என் மகளின் வயதில் நான் இல்ல விட்டாலும் ....
என் மகள் கூட விளையாடும் போது நானும் சின்ன குழந்தை தான் .என் மகளுக்கும் எனக்கும் ...நிறைய நேரங்களில் சண்டை தான் .செல்ல கோபங்கள். சாப்பிட மிகவும் அடம் தான் ..சாப்பிடாமல் விட மனம் கேட்காது .அப்படி இருக்க ஒரு யோசனை வந்தது ..என்ன பண்ணலாம் ??சின்ன பிள்ளைகளை கை ஆள்வது மிகவும் கஷ்டம் என்றே எண்ணி இருந்தேன் .ஆனால் நிறைய ஐடியா இருக்கு.அவங்களை நம் வசம் கொண்டு வர .
அவர்களை மிரட்டினால் சொன்னதை கேட்கவே மாட்டங்க.அவங்க போக்கில் தான் சொல்லணும் ..அதாவது கொஞ்சம் ஐஸ் வைக்கணும் ..நீ குட்டி பிள்ளையில் இப்படி பண்ணுவே ...அப்படி பண்ணுவே என்று சொன்னால் நாம் காரியம் சாதிக்கலாம் .
இப்படி நிறைய முறை என் மகளை என் வசம் கொண்டு வந்திருக்கேன் .குறிப்பாக அவர்களின் சிறு வயதில் உள்ள புகை படங்களை காட்டலாம் ..அவங்க பண்ணினே குறும்புகளை சொல்லலாம் . சொன்னதையே திருப்பி திருப்பி வேற சொல்ல வேண்டியது வரும் .நமக்கு வேண்டியது சாப்பாடு உள்ளே போகணும் .அவ்வளவு தானே ..சில நேரங்களில் எனக்கே போர் அடிப்பதுண்டு .இருந்தாலும் சொல்லுவேன் ..
இன்னொரு விஷயம் ...குழந்தைகளிடம் நிறைய பாசங்கள் இருக்கும் .அது வெளிபடையாக தெரியாது ..ஆனால் வெளிப்படும் நேரம் வெளிப்படும் ..குழந்தைகள் காய்ச்சலில் படுத்தால் நான் பார்த்து கொள்கிறேன் .நான் காய்ச்சலில் இருக்கும் போது அவள் கண்களில் உள்ள வருத்தம் நான் அறிவேன் .
பாசம் கட்டும் இடத்தில கோபமும் வந்து விடுகிறது .நான் சோர்வாக இருக்கும் நேரங்களில் சேட்டை பண்ணும் போது அடித்து விடுகிறேன்
பின்னர் அழுதுகொண்டே தூங்கும் அவளை கொண்டு நானும் அழுகிறேன் .இப்படி தானே என்னையும் என் அம்மா வளர்த்திருப்பார்கள் .
ஒவ்வொவொரு முறை அவள் செய்யும் சேட்டையையும் ரசிக்க கற்று கொள்கிறேன் ...இதை ரசிக்க கடவுள் எனக்கு வாய்பளிதிருகிறார் என்றே !!! என் செல்ல மம்மி!!! என்று அவள் சொல்லும் போது கிடைக்கும் சந்தோசதிருக்கு அளவே கிடையாது !!!
மழலை ஒன்று
இருந்தால் ....
எந்த பாலைவனமும்
சோலை வனம் தான் !!!
குழந்தைகளின் உலகம் பெரியவர்களுக்கு விசித்திரமானது. ஆனால் அவர்கள் உலகம் தான் வாழ்வதற்கு உண்மையானது.
ReplyDeleteகுழந்தைகளின் உலகத்துக்கே நாமும் சென்றுவிட்டால் அதை விட்டு வெளியே வர யாருக்கும் மனமிருக்காது.
Sindhu... Smart & cute baby!
dont know what to say..
ReplyDeletegreat feel..
i like this post much..
keep on rocking..(very natural)
அழுதுகொண்டே தூங்கும் அவளை கொண்டு நானும் அழுகிறேன் .இப்படி தானே என்னையும் என் அம்மா வளர்த்திருப்பார்கள் .--touching heart..nice to read it
ReplyDeleteஇப்போது உள்ள குழந்தைகளை நாம் மிரட்டினால் வேலை ஆகாது அந்த குழந்தையும் திருப்பி மிரட்டுகிறது அன்பா சொல்லணும் நீங்கள் சொல்வது போல பழைய போட்டோவை எடுத்து வைத்து கொண்டு அங்க பார் அவ தான் good girl என்று எல்லாம் சொல்லவேண்டியது வரும்...அவர்களின் குறும்பு சேட்டையும் ரசிக்கும் படியாக இருக்கும் என்ன கவலை இருந்தாலும் அவர்கள் செய்யும் குறும்பு மறக்க வைத்து விடும்.
ReplyDelete//மழலை ஒன்று
ReplyDeleteஇருந்தால் ....
எந்த பாலைவனமும்
சோலை வனம் தான் !!!//......100% உண்மை!
பொண்ணு க்யூட்டா இருக்காங்க!