9/21/10

கிடைக்குமா ??



கல்லூரியின்  முதல் நாள் ...

பிறந்த வீட்டை விட்டு

புகுந்த வீடிற்குள்

நுழைந்ததை போல் உணர்வு !!!

புதிய புதிய முகங்கள் ...

பழகிய முகத்தை தேடின

என் விழிகள் !!!

ஏங்கியது என் மனம் ....

பள்ளியில் பழகிய சிநேகங்கள்

யாரேனும் உண்டா

புதிய் இடம் ...

காட்டிற்குள் விட்டது

போல பயம்!!!

கல்லூரி முதல்வரின்

முதல் உரை ..

ஏகப்பட்ட அறிவுரைகள் ...பள்ளிக்கே  ஓடிடலாம

என எண்ணங்கள்

ஓடின மனதினில் !!!

தனக்கென எழுதப்பட்ட

உரையை முடித்தார் ...முதல்வர் !!!

வகுப்பறைக்கு சென்றேன் ....

சற்றே பள்ளியை விட

அழகாய் இருக்க...

கொஞ்சம் மகிழ்ந்தது

என் மனம் !!!

தனிப்பட்ட அறிமுகம் செய்தோம் ..

ஆசிர்யர்கள்

"உங்கள் நண்பர்கள் நாங்க" என்றனர் ..

அப்படியா ?

மகிழ்ச்சியில் என் மனம் ...

முதல் இடை நிலை தேர்வுகள் ...

ஆசிரியரின் சுயரூபம்

தெரிந்தது ..ஆம்

பள்ளியில் கூட வீடுபாடம்

இல்லீங்க ....இங்கே பக்கம் பக்கமாய் ....

புதிய முகங்களில் சிலர் ...

ஆகினர் என் நண்பர்களாய் ...

சில நேரம் சண்டைகள் ...

நிறைய சந்தோசங்கள் ....

காலங்கள் சென்றன

கட கடவென !!!

கல்லூரியில்

சந்தோசமாய் கழிக்கும் இடம் ...

எங்க கான்டீன் தாங்க!!!

சாப்டனும் என்று இல்ல

அரட்டை சும்மா ...

சாப்பிட போனால் ...

எங்க ராசி

எதுவும் கிடைக்காது !!

ஆனந்த லஞ்ச் டைம் ---

ஆம் வித விதமாய் !!!

எல்லோர் உணவும்

எங்க உணவு தான் !!!

சந்தோசமாய் போன காலங்கள்...

.இதோ முடியும் நேரம் ...

எங்க ஜூனியர்ஸ் ...

எங்களை விரட்ட

ஏற்பாடு செய்த விழா !!!!

ம்ம்ம்ம் ..பேர்வெல் தாங்க !!!



மூன்று வருடம் சந்தோசமாய்

வாழ்ந்த ஒரு உலகினில் ...

கடைசியாய் வாழும் அந்த நாள் ...

எல்லோரும் மூழ்கினோம்

சோகத்தில் !!

சோகங்கள் ...

சந்தோசங்கள் ...

சண்டைகள் ..

வாழ்த்துக்கள் ...

போட்டிகள் ...

மன்னிப்புகள் ...

என வாழ்கையை கற்று தந்த அந்த காலம் ..



"கேட்டாலும் நினைத்தாலும் திரும்ப கிடைக்காதது "

3 comments:

  1. இந்த கவிதை என்னக்கு என்னோட கல்லுரி நாட்களை நினைவு படுத்துது.. எல்லோரும் இதே தான் நினைப்பாங்கன்னு நினைக்கறேன்.நல்ல இருக்கு.

    ReplyDelete
  2. very nice to c this.i'm really proud to be ur friend.keep it up.

    ReplyDelete