9/21/10

கிடைக்குமா ??கல்லூரியின்  முதல் நாள் ...

பிறந்த வீட்டை விட்டு

புகுந்த வீடிற்குள்

நுழைந்ததை போல் உணர்வு !!!

புதிய புதிய முகங்கள் ...

பழகிய முகத்தை தேடின

என் விழிகள் !!!

ஏங்கியது என் மனம் ....

பள்ளியில் பழகிய சிநேகங்கள்

யாரேனும் உண்டா

புதிய் இடம் ...

காட்டிற்குள் விட்டது

போல பயம்!!!

கல்லூரி முதல்வரின்

முதல் உரை ..

ஏகப்பட்ட அறிவுரைகள் ...பள்ளிக்கே  ஓடிடலாம

என எண்ணங்கள்

ஓடின மனதினில் !!!

தனக்கென எழுதப்பட்ட

உரையை முடித்தார் ...முதல்வர் !!!

வகுப்பறைக்கு சென்றேன் ....

சற்றே பள்ளியை விட

அழகாய் இருக்க...

கொஞ்சம் மகிழ்ந்தது

என் மனம் !!!

தனிப்பட்ட அறிமுகம் செய்தோம் ..

ஆசிர்யர்கள்

"உங்கள் நண்பர்கள் நாங்க" என்றனர் ..

அப்படியா ?

மகிழ்ச்சியில் என் மனம் ...

முதல் இடை நிலை தேர்வுகள் ...

ஆசிரியரின் சுயரூபம்

தெரிந்தது ..ஆம்

பள்ளியில் கூட வீடுபாடம்

இல்லீங்க ....இங்கே பக்கம் பக்கமாய் ....

புதிய முகங்களில் சிலர் ...

ஆகினர் என் நண்பர்களாய் ...

சில நேரம் சண்டைகள் ...

நிறைய சந்தோசங்கள் ....

காலங்கள் சென்றன

கட கடவென !!!

கல்லூரியில்

சந்தோசமாய் கழிக்கும் இடம் ...

எங்க கான்டீன் தாங்க!!!

சாப்டனும் என்று இல்ல

அரட்டை சும்மா ...

சாப்பிட போனால் ...

எங்க ராசி

எதுவும் கிடைக்காது !!

ஆனந்த லஞ்ச் டைம் ---

ஆம் வித விதமாய் !!!

எல்லோர் உணவும்

எங்க உணவு தான் !!!

சந்தோசமாய் போன காலங்கள்...

.இதோ முடியும் நேரம் ...

எங்க ஜூனியர்ஸ் ...

எங்களை விரட்ட

ஏற்பாடு செய்த விழா !!!!

ம்ம்ம்ம் ..பேர்வெல் தாங்க !!!மூன்று வருடம் சந்தோசமாய்

வாழ்ந்த ஒரு உலகினில் ...

கடைசியாய் வாழும் அந்த நாள் ...

எல்லோரும் மூழ்கினோம்

சோகத்தில் !!

சோகங்கள் ...

சந்தோசங்கள் ...

சண்டைகள் ..

வாழ்த்துக்கள் ...

போட்டிகள் ...

மன்னிப்புகள் ...

என வாழ்கையை கற்று தந்த அந்த காலம் .."கேட்டாலும் நினைத்தாலும் திரும்ப கிடைக்காதது "

9/20/10

ஹி ! ஹி ! கடி ஜோக்ஸ் !!!கிரீம் பிஸ்கட்ல கிரீம் இருக்கும். ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்காது .

மின்னல பார்த்தா கண்ணு போயிரும் ஆனா மின்னல பாக்காட்ட மின்னல் போயிரும் .

லஞ்ச் பேக்ல லஞ்ச் எடுத்துட்டு போகலாம் ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல எடுத்துட்டு போக முடியாது.

மெழுகு வச்சு மெழுகு வத்தி செய்யலாம் ஆனா கொசுவ வச்சி கொசு பத்தி செய்ய முடியாது

பச்சை மிளகால பச்சை கலர் இருக்கும், ஆனா குடை மிளகால குடை இருக்காது.

9/18/10

ஏன் ??நீயில்லாத வாழ்க்கை

வண்ணங்கள் இல்லாத

வானவில் போலானது --

எனக்கு !!!மறக்கவே நினைத்தேன்

அன்று -- உன்னை !!!

இன்று நீ ..

நினைக்கவே மறுக்கிறாயா ??ஒவ்வொரு நொடிகளையும்

உன் நினைவுகளால் கழிக்கிறேன் ......

. இன்று !!!

உன் நினைவுகளில்

ஒரு நொடியேனும்

என் நினைவுகள் ????எல்லா அன்பையும் தந்தாய் !!!

என் இதயம் சுமை கண்டது ...

இன்று எல்லா அன்பையும்

பறித்தாய் ...

மேலும் சுமை கொண்டது !!

9/16/10

நினைவில் நனைகிறான்

பூஞ்சோலை ! பெயரைப் போலவே அழகான குட்டி ஊர். மேற்கு மலையில் உள்ள குளுகுளு ஊர். அங்கே ஓர் அழகான கான்வென்ட் ஸ்கூல்.  மணி மாலை நான்கு .  ஸ்கூல் பெல் அடித்து விட்டது.  அம்மா அப்பா வந்து பிள்ளைகளை கூப்பிட்டு போகத் தொடங்கினர்.ஷாம்.  ஒன்றாவது படிக்கும் துறுதுறு குழந்தை.  ஸ்கூல் பாக் , லஞ்ச் பேகோடு அம்மாவுக்காக காத்திருந்தான். ச்சே ! என்ன அம்மா இது ! அப்பான்னா கரெக்டா வந்திடுவாங்க ! ஊருக்கு போயிருக்கும் அப்பா சீக்கிரம் வந்திடுவங்கன்னு அம்மா சொன்னாங்களே !  கொஞ்ச நேரம் போனது.

ஷாம்.  ஒன்றாவது படிக்கும் துறுதுறு குழந்தை.  ஸ்கூல் பாக் , லஞ்ச் பேகோடு அம்மாவுக்காக காத்திருந்தான். ச்சே ! என்ன அம்மா இது ! அப்பான்னா கரெக்டா வந்திடுவாங்க ! ஊருக்கு போயிருக்கும் அப்பா சீக்கிரம் வந்திடுவங்கன்னு அம்மா சொன்னாங்களே !  கொஞ்ச நேரம் போனது.ஷாம் தானாகவே வீட்டுக்கு கிளம்பி விட்டான்.  மழை வரும் போல் மேகம் இருந்தது.  ஸ்கூல் க்கு வெளியே ஐஸ் கிரீம் கடை. ஷாமின் அப்பா அவ்வப்போது அவனுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பார்.  மலை பிரதேஷம் என்பதால் அப்பா அவனை நடந்து வந்துதான் கூப்பிட்டு உப்பு மூட்டை ஏற்றிக் கொண்டு கதை சொல்லிக் கூப்பிட்டுப் போவார்.  அவனும் ஐஸ் கிரீம் வாங்கிக் கொண்டான்.  கதை சொல்லத்தான் அப்பா இல்லை.

மழை லேசாகத் தூறியது.  ஷாம் ஒரு கையில் லஞ்ச் பாக் , மறு கையில் ஐஸ் கிரீம் என்று நடக்கத் தொடங்கினான்.  மழைக்கு எங்காவது ஒதுங்கலாம் என்று நினைத்தான்.  சுற்றிலும் மரங்கள் மட்டுமே.  மழை பெய்யும் போது மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என்று அப்பா சொன்னது ஞாபகம் வந்தது.  கொஞ்சம் வேகமாய் நடக்கத் தொடங்கினான். கால் வலிக்கத் தொடங்கியது.  ஷாமுக்கு அப்பாவின் உப்பு மூட்டை ஞாபகம் வந்தது .சே ! அப்பா வந்ததும் ஜாலியாய் உப்பு மூட்டை ஏறனும் என்றான் .நடக்கும்  போதே " கலைவாணி " தியட்டர் ..வந்தது ..நிறைய பேர் மழைக்கு ஒதங்கி இருந்தனர் .ஷாமும் ஒதுங்கினான் ." வேட்டைக்காரன் " விஜய் சாமை பார்த்து சிரிக்கிறான் .ஷாமும் சிரித்தான் .என்னவோ ஷாமுக்கு விஜய் என்றால் அவ்வளவு பிடிக்கும் .அப்பாவுக்கு சினிமா பிடிக்காது .விஜய் படம் என்றால் அப்பா கூட்டிட்டு போவர் .ஒரு கையில் ஐஸ் க்ரீம் .இன்னொரு கையில் பாப்கார்ன் என்று சாம் படம் பார்க்கும் அழகே தனி ...அப்பா வந்ததும் கண்டிப்பா வேட்டைக்காரன் பார்க்கணும் எப்று நினைத்து கொண்டான் மனதினில் ....

மழை கொஞ்சம் குறைந்தது ..ஷாமும் வீடிருக்கு கிளம்பினான் .அப்பாவின் நெருங்கிய நண்பர் சாமை பார்த்தார் ..சாம் வா ... நன் கொண்டு பொய் விடுகிறேன் என்றார் ..இல்லை அங்கிள் ..அப்பா யாரையும் தொந்தரவு பண்ண கூடாது என்ற சொல்லிருகாங்க ...அனால் ஒரே ஒரு உதவி பண்ணுங்க ...அப்பாவை சீக்கிரம் வர சொல்லுங்க என்று சொல்லி விட்டு போய் விட்டான்.வீடு  நெருங்கி விட்டது ..இந்த பூங்காவை தாண்டினால் போதும் ..ஷாமின் அப்பாவிருக்கு கிரிக்கெட் பிடிக்கும் ..அம்மா அப்பா ஷாம் மூவரும் இங்கே தான் கிரிக்கெட் விளையாடுவர் ..அப்பா வந்ததும் கிரிக்கெட் விளையாடனும் என்று மனதினில் நினைத்து கொண்டான் .

வீடு வந்து விட்டன் சாம் .அழகான குட்டி வீடு ..அதை சுற்றி தோட்டம் ..அதில் மழை பெய்தால் சாம் அப்பா இருவரும் ஆடும் ஆட்டமே தனி .எல்லோரும் சேர்ந்து மழையில் நனைந்து விளையாடுவர் . அதையும் நினைத்து கொண்டான் .காலிங் பெல் அமுக்கினான். அம்மா நிர்மலா வந்தாள். என்ன அம்மா ! ஏன் சீக்கிரம் வரலை! மழை பெய்ததுடா! கொஞ்சம் லேட்டாக வரலாமென்று நினைத்தேன். ஏம்மா ! அப்பா இன்னைக்கு ஊரில் இருந்து வந்துடுவாங்களா ! கால் ரொம்ப வலிக்குதும்மா ! ஷாம் பாவமாய் அம்மாவைப் பார்த்தான்.  நிர்மலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆனால் சுவரில் மாட்டி இருந்த அப்பா " ரமேஷின் " போட்டோ மட்டும் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

ஆம் ! ஆபீஸ் வேலையை மும்பை சென்ற போது அங்கு நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் பலியான அப்பாவி மனிதர்களில் ரமேஷும் ஒருவன். இன்று அவனின் மகன் அனாதையாய் நிற்கிறான். ஊரே அறிந்த தன் அப்பாவின் மரணம் பாவம் இந்த பிஞ்சு குழந்தைக்கு தெரிய வில்லை

நிர்மலா அழுகையை அடக்க முடியாமல் " ஒ " வென அழத் தொடங்கினாள்.  கூடவே வெளியே மழையும் பெரிதாய் அழத் தொடங்கியது.  அம்மாவின் அழுகை புரியாமல் ஷாம் மழையில் தன் அப்பாவின் நினைவுகளோடு விளையாட ஆரம்பித்தான்காலம் தான் சொல்லும் இந்த பிஞ்சு மனதிற்கு பதில் ...

9/14/10

என் உயிர் உள்ள வரை !!


என்னை உணர்ந்த நாள்

உன்னை கண்ட முதல் நாள் !!!

என் நாட்கள் நகர மறுத்தன

உன்னை காணமல் ..

என் கண் பார்வை

உனக்காய் தவமிருந்தது ...

என் உலகமே உருமாறி

போனது ...உன் அன்பினால் ..

.நம் அன்பினை

நட்பென்று பெயர் சூட்டி கொண்டோம் ..

.பூவின் வாசத்தை தடுக்க

முடியுமா ?

நம் நட்பின் வாசம் காதலை பிறப்பித்தது..

யாருமே எட்ட முடியாத உயரத்தில் ...

ஆனந்த களி பாடினோம் ..

நீ அருகினில் இல்லாத நேரங்களில்

நம் நினைவுகள் தாலாட்டுகிறது //

நீயும் உன் நினைவுகளும்

என்னுடனே ....'என் உயிர் உள்ளவரை !!

9/10/10

தேங்காய் சாதம் !!

தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் -- உதிரியாக ஒரு கப்

கடலை பருப்பு -- கொஞ்சம்

முந்திரி -- கொஞ்சம்

கிஸ்மிஸ் -- கொஞ்சம்

கருவேப்பிலை --கொஞ்சம்

காய்ந்த மிளகாய் --கொஞ்சம்

கடுகு , உளுந்த பருப்பு  --கொஞ்சம்

தேங்காய் துருவல் - ஒரு கப்செய்முறை :

  • முதலில் கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கடுகு ,உளுந்த பருப்பு போட்டு தாளிக்கவும் .

  • அடுத்து முந்திரி ,கிஸ்மிஸ் ,கருவேப்பிலை ,காய்ந்த மிளகாய் ,கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்

  • பின்னர் தேங்காய் துருவலை நன்றாக வதக்கி ,,சாதம் சேர்த்து கிளறவும் .தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்

  • சேர்த்து கிளறவும்

  • சூடாக சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் நல்ல இருக்கும் ..

  • சாதம் மீந்து போனால் இப்படி செய்து காலி பண்ணலாம்9/9/10

தீவீரவாதம் !!

[slideshow]

நேற்று ரஷ்யாவில் நடந்த ஒரு தற்கொலை படை சம்பவம் பற்றி அனைவரும் அறிந்திருப்போம் .காலையில் செய்தித்தாள் படிக்கும் போது அறிந்து கொண்டேன் .தீவீரவாதம் இப்போது மிகவும்

வருத்தப்பட வேண்டியுள்ளது என்னவென்றால் சம்பந்தமே  இல்லாதவர்கள் தான் இதில் பலியாகின்றனர் .

நம் இந்தியாவில் நடந்த மும்பை சம்பவத்தில் கூட ஏராளமானோர் பலியானர் .ஏன் தான் இப்படி எல்லாம் பண்றங்களோ? யார் மீது வெறுப்போ அவர்களை மட்டும் பலி வாங்கலாம் தானே .சின்ன குழந்தைகள் எல்லாம்  என்ன பாவம் பண்ணினார்கள் ? ஆனால் தீவரவாதிகளுக்கு தண்டனை சீக்கிரம் குடுக்கிறதும்இல்லை  நம் இந்தியாவில் ..அவனை வைத்து நிறைய பேரை கண்டு பிடிக்கிறோம் என்று ..பிடித்த ஒருவனையும் தவற  விட்டு விடுகின்றனர் .இன்னும் வருந்த வேண்டிய விஷயம் என்ன வென்றால் ..நம் ராணுவத்தில்  அதிகாரிகளே நிறைய தகவல்களை வெளி ராணுவத்திற்கு விற்கின்றனர் ..இந்திய பணத்தில் தன் வயிறை நிறைத்து விட்டு ..உளவு சொல்லும் இவர்களை என்ன பண்றது ? இவர்கள் இருக்கும் வரை தீவரவாதம் ஒழியவே ஒழியாது !!

( இது பற்றி உங்க கருத்துகளை சொல்லுங்கள் ..)

9/7/10

மனிதனின் விலங்கு வாழ்க்கை !!

ரொம்ப வருடங்களுக்கு முன்பு கடவுள் ஒரு கழுதையை படைத்தார் . கடவுள் சொன்னார் " நீ கழுதையாக   பிறப்பாய். காலை முதல் மாலை வரை உழைப்பாய் உனக்கு புத்தி கிடையாது.  உன் ஆயுள் 50  வருடம்."உடனே கழுதை சொன்னது "எல்லாம் சரி;  ஆனால் எனக்கு ஆயுள் 20  வருடம் மட்டும் போதும். " கடவுளும் ஒப்புக் கொண்டார்.

அடுத்ததாக கடவுள் ஒரு நாயைப் படைத்தார். " நாயே நீ மனிதனையும் அவன் வீட்டையும் காவல் செய்வாய். அவன்
தரும் உணவையே நம்பி வாழ்வாய். உன் ஆயுள் 25  வருடங்கள்.
"நாய் சொன்னது "எல்லாம் சரி கடவுளே ; ஆனால் எனக்கு ஆயுள் 10  வருடம் மட்டும் போதும்." கடவுளும் ஒப்புக் கொண்டார்.

அடுத்ததாக கடவுள் ஒரு குரங்கினை  படைத்தார். " குரங்கே நீ அங்கும் இங்கும் தாவும் வாழ்க்கை வாழ்வாய்.
மக்களை குஷி படுத்துவாய்.  உன் ஆயுள் 20  வருடங்கள்.
"குரங்கும் சொன்னது " எல்லாம் சரி கடவுளே; ஆனால் எனக்கு ஆயுள் 10  வருடம் மட்டும் போதும். "கடவுளும் ஒப்புக் கொண்டார்.

கடைசியாக கடவுள் ஒரு மனிதனை படைத்தார். அவனிடம் சொன்னார் " ஏய் மனிதா ! நீ மட்டுமே யோசிக்கும் தன்மை கொள்வாய் . உன் அறிவால் இந்த உலகை ஆள்வாய் . உனக்கு ஆயுள் 20  ஆண்டுகள்."

பேராசைக்கார மனிதன் தனக்கு கழுதை வேண்டாம் என்று சொன்ன 30  வருடங்கள், நாய் வேண்டாம் என்று சொன்ன 15 வருடங்கள், குரங்கு வேண்டாம் என்று சொன்ன 10  வருடங்கள் என்று எல்லோருடைய ஆயுளையும் கேட்டான்.
கடவுளும் ஒப்புக் கொண்டார்.

ஆக, அன்றில் இருந்து இன்று வரை மனிதன் தன்னுடைய ஆயுளில் முதல் 20  வருடம் சந்தோசமாக இருக்கிறான்.
அடுத்த 30  வருட கழுதையின் ஆயுளில் குடும்ப பொதியை சுமக்கிறான். அடுத்த 15  வருட நாயின் ஆயுளில் வளர்ந்த
தன் பிள்ளைகளின்  பராமரிப்பில் அவர்கள் தருவதை சாப்பிட்டு வாழ்கிறான்.  அவன் தன் வயதான காலத்தில் , குரங்கின் 10  வருட ஆயுள் போல் பிள்ளைகள் மற்றும் பேரன்களின் வீடுகளுக்கு அலைந்து திரிந்து வாழ்க்கையை
கழிக்கிறான்.

எனவே, பேராசைக்கார மனிதன் தான் கேட்டு வாங்கிய ஆயுளில் , எல்லா விலங்குகளின் வாழ்க்கையும் வாழ்கிறான்.

பேராசை பெரும் நஷ்டம்.

உன்னில் ...

ஆசை --- உன்னில் கரைகின்றது

கண்ணீர் --- உன்னால் சுவைகின்றது

சிரிப்பு -- உன்னில் பிறக்கின்றது

வெட்கம் --  உன்னில் மலர்கின்றது

கோபம் -- உன்னால் மறைகின்றது

காதல் -- உன்னால் என்னுள் உருவானது !!!

9/4/10

ஆசிரியர் !!!!தன்னை கரைத்து ..
ஒளியை தருகிறது ...
மெழுகுவர்த்தி !!!!

தன் அறிவை பகிர்ந்து
இன்னொரு மரத்திற்கு
வித்திடுவர்
ஆசிரியர் !!!!

ஆசரியர்  தின வாழ்த்துக்கள் !!!!

( நாம் எல்லோருமே நிறைய       ஆசிரியர்களை கடந்து வந்திருப்போம் ..இன்று நாம் எல்லோரும் அவர்களை
நினைவு கூர்ந்தால் நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை.. இப்பொழுது மாணவர்களாக இருந்தால் கண்டிப்பாக
வாழ்த்துக்கள் சொல்லலாம் .மிகவும் மகிழ்வர் ..)

9/3/10

என் கூடவே ...உன்னை சந்திக்கும்
ஒவ்வொரு நாளும்
நான் வாழ்வில் மிகவும்
மகிழும்  நாள் !!!!

என்னுடன் நீ பேசும்
வார்த்தைகள் எல்லாமே
காவியங்கள் !!!

உன்னுடன்  கடக்கும்
சாலைகள் அழகான
பூஞ்சோலை !!!

எல்லாமே நீ என்னுடன்
இருந்தால் மட்டுமே ....

நீ அருகினில் இல்லாத
நேரங்களில் ...
என் நிழல் கூட
உன்னையே தேடுதே ....

9/2/10

சாலை போர் ....அழகிய காலை பொழுது !!!குழந்தைகள்  பள்ளிக்கு , பெண்கள் சமையல் அறையில் வெந்து கொண்டு இருகின்றனர் .
ஆண்கள் தங்களுக்காகவே செய்தி தாள்  எழுதியது போல படித்து கொண்டிருகின்றனர்.  எல்லோரும் இயந்திரம் போல
சுழன்று கொண்டே இருக்கின்றனர்.அடுத்து அவரவர் அவர்கள்   வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது .

சாலையில் எல்லோருமே போக வேண்டியுள்ளது ..அது ஒரு பெரிய கொடுமை தெரியுமா ?

சாலையில் போனால் வீடுக்கு வருவோமா என்பது பெரிய கேள்விக்குறியே ....ரேஸ் கு போக வேண்டியவர்கள் ellam சாலையில் தான் பயிற்சி எடுகின்றனர் போலும் ..யாரை முந்தலாம் ..யாரை கீழே தள்ளலாம் என்று.
ஒரு நாள் நான் கூட எனது வண்டியில் ஒட்டி கொண்டு போகும் போது தப்பி பிழைத்தேன் ..ரொம்ப ஆயுள் போல எனக்கு ...சிக்னல் என்று உள்ளதையே நம்மவர்கள் மறந்து விடுகின்றனர். சிவப்பு நிறம் வந்தால் தான் போவேன் என்று
எத்தனை பேர்  அடம் பண்றாங்க தெரியுமா ? நம்ம அரசு பேருந்துக்கு தான் இதில் முதல் இடம் ..யாரையுமே கண்டு கொளவதில்லை ..இதனால் எவ்வளவு விபத்துகள் ??? அது போல இரண்டு சக்கர வகனங்களும்  சிக்னல் என்றாலும்
இரண்டு விளகுகலையும் எரிய விட்டு நான் பொய் கொள்கிறேன் என்றே வருகின்றனர்.

அதிலும் நம்ம டிராபிக் போலீஸ் இருக்கிறாரே ...." இருப்பார் ஆனால் இல்ல ..." ரொம்பவே வெட்டியாக நின்று கொண்டிருபார்...அதனால் நம்மை நம் தான் பார்த்து கொள்ளனும்..கவனம் பொறுமை ரெண்டும் மிக அவசியம் ...
பொறுமை என்பது எல்லோருக்குமே
அவசியம் ..எனக்கும் குறைவு தான் .ஆனால் முக்கியமான  நேரங்களில் பொறுமை அவசியமே ...

.ஒரு சில நிமிடங்கள் தான் காத்திருக்கணும் ..காத்திருக்கலாமே !!!! ஒரு சில நொடிகளில் வாழ்கையே மாறி போகலாம் ..

சிக்னல்  பார்த்து  போங்க ....
ஆயிளோடு   இருங்க ...
மத்தவங்களுக்கும்  ஆயுசை குடுங்க ...

9/1/10

இன்றும் ..நீ !!!உன்னை சந்தித்த
அந்நாளை நீயும்
நானும் மறக்க வில்லை ....
அன்று ...
உன்னுடன் பேசிய
முதல் மொழியை
உன்  கண்கள்
மறுக்க வில்லை ..
உன்னை நாளையும்
பார்ப்பேனோ ?
என்று ஏங்கவும்
இல்லை.....
உன்னுடன் வாழ்ந்த
அந்த நொடிகளை
மறக்கவே இன்று
நினைக்கிறேன்...
மறந்தாலும் நினைக்கிறேன்.
மழையில் நனைந்த
வண்ணத்து பூச்சியை போல்
தவிக்கிறேன் ...