12/13/10

சிட்டி !!!!ஹலோ எல்லோருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி ஒன்னு சொல்ல போறேன் ..என்ன தெரயுமா? கொஞ்சம் யோசிங்களேன் ...நான் முதல் மதிப்பெண் எல்லாம் வாங்கல!! என் பொண்ணு இன்று நான் சொன்னதை எல்லாம் கேட்கல ..எனக்கு கோபம் வராமல் இல்ல !!!
நான் சமைத்ததை சூப்பர் என்று சொல்ல வில்லை  என் கணவர் !!! என் நண்பர்கள் எல்லோரையும் மொத்தமாக மீட் பண்ணவும்  இல்ல !!! அப்புறம் என்ன சந்தோசம் என்று கேட்கிறீங்கள ??? சொல்றேன் ...ஓவர் பில்ட் அப்  என்று சொல்வது கேட்கிறது என் காதில் ..... சொல்றேன் ..எனக்கு செல்ல பிராணி வளர்க்கணும் என்று ரொம்ப நாளா ஆசை ..இடம் அமைய வில்லை ...மீன்கள் மட்டும் வளர்க முடிந்தது.. நாய் என்றால் ரொம்ப பிடிக்கும் ...ஏனோ முடியவே இல்ல ...எங்க அம்மா கிட்டே கேட்டு இருக்கேன் ..வளர்க்கணும் என்று ? அம்மா உன்னை வளர்க்கவே கஷ்டபடுகிறேன் ...இதில் அதையுமா ?? என்று சொல்லி விட்டார்கள் ..திருமணத்திற்கு பிறகு ...என் கணவரையே பெட் ஆக்கி கொண்டேன் . :-) என் பிள்ளைகள் கேட்கிறாங்க இப்போ ...என் அம்மா சொன்ன அதே வசனம் தான் ...உங்களையே பர்த்துக முடியல ...இதிலே அது வேறயா ??? என்று ..என்ன ஒரு மனித குணம் பாருங்க ..குரங்கு போல ...எனக்கு குரங்கு ரொம்ப பிடிக்கும் ...சரி என்ன சந்தோசம் என்று  சொல்லவே இல்ல பாருங்க ..என் ஆசை என் பிள்ளைகளின் ஆசை எல்லாம் இப்போ நிறைவேறி ஆச்சு ...அபப்டியே உங்க வலது கை சைடு பாருங்க ...உங்க நண்பர்களின் முகம் நியாபகம் வந்தாதா ?? நான் ஒரு குரங்கை என் பெட் ஆக்கிருகேன்  ...பேரு "சிட்டி " சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தப்பா  நினைச்சிகதீங்க ....என் பொண்ணு கிட்டே பேரு கேட்டேன் .ரோபோ வந்ததில் இருந்து சிட்டி சிட்டி தான் ..அதனால் வெச்சுட்டோம் ...பெயர் சூடும் விழ எல்லாம் முடிந்தது ...கூப்பிட முடியல எல்லோரயும் ..

சரி ஏன் குரங்கை ?? என்று நீங்க கேட்பது கேட்கிறது ...நாய் ,பூனை ஆடு ,மாடு எல்லாவற்றையும் வீட்டில்  வளர்க்கலாம் ..ஆனால் குரங்கை முடியுமா ? நம்ம ப்ளாக் இல் என்றால் நீங்க எல்லோருமே நல்லா  பர்த்துகுவீங்க..சாப்பாடு  எல்லாம்  நான் போடா விட்டாலும் நீங்க போடலாம் .more   என்று இருக்குல அதை கிளிக் பண்ணி குடுக்கலாம் .சமத்தாக சாப்பிடும் ..சரி எங்க சிட்டி ...இல்ல இல்ல நம்ம சிட்டி எப்படி என்று நீங்க தான் சொல்லணும் .

12 comments:

 1. ஹா.. வித்தியாசமா தான் இருக்கு... ஆன நமக்கு இந்த மாதிரி எதையும் வளர்க்க பிடிக்காதே...

  ReplyDelete
 2. கொஞ்சம் நேரம் அந்த குரங்கு உடன் விளையாடினேன் சாப்பாடு கொடுத்தேன் உங்களுக்கே கொடுக்க சொல்லிடுச்சி

  ReplyDelete
 3. /அம்மா உன்னை வளர்க்கவே கஷ்டபடுகிறேன் ...இதில் அதையுமா ??//

  ஹி ஹி ஹி .!!

  ReplyDelete
 4. அட எங்க கிளிக் பண்ணாலும் தாவுது .. நல்ல குரங்குதான் வாங்கிருக்கீங்க அக்கா .!!

  ReplyDelete
 5. அக்கா அப்படியே template வெள்ளைல வர்ற மாதிரி வைங்க .!!

  ReplyDelete
 6. //சாப்பாடு எல்லாம் நான் போடா விட்டாலும் நீங்க போடலாம் .more என்று இருக்குல அதை கிளிக் பண்ணி குடுக்கலாம் .சமத்தாக சாப்பிடும் //

  கரெக்டா பிடிச்சிடிச்சு. சாப்டுச்சு.உங்க வளர்ப்பாச்சே! நல்லாத்தான் வளர்த்திருக்கீங்க!

  ReplyDelete
 7. ;)) சிட்டி சுப்பரா இருக்கார்.

  ReplyDelete
 8. :)ஹா.. வித்தியாசமா தான் இருக்கு..repeatu..

  ReplyDelete
 9. சரி விடுங்க.. நாங்க சிட்டி-ய பாத்துக்கறோம்.. :-))

  ReplyDelete
 10. ஓகே... ஓகே, பார்த்துக்கலாம்,சிட்டி நல்லா இருக்கார்:)

  ReplyDelete
 11. நன்றி வெறும்பய !!
  நன்றி செல்வா !!
  நன்றி சிவா !!
  நன்றி இமா,பிரியா ,ஆனந்தி ,
  உங்கள் வருகைக்கும் ,கருத்துகளுக்கும் !

  ReplyDelete
 12. பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  //சாப்பாடு எல்லாம் நான் போடா விட்டாலும் நீங்க போடலாம் .more என்று இருக்குல அதை கிளிக் பண்ணி குடுக்கலாம் .சமத்தாக சாப்பிடும் //

  கரெக்டா பிடிச்சிடிச்சு. சாப்டுச்சு.உங்க வளர்ப்பாச்சே! நல்லாத்தான் வளர்த்திருக்கீங்க

  ஏன் உங்க பெயரை சொல்ல விருப்பம் இல்லை ??!

  ReplyDelete