7/11/10

மறைக்க முடியாது....

அழகான சாலைகள் ...அங்கும் இங்குமாய் சில கடைகள் ...என்றிருந்தது அந்த ஊர் ..அதிலே கல்யாணம் ஆஹாத பெண்ணும் ஆணும் பேசிகொல்வதே பாவம் என்று என்னும் மனிதர்கள் ...அதிலே தப்பி பிறந்தனர்

மீனாவும் ரவியும் ..தினமும் இருவரும் பார்த்து கொள்வது வழக்கம் ..ஒரே நேரத்தில் இருவரும் வேலைக்கு

செல்வர்கள்.. ஒரே சாலையை ஒரே நேரத்தில் கடப்பார்கள்.. இப்படியே நிறைய வருடங்கள் ஓடி போனது ..

தினமும் இருவரின் மனதிலும் தோன்றும் ஒரு கேள்வி.. " இன்று அவனை பார்ப்போமா?/" இன்று அவளை பார்ப்போமா ? இருவரின் மனதும் நன்கு அறியும் ..ஒருவரை ஒருவர் என்ன நினைகிறார்கள் என்று ..

ரவியின் மனதில் சின்ன ஆசை தோன்றியது . எப்படியும் அவளை பேச வைக்கணும் என்று ..ஆம்.. இருவரும் பேசினதே கிடையாது ..வெறும்  பார்வைகள் தான் பேசின .ரவி ரொமவே யோசித்தான் ...

மறு நாள்.. மீனா வின் கண்களில் ரவி இல்லை .. துடித்து போனாள்...வலியை உணர்ந்தாள்.. நாட்கள் நகரவே  இல்லை....ஒரு வாரம் கழித்து ரவி அந்த சாலையில்.. மீனா விற்கு அழுகை  வரவில்லை ..கோபமே வந்தது .ரவியோ தான் நடத்திய தேர்விற்கு முடிவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறான் ...மீனா வேகமாக ரவியை நோக்கி வந்து ...ஏன்டா ஒரு வாரமாய் வரல ...என்ன ஆச்சு? உடம்பு சரி இல்லையா ரவி ? இப்போ சரி ஆஹிடுச்சா? என்று கேட்டுகிட்டே இருக்காள்..ரவி பேச வைத்து விட்டான்..மீனாவின் உண்மையான அன்பு வெளி வந்தது ...உணமையான அன்பை மறைக்கவே முடியாது ....

1 comment: