11/27/10

மெகா சீரியலும் நம் மக்களும் !!!
அயோ !!! எதோ கருகிறே வாசம் வருதே !!! என்று மகன் சொல்ல அம்மா அதை கூட கண்டு கொள்ளாமல் 
எங்கேயோ மூழ்கிக்கொண்டு  இருந்தார் ..எங்கு தெரியுமா மெகா சீரியல் என்னும் மெகா கடலில் !!!
இன்று மெகா சீரியல் பார்க்காமல் இருபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .. அந்த ஒரு சிலரில் நானும் ..கொஞ்சம் ஓவர் அஹ தான் இருக்கோ ? .நானும் பார்த்திருக்கேன் சீரியல் ...சித்தி ,மெட்டி ஒலி என்று வெறுத்து போய்  விட்டு விட்டேன் 
சின்ன பிள்ளைகள் கூட மெகா சீரியல் பார்கிறாங்க ..நிறைய காட்சிகள் அருவருக்க வைக்கின்றன .மயங்கி விழுந்தாலே கர்ப்பம் தான்  என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொண்ணுக்கு கூட  தெரியுது .


மேலும் முந்தைய காலத்தில் எல்லாம்  பிரெஷ்  அக  சமையல் எல்லாம் செய்தாங்க .. அந்த மைக்ரோ வாவ்  யாரு கண்டு பிடிச்சாங்களோ ....அதில் இருந்து சூடு பண்றது ஈசி யா போச்சு ...
அடுத்து மெகா சீரியல் பத்தி சொல்லணும்னா நிறைய பேருக்கு ரெண்டு மனைவி இருப்பாங்க..இல்லனா ரெண்டு புருஷன் இருபங்க  

இதை விட கொடுமை என்னன்னா ? முதல் மனைவியின் பொண்ணுக்கு சித்தி யை தான் ரொம்ப பிடிக்குமாம் .என்ன கொடுமை டா சாமி ? அது போல விஷம் வைக்கிறது ...பில்லி சூனியம் வைக்கிறது எல்லாமே சொல்லி கொடுகிரங்க.

ஒரு நடிகர் நடிகையின் கால் சீட்  கிடைக்கலனா அவங்களை கொன்று விடுவாங்க தெரயுமா? ஒரே நடிகையே நிறைய சீரியல் இல் வருவதால்  எங்க பாட்டி குழம்பி போய் இருபங்க சில நேரங்களில் ...
இவ ஏன் இங்கே வந்திருக்க என்று ..

இப்படி நிறைய பேர் மனதில் நீங்க இடம் பிடித்து .கொண்டு இருக்கிறது ..அதனால் எதுவுமே பயன் இல்ல ...மனம் நிம்மதியாக இருக்க தான் டிவி  பார்க்கிறோம் ..பார்ப்பதனால் நிறைய கேட்ட எண்ணங்களே மனதில் தோன்றுகின்றன என்பதை  மறுக்கவே முடியாது ...


அடுத்து ஒரு நிகழ்ச்சி .." நடந்தது என்ன ? " ..நிறைய நல்ல தொகுப்புகள் இருக்கின்றன சில வேளையில்...பேய் ஆவி போன்ற நிகழ்ச்சிகளை இரவு நேரங்களில் தவிர்க்கலாம் இல்லையா ? 

எனக்கு பிடித்த நிகழ்ச்சி என்று சொன்னால் " airtel   சூப்பர் சிங்கர் தான் .மனதை மயக்கும் பாடல்கள் ...நல்ல அறிவுரைகள் படுவர்களுக்கு ...எனக்கு பிடித்தால் அதை பார்க்க சொல்லவில்லை ...இருந்தாலும் ரிலக்ஸ் பண்ணும் நிகழ்சிகளை  பார்க்கலாம் .சீரியல் இல் அவங்களும் அலுரங்க ..நம்மளும் அழ வைகிரங்க..தேவையா ???

.

4 comments:

 1. டிவி ல எனக்கு பிடிக்காத டிவி சன் டிவி ..

  அதுவும் எந்த செல்வி மெகா மோசம்..

  பல குடும்பங்களை சீரழிப்பதில்

  மிக முக்கிய பங்கு வகிக்கிறது

  நல்ல அலசல்.

  ReplyDelete
 2. நல்லா இருக்கு அக்கா .,
  அதிலும் இந்த தொடர் நானும் ஒரு சிலது பார்த்திருக்கிறேன் .,
  அதுல என்ன அப்படின்னு பர்தா இதுல இருக்குரவன்களே அதுலயும் வருவாங்க , செம குழப்பம் ஆகிடும் .. அப்புறம் எல்லா நாடகதிலுமே குடும்பத்த கெடுக்கறதுதான் மெயின் கதையே .. இவுங்கள திருத்தவே முடியாதா ..?

  ReplyDelete
 3. சரியா சொன்னிங்க மயக்கம் வந்தால் கர்பம் உடனே அந்த கற்பதை கலைப்பது போல ஒரு காட்சி எல்லா கெட்ட விஷயமும் சீரியலில் வீட்டுகுள்ளே நடக்குது எனக்கும் சூப்பர் சிங்கர் தான் பிடிக்கும்

  ReplyDelete
 4. அடுத்து ஒரு நிகழ்ச்சி .." நடந்தது என்ன ? " ..நிறைய நல்ல தொகுப்புகள் இருக்கின்றன சில வேளையில்...பேய் ஆவி போன்ற நிகழ்ச்சிகளை இரவு நேரங்களில் தவிர்க்கலாம் இல்லையா ? ////

  ஏன் பயமா இருக்கா....?

  ReplyDelete