9/16/10

நினைவில் நனைகிறான்

பூஞ்சோலை ! பெயரைப் போலவே அழகான குட்டி ஊர். மேற்கு மலையில் உள்ள குளுகுளு ஊர். அங்கே ஓர் அழகான கான்வென்ட் ஸ்கூல்.  மணி மாலை நான்கு .  ஸ்கூல் பெல் அடித்து விட்டது.  அம்மா அப்பா வந்து பிள்ளைகளை கூப்பிட்டு போகத் தொடங்கினர்.



ஷாம்.  ஒன்றாவது படிக்கும் துறுதுறு குழந்தை.  ஸ்கூல் பாக் , லஞ்ச் பேகோடு அம்மாவுக்காக காத்திருந்தான். ச்சே ! என்ன அம்மா இது ! அப்பான்னா கரெக்டா வந்திடுவாங்க ! ஊருக்கு போயிருக்கும் அப்பா சீக்கிரம் வந்திடுவங்கன்னு அம்மா சொன்னாங்களே !  கொஞ்ச நேரம் போனது.

ஷாம்.  ஒன்றாவது படிக்கும் துறுதுறு குழந்தை.  ஸ்கூல் பாக் , லஞ்ச் பேகோடு அம்மாவுக்காக காத்திருந்தான். ச்சே ! என்ன அம்மா இது ! அப்பான்னா கரெக்டா வந்திடுவாங்க ! ஊருக்கு போயிருக்கும் அப்பா சீக்கிரம் வந்திடுவங்கன்னு அம்மா சொன்னாங்களே !  கொஞ்ச நேரம் போனது.



ஷாம் தானாகவே வீட்டுக்கு கிளம்பி விட்டான்.  மழை வரும் போல் மேகம் இருந்தது.  ஸ்கூல் க்கு வெளியே ஐஸ் கிரீம் கடை. ஷாமின் அப்பா அவ்வப்போது அவனுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பார்.  மலை பிரதேஷம் என்பதால் அப்பா அவனை நடந்து வந்துதான் கூப்பிட்டு உப்பு மூட்டை ஏற்றிக் கொண்டு கதை சொல்லிக் கூப்பிட்டுப் போவார்.  அவனும் ஐஸ் கிரீம் வாங்கிக் கொண்டான்.  கதை சொல்லத்தான் அப்பா இல்லை.

மழை லேசாகத் தூறியது.  ஷாம் ஒரு கையில் லஞ்ச் பாக் , மறு கையில் ஐஸ் கிரீம் என்று நடக்கத் தொடங்கினான்.  மழைக்கு எங்காவது ஒதுங்கலாம் என்று நினைத்தான்.  சுற்றிலும் மரங்கள் மட்டுமே.  மழை பெய்யும் போது மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என்று அப்பா சொன்னது ஞாபகம் வந்தது.  கொஞ்சம் வேகமாய் நடக்கத் தொடங்கினான். கால் வலிக்கத் தொடங்கியது.  ஷாமுக்கு அப்பாவின் உப்பு மூட்டை ஞாபகம் வந்தது .சே ! அப்பா வந்ததும் ஜாலியாய் உப்பு மூட்டை ஏறனும் என்றான் .



நடக்கும்  போதே " கலைவாணி " தியட்டர் ..வந்தது ..நிறைய பேர் மழைக்கு ஒதங்கி இருந்தனர் .ஷாமும் ஒதுங்கினான் ." வேட்டைக்காரன் " விஜய் சாமை பார்த்து சிரிக்கிறான் .ஷாமும் சிரித்தான் .என்னவோ ஷாமுக்கு விஜய் என்றால் அவ்வளவு பிடிக்கும் .அப்பாவுக்கு சினிமா பிடிக்காது .விஜய் படம் என்றால் அப்பா கூட்டிட்டு போவர் .ஒரு கையில் ஐஸ் க்ரீம் .இன்னொரு கையில் பாப்கார்ன் என்று சாம் படம் பார்க்கும் அழகே தனி ...அப்பா வந்ததும் கண்டிப்பா வேட்டைக்காரன் பார்க்கணும் எப்று நினைத்து கொண்டான் மனதினில் ....

மழை கொஞ்சம் குறைந்தது ..ஷாமும் வீடிருக்கு கிளம்பினான் .அப்பாவின் நெருங்கிய நண்பர் சாமை பார்த்தார் ..சாம் வா ... நன் கொண்டு பொய் விடுகிறேன் என்றார் ..இல்லை அங்கிள் ..அப்பா யாரையும் தொந்தரவு பண்ண கூடாது என்ற சொல்லிருகாங்க ...அனால் ஒரே ஒரு உதவி பண்ணுங்க ...அப்பாவை சீக்கிரம் வர சொல்லுங்க என்று சொல்லி விட்டு போய் விட்டான்.



வீடு  நெருங்கி விட்டது ..இந்த பூங்காவை தாண்டினால் போதும் ..ஷாமின் அப்பாவிருக்கு கிரிக்கெட் பிடிக்கும் ..அம்மா அப்பா ஷாம் மூவரும் இங்கே தான் கிரிக்கெட் விளையாடுவர் ..அப்பா வந்ததும் கிரிக்கெட் விளையாடனும் என்று மனதினில் நினைத்து கொண்டான் .

வீடு வந்து விட்டன் சாம் .அழகான குட்டி வீடு ..அதை சுற்றி தோட்டம் ..அதில் மழை பெய்தால் சாம் அப்பா இருவரும் ஆடும் ஆட்டமே தனி .எல்லோரும் சேர்ந்து மழையில் நனைந்து விளையாடுவர் . அதையும் நினைத்து கொண்டான் .



காலிங் பெல் அமுக்கினான். அம்மா நிர்மலா வந்தாள். என்ன அம்மா ! ஏன் சீக்கிரம் வரலை! மழை பெய்ததுடா! கொஞ்சம் லேட்டாக வரலாமென்று நினைத்தேன். ஏம்மா ! அப்பா இன்னைக்கு ஊரில் இருந்து வந்துடுவாங்களா ! கால் ரொம்ப வலிக்குதும்மா ! ஷாம் பாவமாய் அம்மாவைப் பார்த்தான்.  நிர்மலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆனால் சுவரில் மாட்டி இருந்த அப்பா " ரமேஷின் " போட்டோ மட்டும் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

ஆம் ! ஆபீஸ் வேலையை மும்பை சென்ற போது அங்கு நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் பலியான அப்பாவி மனிதர்களில் ரமேஷும் ஒருவன். இன்று அவனின் மகன் அனாதையாய் நிற்கிறான். ஊரே அறிந்த தன் அப்பாவின் மரணம் பாவம் இந்த பிஞ்சு குழந்தைக்கு தெரிய வில்லை

நிர்மலா அழுகையை அடக்க முடியாமல் " ஒ " வென அழத் தொடங்கினாள்.  கூடவே வெளியே மழையும் பெரிதாய் அழத் தொடங்கியது.  அம்மாவின் அழுகை புரியாமல் ஷாம் மழையில் தன் அப்பாவின் நினைவுகளோடு விளையாட ஆரம்பித்தான்



காலம் தான் சொல்லும் இந்த பிஞ்சு மனதிற்கு பதில் ...

6 comments:

  1. My heart melts on reading this. When will this feeling dawn on the extremist.

    ReplyDelete
  2. Mathi, this story brought tears to me. speechless.

    ReplyDelete
  3. hey really i feel something missing..oh god..i pray for tha cute child for his life.

    ReplyDelete
  4. குழந்தையின் குணம் பற்றி ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க இந்த கதையை படித்தவுடன் மனதில் பதிந்து விட்டது

    ReplyDelete