8/19/10

தூர உறவு !!!ஒரு அழகிய கிராமம் !!!! அன்பான அம்மா அப்பா ... ஆசைக்கு ஒரே மகன் ..ராஜு .எல்லா பாசத்தையும் அவனிடமே காட்டினர்.
கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர் ..மகனின் ஒவ்வொரு பிறந்த நாளிற்கும் குடும்பமாக கோவிலுக்கு செல்வது வழக்கம்

ஆசைப்பட்டது எல்லாமே கிடைத்தது ராஜுவுக்கு ..அப்பாவின் கனவு U.S .அப்படியே வேலையும் கிடைத்தது.அம்மாவை விட அப்பாவே பிரிவை அதிகம் உணர்ந்தார் .ஆம் ராஜு அப்பா செல்லம் .வெளிநாடு சென்றான் .
வருடம் ஒரு முறை இந்தியா வருவான் ராஜு .வருடங்கள் ஓடின .பாசமும் கரைந்தது .ராஜுவிடம் !!!..

அப்பாவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசம் ஆனது .ராஜு வை நினைத்து தான்.ஒரு முறை வந்தான் ராஜு.அப்பாவை பார்த்து விட்டு சென்றிருந்தான் .அடுத்து அடுத்த வருடம் தான் ..போன அடுத்த மாதமே  அப்பாவின் உடல் நிலை  மிகமும் மோசம் ஆனது..அம்மா ராஜுவை இந்தியா அழைத்தாள்.. அனால் அவன் இப்போ தானே வந்தேன் ..வீண் செலவு ..வர முடியாது.. என்று சொல்லி விட்டான்..எவ்வளவு செலவு ஆஹுமோ சொல்லுங்க ..அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி விட்டான் ..அம்மா வினால் அப்பாவிடம் சொல்ல முடிய வில்லை..அப்பாவின் மனதின் வேதனை அவள் நன்கு அறிவாள்..ஒரு நாள் தொலை பேசியில் அழைத்தாள் ராஜுவை.அம்மா சொல்லுங்க.."எவ்வளவு பணம் அனுப்பி வைக்க "..அம்மா அழுது கொண்டே "ஒரு நூறு ருபாய் போதும் ராஜு"..என்றாள்.அவனுக்கு புரிய வில்லை. அம்மா "ஒரு மலர் வளையத்தின்  விலை நூறு ருபாய் தான் ராஜு"..என்றாள்..தூர உறவின் முடிவு இதுவே ....பாசம் எப்போவும் விலை போகாது !!!!

No comments:

Post a Comment