7/13/10

மீண்டும் !!!!!



என்னை பிடிச்சிருக்கா
என்று நான் கேட்ட நாள்
வேண்டும் மீண்டும் !!!!

எனக்கு கொஞ்சம் டைம்
வேண்டும் என்று நீ
கேட்காத நாள் வேண்டும்
மீண்டும் !!!

என்னை ஆசையில்
தவிக்க விட்ட நாட்கள்
வேண்டும் மீண்டும் !!!

இருவரும் ஒரே பாட்டை
ரசித்த நாட்கள் வேண்டும்
மீண்டும்!!!

எனக்காக நீ அழுத நாட்கள்
வேண்டும் மீண்டும் !!!

என் கவிதைகளை நீ
ரசித்த நாட்கள் மீண்டும்
எனக்காய் வேண்டும் !!!

என் கனவுகளில்
என்னை தூங்க விடாமல்
நீ கொஞ்சிய நாட்கள்
வேண்டும் மீண்டும் !!!

காதல் வேதனை
அனுபவித்த நாட்கள்
வேண்டும் மீண்டும் ..

அன்பே !! உன்னை மீண்டும்
காதலிக்கும் உரிமை
எனக்கே வேண்டும் ...

ரிங் அடிக்கும் போன் அதை
நீயே எடுக்க வேண்டும்
என்று நான் தவித்த நாட்கள்
வேண்டும் மீண்டும் ...

பிறர் எடுத்தல் கட் செய்து
கோபத்தில் நான் மூட் அவுட்
ஆஹும் நாட்கள் வேண்டும்
மீண்டும்

உன் யதார்த்த பார்வையை கூட
காதல் பார்வையாய் நான்
கற்பனை செய்த நாள்
வேண்டும் மீண்டும் மீண்டும் !!!!

No comments:

Post a Comment