8/12/10

நீ என்பது ....என் மகிழ்ச்சியில்
சிரிப்பாய் நீ !!!

என் வலியில்
கண்ணீராய் நீ !!

என் தோல்வியில்
ஆறுதலாய் நீ !!!

என் கண்ணில்
ஒளியாய்  நீ !!

என் கனவில்
நினைவாய் நீ !!

என் நினைவில்
கனவாய் நீ !!!

என் ஓவியத்தில்
வண்ணமாய் நீ !!!

என் பாடலின்
இசையாய் நீ !!!

இன்னும் சொல்லுவேன்
வார்த்தைகள் போதாதே !!!!

என் இதயத்தில்
துடிப்பாய் நீ !!!

என்றும் என்றென்றும்
என் உயிராய் நீ !!!!!

2 comments: