12/28/10

மார்கழி மாதம் !!

இது மார்கழி மாதம்!!  நாம் எல்லோருக்கும் தெரியும் ..எனக்கு  என்னவோ இந்த மாதத்தை கொஞ்சம் கூட  பிடிக்காது . ஏன் என்றால் ..சீக்கிரமே எழும்பி கோலம்  போடணுமே ... இந்த மார்கழி மாதம்  பஜனைகள், அழகு கலர் கோலங்கள் என   கிராமங்களில் நன்றாக பின்பற்றுவார்கள்..
 
என்னுடைய பாட்டி வீடு இருந்தது ஒரு கிராமம் .அங்கு அதிகமாக கிறிஸ்துமஸ் 
விடுமுறயில் தான் அதிகமாக   செல்வது வழக்கம் .அந்த மாதிரி  விடுமுறையில் தான் காலையில் கொஞ்ச அதிக நேரம் தூங்க முடியும்  ஆனாலும்  தூங்கவே விட மாட்டங்க .காலையில் நாம் தூங்கினாலும் அந்த பஜனை   சத்தத்தில் தூக்கமும் வராது.
 
ஆனால் மெல்லிய ஓசையுடன் கூடிய அந்த சத்தம்  இனிமையாக இருக்கும். அந்த சத்தத்தில் தூக்கம் கலைந்து பார்த்தால் என்னுடைய அத்தை  கோலம் போட்டு கொண்டு இருப்பாங்க .. எனக்கும் ஆசையா இருக்கும் ..ஆனால் சின்ன பிள்ளை நீ எல்லாம் போட கூடாது  என்று சொல்லிடுவாங்க . உள்ளுக்குள்ளே திட்டி கொண்டு பாட்டி கிட்டே போய் புகார் சொல்லிடுவேன் . அடுத்து எனக்கு என்று கொஞ்சம் கோல மாவு கொடுத்து ஒரு ஓரமாக கோலம் போட சொல்லுவாங்க .. எதோ பெரிய வெற்றி கிடைத்த சந்தோசம்  மனதில் இருக்கும் ..ஆனால் கோலம் என்னவோ ஒரு மாதிரி தான் இருக்கும் ...சின்ன பிள்ளைக்கு அவ்ளோ தான் தெரியும் .
 
இதெல்லாம் நடந்தது எனது ஐந்தாம் வகுப்பில் ...அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புத்தகத்தில் வரைந்து பழகினேன் .. எங்க வீட்டில் வீடு முற்றத்தில் போட்டு பழகுவேன் ..ஒரு பத்தாம் வகுப்பில் ஓரளவிற்கு கோலம் போல வந்தது .அடுத்து அழகாக வரும் கல்லூரி படிக்கும் போது . ஆனால் நிறைய சோம்பேறி தனம் எனக்குள் வந்து விட்டது .எங்க அம்மா என்னை கொஞ்சம் கோலம் போட்டு வாம்மா !! என்று ..எப்படி ??? என்னை வேண்டாம் என்று சொல்வீங்க ..இப்போ மட்டும் ஏன் என்னை எழுப்றீங்க என்று நான் கேட்ட நாட்கள் இப்போ என் கண் முன்னே !!
 
அப்போ எங்க வீடில் முற்றம் பெரியது .எவ்ளோ பெரிய கோலம் என்றாலும் போடலாம் .ஆனால் போட விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறேன் ..இப்போ எங்கே இந்த காலத்தில் எல்லாம் இருக்கவே இடம் இல்லை .இதில் கோலத்திற்கா ? என்று கேட்கிறாங்க ?
 
இந்த கோலம் போடுவதில் நிறைய மருத்துவ குறிப்புகள் இருக்குது .காலையில் சுத்தமான காற்று !! சுவாசிப்பதால் நல்ல ஆரோக்கியம் ..அடுத்து கோலம் குனிந்து  போடுவாங்க அந்த காலத்தில் எல்லாம் .அது ஒரு உடற்பயிற்சி போல ..இப்போ எல்லாம் ஸ்டூல் ,முக்காலி  போன்றவை கொண்டு போடுறாங்க .(நானும்  தான் ) ..இடமா பற்றி சொல்லிக்கிட்டு இருந்தேன் ..
 
இப்போ எல்லாமே பிளாட் என்பதால் ..அடுத்த வீடுக்கும் பக்கத்துக்கு வீடுக்கும் கொஞ்சம் தான் தூரமே ..அதில் எங்கு கோலம் போடறது.. அதனால் இப்போ ஆசை நிறைய இருக்கு கோலம் அழகாய் போட ..ஆனால் இடம் இல்லை ..அப்போ இடம் இருந்தது ..ஆசை இல்லை !! விஜய் வசனம் மாதிரி இருந்தால் அடிக்காதீங்க ...இருந்தாலும் அப்போ அப்போ கோலம் போடுவேன் .கோலங்கள் சில ..உங்கள் பார்வைக்கு !!!


இது நான் கார்த்திகை அன்று போட்ட கோலம் !!




இது   நான்  தீபாவளிக்கு  போட்டது ...




6 comments:

  1. //இப்போ எல்லாமே பிளாட் என்பதால் ..அடுத்த வீடுக்கும் பக்கத்துக்கு வீடுக்கும் கொஞ்சம் தான் தூரமே ..அதில் எங்கு கோலம் போடறது.. அதனால் இப்போ ஆசை நிறைய இருக்கு கோலம் அழகாய் போட ..ஆனால் இடம் இல்லை ..அப்போ இடம் இருந்தது ..ஆசை இல்லை//

    ஹிஹிஹி

    கோலங்கள் அழகாக உள்ளது

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்த கோலமெல்லாம் நீங்களா போட்டீங்க.. நம்பவே முடியல.. நல்லாயிருக்குங்க...

    ReplyDelete
  3. ஹய்
    அழகான கோலம்
    no no ரொம்ப பீலிங்க்ஸ்
    அதை அதை அப்போ அப்போ செய்திடணும் என்று சும்மாவா சொன்னாக..

    நல்ல இருக்குங்க இதுபோல உங்கள் அனுபவங்களை எழுதுங்க.

    ReplyDelete
  4. ரெண்டு கோலமுமே ரொம்ப அழகா இருக்குங்க.. :-))

    Wishing you a Very happy new year 2011...!!

    ReplyDelete
  5. /இப்போ எல்லாமே பிளாட் என்பதால் ..அடுத்த வீடுக்கும் பக்கத்துக்கு வீடுக்கும் கொஞ்சம் தான் தூரமே ..அதில் எங்கு கோலம் போடறது.. அதனால் இப்போ ஆசை நிறைய இருக்கு கோலம் அழகாய் போட ..ஆனால் இடம் இல்லை ..அப்போ இடம் இருந்தது ..ஆசை இல்லை !! //

    அடடா , உண்மைதான் அக்கா .. சின்ன வயசுல கோலம் போட ஆசை ஆனா வேண்டாம்னு சொல்லிட்டாங்க , இப்ப இடம் இல்ல ..! ஆனா நீங்க போட்ட தீபாவளி கோலம் அழக இருக்கு ...!!

    ReplyDelete
  6. நீங்கள் போட்டக் கோலங்கள் ரொம்ப அருமையா இருக்கு மதி.

    மார்கழி மாசம்னாலே எனக்கு நல்லா இழுத்துப் போர்த்தி தூங்கறதுதான் நினைவுக்கு வரும்.

    ஹிஹி.. becoz basically i am very சோம்பேறி.. but ரொம்பச் சமத்துப்பா...

    மார்கழி மாசத்த ஞாபகப்படுத்திட்டீங்களா..

    ஆ..கொட்டாவி வருது.. Good Night Mathi!

    ReplyDelete