8/5/10

அம்மாவலியோடு நமை
தாங்கி என்றுமே
வலியோடு சுமப்பவள் !!!!

நம் வலியை கூட
தனதை போல
நினைப்பவள் !!!

தோல்விகள் நமை சூழும்
போது ஆறுதல்
தந்து கவலையை
ஏற்பவள் !!!

நாம் கீழே விழும்
போது நம்
நிழலாய் நம்மை
தாங்குபவள் !!!!

கடவுள் அருகினில்
இல்லாத குறையை
தீர்ப்பவள் !!!

நம் வெற்றியின் போது
மட்டும் ....
சிறு குழந்தையை போல
நம்மை ஆனந்த கண்ணீரால்
நம்மை நனைய செய்பவள் !!!!

( நம் தாய் அருகினில் இல்லாத போதே அவள் பெருமையை அறிகிறோம் ..இருக்கும் போதே நம் அம்மாவிற்கு என்ன பண்ண முடியோமோ அதை செய்யலாமே !!!! )

No comments:

Post a Comment