12/10/10

சமைத்து தான் பாருங்களேன் !!!!

நிறைய பேர் வேலைக்காக வெளியூர்களில் இருப்பதுண்டு .அவர்களில் பலர் அம்மா சமயலையோ அல்லது மனைவியின் சமயலையோ மிஸ் பண்ணுவதுண்டு .அந்த பலருக்காக சின்ன சின்ன சமையல் குறிப்புகள் சொல்லலாம் என்று ஒரு ஆசை நீண்ட நாள் இருந்தது .அதற்காக வெளியூர் ல இருபவங்க தான் சமைத்து பார்க்கணும் என்று இல்லை. அம்மாவிற்கோ மனைவிக்கோ சமைத்து குடுத்து அடி... சாரி பாராட்டை பெறலாமே ?? முதலில் அடிப்படை பாடம் தான் ..அதற்காக சுடுதண்ணி எல்லாம் வைக்க சொல்லி குடுக்கல ..சிம்பிள் ஆக ஒரு வெரைட்டி ரைஸ் ..தக்காளி சாதம்...ஒரு 15       நிமிடங்களில் சமைக்கலாம் ....என்ன எல்லோரும் ரெடி தானே ?




தேவையான பொருட்கள் :
-----------------------------------------
பாஸ்மதி ரைஸ் : ஒரு கப் ..( பாஸ்மதி இல்லையெனில் பச்சரிசி )

ONION  -------  2
தக்காளி ------- 2

இஞ்சி பூண்டு விழுது --- 1  ஸ்பூன்
கொத்தமல்லி இலை
புதினா இலை ( கொஞ்சமாக )
கரம் மசாலா தூள் --- 2  ஸ்பூன்
மிளகாய் தூள் -- 1  ஸ்பூன்
மஞ்சள் தூள் --- 1   /  2  ஸ்பூன்       

ஏலக்காய் -- 2        
பட்டை -- 1            
கிராம்பு - 3
தண்ணீர் -- 1   கப் அரிசி என்றால் ஒன்னரை கப் தண்ணீர் எடுக்க வேண்டும் .
(பிரியாணி கும் இதே அளவு தான்..அரிசி 2  கப் எடுத்தால் ..2   * 1  1 /2  ) கணக்கும் படிக்கணும் போல சமைப்பதற்கு !!!            

இதை எல்லாம் ரெடி பண்ணிகோங்க...எப்படி என்று சொல்கிறேன் .நல்ல கேட்டுகோங்க .

1  ..  முதலில் தேவையான அளவு அரிசியை ஒரு 15        நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்
குக்கர் இல் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் ..பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் எல்லாவற்றயும் போட்டு தாளிக்கவும் ..கரிகிவிடாமல் பார்த்து கொள்ளவும் ( சிம் இல் வைத்து கொள்ளலாம் ).. .
2   . வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும் .
3 . தக்காளியும் சேர்த்து வதக்கவும் ..மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள்
 கரம்மசாலா எல்லாவற்றயும் சேர்க்கவும் .
4  நன்கு வாசனை வரும் வரை வதக்கவும் .
5 .    தேவையான .  அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கணும் ...அதை மறந்தால் கஷ்டபட்டது எல்லாமே குப்பையில் தான் ...உப்பு ஒரு 1  ஸ்பூன் போதும் .
6 .ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு ..சேர்க்கவும் .கொத்தமல்லி புதினா இலை சேர்த்து மூடவும் ..வெயிட் போடாமல் ஆவி வரும் வரை வெயிட் பண்ணிட்டு.வந்ததும் அடுப்பை சிம் இல் வைத்து .5  நிமிடங்கள் கழித்து ஆப் பண்ணவும் .
மொத்தமாக ஆவி போனதும் திறக்கவும் ..
7     .கொஞ்சம் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும் .


( இப்போ பார்த்த அதே செய்முறை தான் சிக்கன் பிரியாணி கும் .தக்காளி சேரத் பின்னர் ..சிக்கன் யும் சேர்த்து வதக்கவும் ..கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கவும் (3      ஸ்பூன் ))
VEG  பிரியாணி என்றால் தேவையான காய்கறிகளை சேர்க்கவும் தக்காளி வதக்கும் போது      )
 உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறன் ..நீங்க தான் சொல்லணும் ..எப்படி என்று ??

9 comments:

  1. ம்ம்..பிரியாணி நல்லாதான் இருக்குது! பாராட்டுக்கள் செல்வா!

    ReplyDelete
  2. அட இது நமக்கு use ஆகும்.. பகிர்விற்கு நன்றி..

    இது போன்ற எளிமையான சமையல் குறிப்புகள் இருந்தா பகிரவும்..

    ReplyDelete
  3. ரொம்ப நன்றிங்க எங்கள மாதிரி தனியா கிடக்கற ஆளுகளுக்கும் சமயல் குறிப்பு சொன்னதுக்கு
    இன்னைக்கே செஞ்சு பார்த்துடுறேன்

    ReplyDelete
  4. அட ச்சே .! இந்த சிவா எப்ப பரு வடை வாங்கிடறார் ..!!

    ReplyDelete
  5. //கோமாளி செல்வா said...
    அட ச்சே .! இந்த சிவா எப்ப பரு வடை வாங்கிடறார்//

    நீ வாங்காத வடையா செல்வா ??

    ReplyDelete
  6. //வெறும்பய said...
    அட இது நமக்கு use ஆகும்.. பகிர்விற்கு நன்றி..

    இது போன்ற எளிமையான சமையல் குறிப்புகள் இருந்தா பகிரவும்.//

    கண்டிப்பா சொல்றேன் ...நன்றி

    ReplyDelete
  7. //siva said...
    வடை எனக்கே.//
    சிவா ...கமெண்ட் எங்கே ???

    ReplyDelete