மனைவிக்கு கணவனின் கனவில் ஒரு நாளேனும் வந்தாச்சு என்பதில் சந்தோசம் ...குமரேசன் அன்று முதல் தன் மனைவியை நேசிக்க தொடங்கினான் செல்லமாவின் நீண்ட நாள் பொறுமைக்கு பதில் கிடைத்தது ...கனவில் எப்போவுமே செல்லம்மா தான் !!! ( வடை போச்சே என்று அவர் ஏங்கின நாட்கள் நமக்கு எங்கே தெரிய போகுது )
me the first..
ReplyDeletevadai enakkey
என்னே ஒரு கற்பனை வளம்
ReplyDeleteஅட அட ஒரு புது எழுத்தாளர்
நாம பதிவு உலகத்துக்கு கிடைத்துவிட்டாங்க
"வளரும் கற்பனை கவிதை"
என்கிற பட்டத்தை
"வழங்கி வாழ்த்துகிறோம்"
இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க.. நல்லா சொல்லியிருக்கீங்க..
ReplyDeleteகதையும் நல்லா வந்திருக்கு..
மொத்தமா திரிஷா, சினேகா, தமன்னா & சுஹாசினி (அருக்கானி) எல்லோரையும் டச் பண்ணிட்டீங்க... படம் சூப்பர்...சினேகா படமும் போட்டு இருந்தா ஹிட்ஸ் எகிறி இருக்கும்
ReplyDeleteஅட டா ஒரு நாற்ப்பது வயசுகாரர் வைத்து ஒரு நல்ல கதை தனக்கு வரபோகும் மனைவி சினிமாகாரி மாதரி இருக்க வேண்டும் என்று கனவு காண்பவர்கள் பல பேர்....நல்ல தெளிவான முடிவு....
ReplyDelete//தன் இளம் வயதில் சினிமாவில் போல் தன்னை யாராவது காதலிப்பார்கள் என்று முயற்சிகள் செய்தது தொடர் தோல்விகளை மட்டுமே வெற்றியாக பெற்ற போராளி. //
ReplyDeleteஅடடா .!!
ரொம்ப கலக்கலான கதை அக்கா .!
ReplyDeleteஉண்மைலேயே ரொம்ப பிடிச்சிருக்கு ..
இதே மாதிரி எழுதுங்க ..! உங்க எழுத்து நடை நல்லா இருக்கு ..
முடிவும் சூப்பர் ..!!
siva said...
ReplyDeleteஎன்னே ஒரு கற்பனை வளம்
அட அட ஒரு புது எழுத்தாளர்
நாம பதிவு உலகத்துக்கு கிடைத்துவிட்டாங்க
"வளரும் கற்பனை கவிதை"
என்கிற பட்டத்தை
"வழங்கி வாழ்த்துகிறோம்
சிவா !!! பட்டம் எல்லாம் வேண்டாம் ..பறந்துவிடும் ..உங்கள் வருகை போதும்
//வெறும்பய said...
ReplyDeleteஇந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க.. நல்லா சொல்லியிருக்கீங்க..
கதையும் நல்லா வந்திருக்கு.//
நன்றி உங்கள் கருத்துகளுக்கு !!!
//அருண் பிரசாத் said...
ReplyDeleteமொத்தமா திரிஷா, சினேகா, தமன்னா & சுஹாசினி (அருக்கானி) எல்லோரையும் டச் பண்ணிட்டீங்க... படம் சூப்பர்...சினேகா படமும் போட்டு இருந்தா ஹிட்ஸ் எகிறி இருக்கும்//
உங்கள் வருகையில் மகிழ்ச்சி !!
சினேகா ரொம்ப பிடிக்குமோ ??
//அட டா ஒரு நாற்ப்பது வயசுகாரர் வைத்து ஒரு நல்ல கதை தனக்கு வரபோகும் மனைவி சினிமாகாரி மாதரி இருக்க வேண்டும் என்று கனவு காண்பவர்கள் பல பேர்....நல்ல தெளிவான முடிவு....//
ReplyDeleteநன்றி சௌந்தர் !!
//கோமாளி செல்வா said...
ReplyDeleteரொம்ப கலக்கலான கதை அக்கா .!
உண்மைலேயே ரொம்ப பிடிச்சிருக்கு ..
இதே மாதிரி எழுதுங்க ..! உங்க எழுத்து நடை நல்லா இருக்கு ..
முடிவும் சூப்பர் ..//
நன்றி செல்வா !!.
கதை நல்லா இருக்குங்க.. வெள்ளித்திரை எல்லாம் பார்க்க மட்டும் தான்னு..
ReplyDeleteநிகழ்கால வாழ்வுக்கு வந்த குமரேசன்.. ஒரு ஹீரோ தான் :-)))
உங்கள் எழுத்து நடை - நல்லா இருக்குதுங்க... பாராட்டுக்கள்!
ReplyDelete