செல்லமே !!!
மழலை குரல்
சங்கீதமே !!!
பிஞ்சு நடை
காண கண்கள்
கோடி வேணுமே !!!
சிந்தி சாப்பிடும்
அழகே தனி !!!
தப்பு தப்பாய்
சொல்லும் கதைகள்
கூட காவியமே !!!
செல்லமாய் நமை
திட்டும் வார்த்தைகள்
கூட தேனாய் பாயுமே !!!
அன்பாய் ஊட்டி விடும்
ஒரு சோற்று பருக்கை
கூட அமிர்தமே !!!
இப்படி என்னை கொஞ்சின
அம்மா இன்று .....
என் இருபது வயதில்
திட்டுவது ஏனோ ??? (சிறு வயதில் அனுபவித்த எதையும் இளமை பருவம் தராது..
இளமையில் அனுபவித்த எதையும் முதுமை தராது ...
இதுவே கால சக்கரம்...
past is past ..)
அனைத்து வரிகளும் அருமை. காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் அனுபவங்கள் அனைத்தும் சுகமான நினைவுகளாகி விடுகின்றன.
ReplyDeleteநன்றி அகிலா !!!
ReplyDeleteThanks.
ReplyDelete