12/31/10

HAPPY NEW YEAR !!



எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !!! நம் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களும் சந்தோசங்களும் அவ்வபோது வந்து வந்து போகும் ..கடந்த வருடங்களில் நடந்த கஷ்டங்களை எல்லாம் தூக்கி போட்டு விட்டு வரும் புது வருடத்தை இனிதாய் ... மகிழ்ச்சியாய் வரவேற்போம் !!! எல்லோரும் ஏதாவது பழக்க வழக்கங்களை மாற்ற RESOLUTION     எடுப்பார்கள் ..அப்படி எதோ ஒன்று எடுப்போம்..அதை கடை பிடிப்போம் .இந்த புது வருஷத்தில் நம் ஆடம்பரமாக கொண்டாடினாலும் ..யாரோ ஒரு ஏழை பிள்ளைக்கு இனிப்பு வாங்கி கொடுத்தால் அதன் மகிழ்ச்சியில் நம் புத்தாண்டு இனிதாய் பிறக்கும் .. என்னை மிகவும் மாற்றிய ஒரு சின்ன தத்துவம் .அதை எல்லோருடனும் பகிர விரும்புகிறேன் ..



" விட்டு கொடுபவர்கள் கெட்டு போவதில்லை !!!
 கெட்டுபோபவர்கள்  விட்டு கொடுப்பதில்லை !!! "


நான் இதை  பின்பற்ற போகிறேன் ....நீங்க ?



12/28/10

மார்கழி மாதம் !!

இது மார்கழி மாதம்!!  நாம் எல்லோருக்கும் தெரியும் ..எனக்கு  என்னவோ இந்த மாதத்தை கொஞ்சம் கூட  பிடிக்காது . ஏன் என்றால் ..சீக்கிரமே எழும்பி கோலம்  போடணுமே ... இந்த மார்கழி மாதம்  பஜனைகள், அழகு கலர் கோலங்கள் என   கிராமங்களில் நன்றாக பின்பற்றுவார்கள்..
 
என்னுடைய பாட்டி வீடு இருந்தது ஒரு கிராமம் .அங்கு அதிகமாக கிறிஸ்துமஸ் 
விடுமுறயில் தான் அதிகமாக   செல்வது வழக்கம் .அந்த மாதிரி  விடுமுறையில் தான் காலையில் கொஞ்ச அதிக நேரம் தூங்க முடியும்  ஆனாலும்  தூங்கவே விட மாட்டங்க .காலையில் நாம் தூங்கினாலும் அந்த பஜனை   சத்தத்தில் தூக்கமும் வராது.
 
ஆனால் மெல்லிய ஓசையுடன் கூடிய அந்த சத்தம்  இனிமையாக இருக்கும். அந்த சத்தத்தில் தூக்கம் கலைந்து பார்த்தால் என்னுடைய அத்தை  கோலம் போட்டு கொண்டு இருப்பாங்க .. எனக்கும் ஆசையா இருக்கும் ..ஆனால் சின்ன பிள்ளை நீ எல்லாம் போட கூடாது  என்று சொல்லிடுவாங்க . உள்ளுக்குள்ளே திட்டி கொண்டு பாட்டி கிட்டே போய் புகார் சொல்லிடுவேன் . அடுத்து எனக்கு என்று கொஞ்சம் கோல மாவு கொடுத்து ஒரு ஓரமாக கோலம் போட சொல்லுவாங்க .. எதோ பெரிய வெற்றி கிடைத்த சந்தோசம்  மனதில் இருக்கும் ..ஆனால் கோலம் என்னவோ ஒரு மாதிரி தான் இருக்கும் ...சின்ன பிள்ளைக்கு அவ்ளோ தான் தெரியும் .
 
இதெல்லாம் நடந்தது எனது ஐந்தாம் வகுப்பில் ...அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புத்தகத்தில் வரைந்து பழகினேன் .. எங்க வீட்டில் வீடு முற்றத்தில் போட்டு பழகுவேன் ..ஒரு பத்தாம் வகுப்பில் ஓரளவிற்கு கோலம் போல வந்தது .அடுத்து அழகாக வரும் கல்லூரி படிக்கும் போது . ஆனால் நிறைய சோம்பேறி தனம் எனக்குள் வந்து விட்டது .எங்க அம்மா என்னை கொஞ்சம் கோலம் போட்டு வாம்மா !! என்று ..எப்படி ??? என்னை வேண்டாம் என்று சொல்வீங்க ..இப்போ மட்டும் ஏன் என்னை எழுப்றீங்க என்று நான் கேட்ட நாட்கள் இப்போ என் கண் முன்னே !!
 
அப்போ எங்க வீடில் முற்றம் பெரியது .எவ்ளோ பெரிய கோலம் என்றாலும் போடலாம் .ஆனால் போட விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறேன் ..இப்போ எங்கே இந்த காலத்தில் எல்லாம் இருக்கவே இடம் இல்லை .இதில் கோலத்திற்கா ? என்று கேட்கிறாங்க ?
 
இந்த கோலம் போடுவதில் நிறைய மருத்துவ குறிப்புகள் இருக்குது .காலையில் சுத்தமான காற்று !! சுவாசிப்பதால் நல்ல ஆரோக்கியம் ..அடுத்து கோலம் குனிந்து  போடுவாங்க அந்த காலத்தில் எல்லாம் .அது ஒரு உடற்பயிற்சி போல ..இப்போ எல்லாம் ஸ்டூல் ,முக்காலி  போன்றவை கொண்டு போடுறாங்க .(நானும்  தான் ) ..இடமா பற்றி சொல்லிக்கிட்டு இருந்தேன் ..
 
இப்போ எல்லாமே பிளாட் என்பதால் ..அடுத்த வீடுக்கும் பக்கத்துக்கு வீடுக்கும் கொஞ்சம் தான் தூரமே ..அதில் எங்கு கோலம் போடறது.. அதனால் இப்போ ஆசை நிறைய இருக்கு கோலம் அழகாய் போட ..ஆனால் இடம் இல்லை ..அப்போ இடம் இருந்தது ..ஆசை இல்லை !! விஜய் வசனம் மாதிரி இருந்தால் அடிக்காதீங்க ...இருந்தாலும் அப்போ அப்போ கோலம் போடுவேன் .கோலங்கள் சில ..உங்கள் பார்வைக்கு !!!


இது நான் கார்த்திகை அன்று போட்ட கோலம் !!




இது   நான்  தீபாவளிக்கு  போட்டது ...




12/24/10

MERRY MERRY CHRISTMAS !!!




எல்லோருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் !!!


12/18/10

TOP 10 SONGS !!! 2010 .

இந்த 2010      இப்போ தான் தொடங்கின மாதிரி இருந்தது .இப்போ தான் ஹாப்பி நியூ இயர் !!! சொன்னோம் .அதுக்குள்ளே அடுத்த வருஷம் ..சொல்லபோன இந்த பிளாக்கர் பத்தி தெரிந்து ஒரு வருஷம் என்று  கூட  சொல்லலாம் 
எவ்ளோ வலை பக்கங்கள் படித்திருக்கிறேன் .நிறைய செய்திகள் அறிந்திருக்கிறேன் .இப்போ அதிகம் வலைபக்கங்களில்  பெண் குரலை பத்தி படித்தேன் .நிறைய பாடல்கள் தெரியா வந்தது ..இந்த வருடத்தில் வந்த பாடல்களை கொஞ்சம் அலசலாமே எல்லோரும் என்று தோனுச்சு .அதான் இந்த பதிவு ..இசை நம் எல்லோரிடம் ஊறி போனது என்றே சொல்லுவேன் .காலையில் வேலை பார்க்கும் போது பாடல்கள் பின்னாடி படித்தால் சீக்கிரமாய் வேலை முடியும் ..கல்லூரி காலங்களில்  தேர்வு நேரங்களில் பாடல்கள் கேட்டுகொண்டே படிப்பது வழக்கம்
.இந்த ஒரு வருஷத்தில் எவ்ளோ சந்தோசங்களை  கடந்திருக்கலாம் ..சோகங்களை கூடவும் ..
சந்தோசம் என்றாலும் சரி ...சோகம் என்றாலும் சரி நாம் எல்லோருமே இசை கேட்க விரும்புவோம் இல்லையா ? இசையை யாரும் வெறுப்பதாய் தெரியவில்லை..இந்த வருடத்தில் நிறைய படங்கள் வெளியாகின ..அதில் எனக்கு பிடிச்ச பத்து பாடல்களை சொல்கிறேன் .பின்னாடி இருந்து போகலாம் சரியா ??




10 . நாணயம் : ( பிரசன்னா நடித்தது ..பாடியவர் : S .P .B , சித்ரா ) 
------------------------- 



நான் போகிறேன் மேலே மேலே ...


9 . சுறா :( தலைவர் விஜய் ஆடி கலக்கியது )
-----------------


நாம் நடந்தால் அதிரடி ...

8 .  சிங்கம் :( சூர்யா ,அனுஷ்கா )
-------------------

என் இதயம் இதுவரை துடித்ததில்லை ....

7 ..அங்காடி தெரு :( புது முகங்கள் வாழ்ந்த ஒரு படம் )
-----------------------------



அவள் அப்படி ஒன்றும் அழகில்லை .....


6 . கோவா :( ஏர்டெல் சூப்பர் சிங்கர் இல் வெற்றி பெற்ற அஜீஸ் பாடியது ) 
----------------------



இதுவரை இல்லாத  உணர்விது....இதயத்தில் உண்டான கனவிது ...


5 .   மெட்ராஸ்பட்டினம் : ( ஆர்யா )
-----------------------------------

பூக்கள் போகும் தருணம் ...ஆருயிரே பார்த்த தாரும் இல்லையே ....
    

4 .   மாஸ்கோவின் காவேரி ...( படம் ஹிட் இல்லை... ஆனாலும் சுசி வாய்ஸ் சூப்பர் )
--------------------------------------------



கோரே கோரே ...



3 . பையா :( கார்த்தி செமயா இருப்பர் இந்த பாடல் இல் ...யுவன் குரல் அருமை )
-------------------




என் காதல் சொல்ல நேரம் இல்லை... 

2 .    எந்திரன் .( சூப்பர் ஸ்டார் ..டான்ஸ் அருமை ...)
---------------------


கிளிமஞ்சாரோ ...

1  . விண்ணை தாண்டி வருவாயா :
---------------------------------------------------------




இந்த படம் பற்றி சொல்லியே ஆகணும் .படத்திருக்கு முக்கிய காரணம் இசை தான்..எல்லா பாடல்களுமே அருமை ..எல்லாவற்றிற்கும் இடம் குடுத்து விட்டால் .மற்ற பாடல்களுக்கு இடம் இருக்காது ..ஆகவே ஒரு பாடல் மட்டும் குறிப்பிடுகிறேன்..எல்லாமே முதல் இடம் தான் ...

மன்னிப்பாயா ... ஹோசன்னா , ஓமான பெண்ணே ... 


இன்னொரு படலை விட மனசே இல்ல ...அதனால் இதையும் குறிப்பிடுகிறேன் ...





ஆயிரத்தில் ஒருவன் : ( மாலை நேரம் மழை தூவும் காலம்..என் ஜன்னல் ஓரம் --) 

                                                       இந்த பதிவை தொடர ...

                                                            நான் அழைப்பது....

                                                                   வெறும்பய 
                                                                       சிவா 

                                                                    சௌந்தர் 

12/16/10

எனக்கு பிடிச்ச ஒரு பாடல் !!!

கனவில் தான் !!!






குமரேசன்.. இவர் பார்க்கும் அத்தனை படங்களிலும் இவர் தான் கதாநாயகன். நாற்ப்பது வயதாகியும் பத்து வயதில் தொற்றிக்கொண்ட சினிமா பைத்தியத்தை விடாமல் தன்னுடனே வளர்த்து கொண்டிருக்கும் ஒரு கனவு தொழிற்சாலை. கொஞ்சம் முட்டைக் கண் , நேர் வகிடெடுத்து முன் நெற்றி தெரிய சீவி , சோடா புட்டி கண்ணாடி போட்டு சைடு சீன்களில் வந்து போகும் காமெடி நடிகர் போல இருப்பார். ஆனால் மனதில் அந்த கால ஜெமினி முதல் இந்த கால ஜெயம் ரவி போல தன்னை அழகன் என்று நினைப்பவர். 

தன் இளம் வயதில் சினிமாவில் போல் தன்னை யாராவது காதலிப்பார்கள் என்று முயற்சிகள் செய்தது தொடர்  தோல்விகளை மட்டுமே வெற்றியாக பெற்ற போராளி.  அவராக பத்து பதினைந்து பெண்கள் பின்னாடி சுற்றியும் தோல்வி. ஆனால் சினிமாவில் போல் செருப்படி வாங்குவதில்  மட்டும் தோல்வி கிடைக்கவில்லை.  பார்த்தார் குமரேசன்! பேசமால் சினிமாவில் வரும் கதாநாயகிகளை காதலிக்கத் தொடங்கினர்.  செருப்படியும் மிஞ்சியது.  எல்லா கதாநாயகிகளும் இவரைக் காதலித்தே ஆக வேண்டும்.  ஏனென்றால்  இவர் காதலிப்பது கனவுகளில் மட்டும் தான்.  ஆமாம் கதாநாயகிகள் அனைவரும் இவரின் காதலிகள்.


குமரேசன் சினிமா பைத்தியமாக இருந்தாலும் ஒரு வழியாக படித்து பட்டம் பெற்று ஒரு சிறிய கம்பெனியில் அக்கௌன்ட் பார்க்கும் பணியில் இருந்தார்.   இவர் கண்ட கனவுகளை அடுத்த நாள் ஆபீசில் எல்லோரிடமும் ரொம்ப சுவாரசியமாய் சொல்லுவார்.  மற்றவர்களும் இவரின் கனவுகளைக் காமடி பீஸ் என்று சிரிப்பார்கள்.  ஆனால் குமரேசன் இதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை.  இப்படியே போனால் தன் பிள்ளை தறுதலை பிள்ளை ஆகி விடுவானோ என்று குமரேசனின் அப்பா தன் தூர உறவு செல்லம்மாளை இவனுக்குப் பெண் பார்த்தார்.  

தனக்கு கல்யாணம் என்றதுமே குமரேசன் தன் மனைவி ஒரு சினேகா அல்லது ஒரு தாமனா போல என்று கற்பனை பண்ணினான்.  இவனின் குணம் தெரிந்து கல்யாணம் அன்று மட்டுமே பெண்ணைக் காட்டினார்கள்.  குமரேசனின் கல்யாண கனவு எல்லாம் வீணாகப் போனது.  செல்லம்மா " கோபுரங்கள் சாய்வதில்லை " " அருக்காணி " போல் இருந்தாள்.  இருந்தாலும் என்ன செய்ய ! கல்யாணமும் முடிந்தது.  கல்யாணமானாலும், குமரேசன் செல்லமாளிடம் முகம் கொடுத்து பேசுவதே இல்லை. தினமும் ராத்திரி ஷோ படம் பார்த்து பார்த்து தன் கதாநாயகிகளுடன் குடும்பம் நடத்தினான்.  இதில் பெரிய கூத்து என்னவென்றால் தன் கனவுகளை தன் மனைவியிடமே சொல்லூவான். செல்லம்மா ஒன்றும் எதுவும் கூறுவதில்லை. அவளும்  இந்த கிறுக்கு மாமாவுக்கு தன்னை விட்டால் வேறு எவளும் கிடைக்க மாட்டாள் என்று சிரித்துக் கொள்வாள்.

இப்போது  ! "விண்ணை தாண்டி வருவாயா " திரிஷாவை பாக்க இன்று நாற்பதாவது   தடவை போகிறார்  இந்த நாற்பது  வயது குமரேசன்.  படம் வந்தும் நாற்பது  நாள் தான் ஆகிறது.  இப்பல்லாம் தினமும் இரவு திரிஷா முகம் தான் இவர் கனவில் . இன்றும் வழக்கம் போல் தூங்க தொடங்கினர் குமரேசன்!  

அடுத்த நாள்  அவரின் முகம் ரொம்ப வாட்டமாய் இருந்தது.  செல்லம்மாளுக்கு புரியவே இல்லை.  ஆபீஸ் போனதும் குமரேசன் தன் கனவை வழக்கம் போல் சொல்லுவான் என்று நண்பர்கள் பார்த்தார்கள்.  குமரேசனும் சொன்னான் - வழக்கம் போல் கனவு வந்துச்சு. ஆனால் எந்த கதாநாயகி என்று தான் தெரிய வில்லை.  ரொம்ப பழகிய முகம். ஆனால் நினைவுக்கே வரவில்லை எனக்கு என்றார்.  எல்லாரும் அவரை பாவமாய் பார்த்தார்கள்.  குமரேசன் நாள் முழுவதும் அந்த முகத்தையே யோசித்தார்.  

சாயங்காலம் குமரேசன் வீட்டுக்கு போனார்.  எதிரே செல்லம்மா வந்தாள். குமரேசன் அப்பாவியாய் அவளிடமே தன் கனவை சொல்லி யாராக இருக்கும் என்றார்.  செல்லமாவுக்கு வந்ததே பாருங்க கோபம்.  அவரை ஒரு மேலும் கீழுமாய் பார்த்தாள்..சிரிப்பதா அழுவதா இல்லை அவனை போட்டு மிதிப்பதா என்று தெரிய வில்லை.ஏன் என்றால் அவன் கூறிய அடையாளங்களை வைத்து பார்க்கும் பொது கனவில் வந்ததோ அவளின் முகம் தான் ..சினிமா நடிகைகள் முகம் பார்த்து சலித்து போன அவனுக்கு தன் மனைவியின் முகம் வந்திருக்கு ..அவள் சந்தோஷத்தில் .." மாமா என் முகமா என்று பாருங்க " என்றாள் ..குமரேசனுக்கு தன் கனவில் யார் வந்தாள் என்று தெரிந்ததில் சந்தோசம் .மனைவிக்கு கணவனின் கனவில் ஒரு நாளேனும் வந்தாச்சு என்பதில் சந்தோசம் ...குமரேசன் அன்று முதல் தன் மனைவியை  நேசிக்க தொடங்கினான் செல்லமாவின் நீண்ட நாள் பொறுமைக்கு பதில் கிடைத்தது ...கனவில் எப்போவுமே செல்லம்மா தான் !!! ( வடை போச்சே என்று  அவர் ஏங்கின நாட்கள் நமக்கு எங்கே தெரிய போகுது )

12/13/10

சிட்டி !!!!



ஹலோ எல்லோருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி ஒன்னு சொல்ல போறேன் ..என்ன தெரயுமா? கொஞ்சம் யோசிங்களேன் ...நான் முதல் மதிப்பெண் எல்லாம் வாங்கல!! என் பொண்ணு இன்று நான் சொன்னதை எல்லாம் கேட்கல ..எனக்கு கோபம் வராமல் இல்ல !!!
நான் சமைத்ததை சூப்பர் என்று சொல்ல வில்லை  என் கணவர் !!! என் நண்பர்கள் எல்லோரையும் மொத்தமாக மீட் பண்ணவும்  இல்ல !!! அப்புறம் என்ன சந்தோசம் என்று கேட்கிறீங்கள ??? சொல்றேன் ...ஓவர் பில்ட் அப்  என்று சொல்வது கேட்கிறது என் காதில் ..... சொல்றேன் ..எனக்கு செல்ல பிராணி வளர்க்கணும் என்று ரொம்ப நாளா ஆசை ..இடம் அமைய வில்லை ...மீன்கள் மட்டும் வளர்க முடிந்தது.. நாய் என்றால் ரொம்ப பிடிக்கும் ...ஏனோ முடியவே இல்ல ...எங்க அம்மா கிட்டே கேட்டு இருக்கேன் ..வளர்க்கணும் என்று ? அம்மா உன்னை வளர்க்கவே கஷ்டபடுகிறேன் ...இதில் அதையுமா ?? என்று சொல்லி விட்டார்கள் ..திருமணத்திற்கு பிறகு ...என் கணவரையே பெட் ஆக்கி கொண்டேன் . :-) என் பிள்ளைகள் கேட்கிறாங்க இப்போ ...என் அம்மா சொன்ன அதே வசனம் தான் ...உங்களையே பர்த்துக முடியல ...இதிலே அது வேறயா ??? என்று ..என்ன ஒரு மனித குணம் பாருங்க ..குரங்கு போல ...எனக்கு குரங்கு ரொம்ப பிடிக்கும் ...சரி என்ன சந்தோசம் என்று  சொல்லவே இல்ல பாருங்க ..என் ஆசை என் பிள்ளைகளின் ஆசை எல்லாம் இப்போ நிறைவேறி ஆச்சு ...அபப்டியே உங்க வலது கை சைடு பாருங்க ...உங்க நண்பர்களின் முகம் நியாபகம் வந்தாதா ?? நான் ஒரு குரங்கை என் பெட் ஆக்கிருகேன்  ...பேரு "சிட்டி " சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தப்பா  நினைச்சிகதீங்க ....என் பொண்ணு கிட்டே பேரு கேட்டேன் .ரோபோ வந்ததில் இருந்து சிட்டி சிட்டி தான் ..அதனால் வெச்சுட்டோம் ...பெயர் சூடும் விழ எல்லாம் முடிந்தது ...கூப்பிட முடியல எல்லோரயும் ..

சரி ஏன் குரங்கை ?? என்று நீங்க கேட்பது கேட்கிறது ...நாய் ,பூனை ஆடு ,மாடு எல்லாவற்றையும் வீட்டில்  வளர்க்கலாம் ..ஆனால் குரங்கை முடியுமா ? நம்ம ப்ளாக் இல் என்றால் நீங்க எல்லோருமே நல்லா  பர்த்துகுவீங்க..சாப்பாடு  எல்லாம்  நான் போடா விட்டாலும் நீங்க போடலாம் .more   என்று இருக்குல அதை கிளிக் பண்ணி குடுக்கலாம் .சமத்தாக சாப்பிடும் ..சரி எங்க சிட்டி ...இல்ல இல்ல நம்ம சிட்டி எப்படி என்று நீங்க தான் சொல்லணும் .

12/10/10

சமைத்து தான் பாருங்களேன் !!!!

நிறைய பேர் வேலைக்காக வெளியூர்களில் இருப்பதுண்டு .அவர்களில் பலர் அம்மா சமயலையோ அல்லது மனைவியின் சமயலையோ மிஸ் பண்ணுவதுண்டு .அந்த பலருக்காக சின்ன சின்ன சமையல் குறிப்புகள் சொல்லலாம் என்று ஒரு ஆசை நீண்ட நாள் இருந்தது .அதற்காக வெளியூர் ல இருபவங்க தான் சமைத்து பார்க்கணும் என்று இல்லை. அம்மாவிற்கோ மனைவிக்கோ சமைத்து குடுத்து அடி... சாரி பாராட்டை பெறலாமே ?? முதலில் அடிப்படை பாடம் தான் ..அதற்காக சுடுதண்ணி எல்லாம் வைக்க சொல்லி குடுக்கல ..சிம்பிள் ஆக ஒரு வெரைட்டி ரைஸ் ..தக்காளி சாதம்...ஒரு 15       நிமிடங்களில் சமைக்கலாம் ....என்ன எல்லோரும் ரெடி தானே ?




தேவையான பொருட்கள் :
-----------------------------------------
பாஸ்மதி ரைஸ் : ஒரு கப் ..( பாஸ்மதி இல்லையெனில் பச்சரிசி )

ONION  -------  2
தக்காளி ------- 2

இஞ்சி பூண்டு விழுது --- 1  ஸ்பூன்
கொத்தமல்லி இலை
புதினா இலை ( கொஞ்சமாக )
கரம் மசாலா தூள் --- 2  ஸ்பூன்
மிளகாய் தூள் -- 1  ஸ்பூன்
மஞ்சள் தூள் --- 1   /  2  ஸ்பூன்       

ஏலக்காய் -- 2        
பட்டை -- 1            
கிராம்பு - 3
தண்ணீர் -- 1   கப் அரிசி என்றால் ஒன்னரை கப் தண்ணீர் எடுக்க வேண்டும் .
(பிரியாணி கும் இதே அளவு தான்..அரிசி 2  கப் எடுத்தால் ..2   * 1  1 /2  ) கணக்கும் படிக்கணும் போல சமைப்பதற்கு !!!            

இதை எல்லாம் ரெடி பண்ணிகோங்க...எப்படி என்று சொல்கிறேன் .நல்ல கேட்டுகோங்க .

1  ..  முதலில் தேவையான அளவு அரிசியை ஒரு 15        நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்
குக்கர் இல் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் ..பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் எல்லாவற்றயும் போட்டு தாளிக்கவும் ..கரிகிவிடாமல் பார்த்து கொள்ளவும் ( சிம் இல் வைத்து கொள்ளலாம் ).. .
2   . வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும் .
3 . தக்காளியும் சேர்த்து வதக்கவும் ..மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள்
 கரம்மசாலா எல்லாவற்றயும் சேர்க்கவும் .
4  நன்கு வாசனை வரும் வரை வதக்கவும் .
5 .    தேவையான .  அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கணும் ...அதை மறந்தால் கஷ்டபட்டது எல்லாமே குப்பையில் தான் ...உப்பு ஒரு 1  ஸ்பூன் போதும் .
6 .ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு ..சேர்க்கவும் .கொத்தமல்லி புதினா இலை சேர்த்து மூடவும் ..வெயிட் போடாமல் ஆவி வரும் வரை வெயிட் பண்ணிட்டு.வந்ததும் அடுப்பை சிம் இல் வைத்து .5  நிமிடங்கள் கழித்து ஆப் பண்ணவும் .
மொத்தமாக ஆவி போனதும் திறக்கவும் ..
7     .கொஞ்சம் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும் .


( இப்போ பார்த்த அதே செய்முறை தான் சிக்கன் பிரியாணி கும் .தக்காளி சேரத் பின்னர் ..சிக்கன் யும் சேர்த்து வதக்கவும் ..கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கவும் (3      ஸ்பூன் ))
VEG  பிரியாணி என்றால் தேவையான காய்கறிகளை சேர்க்கவும் தக்காளி வதக்கும் போது      )
 உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறன் ..நீங்க தான் சொல்லணும் ..எப்படி என்று ??

12/5/10

என் மனதினில் ...


அழகான காலங்கள் ...
அழியாத சந்தோசங்கள் !!!
என் கல்லூரி காலங்கள் ..
சண்டை போட்ட
மறு நிமிடம்
பேசி கொண்ட அந்த
நாட்கள் .....ஏன் ?
இல்ல இன்று !!!

கேட்காமலே வருகின்றன
கோபங்களும் ...
ஏமாற்றங்களும் !! என்னிடம் ...

கடந்த காலங்கள் ...
நினைத்து ...நிகழ்
காலங்களை தொலைக்கிறேன் !!!

----------------------------------------------------------------



என் நினைவுகளால்
உன்னை செதுக்கினேன் !!
அழகிய சிலையாய் ..நீ
இன்று ..
என் முன்னே
காதலாய் !!!


..


.