1/6/11

பண்புகள் அவசியம் !!

ஒரு சின்ன சம்பவம் என்னை மிகவும் வருத்த படுத்தியது ...அத்தை எல்லோர் கிட்டேயும் பகிர விரும்புகிறேன் ..ஒரு நாள் என் கணவர் ,பிள்ளைகளுடன் ஷாப்பிங் சென்றோம் ...ஊரே அங்கு தான் என்பது போல ஒரே கூட்டம் வழிந்தது .நாங்களும் அந்த கூட்டத்தில் நாம் நினைத்த வண்ணத்திலே புடவை எடுத்து விடனும் என்ற குறிக்கோளில் அங்கும் இங்குமாய் தெரிந்து கொண்டு இருந்தேன் ..பிள்ளைகள் ஒரு பக்கமாய் ஓடி ஆடி விளையாடி கொண்டு இருந்தனர் .இந்த கணவர்களுகெல்லாம் ஷாப்பிங் என்றால் அவ்வளவு பயம் ...என்ன என்று கேட்கிறீங்களா ? முதலில் பில் ..இரண்டாவது  பிள்ளைகளை தூக்கி சுமப்பது .உச்சா வந்து கூட்டி செல்ல ,மூன்றவது செலக்ட் பண்ண சொலவங்க மனைவி மார்கள்.. ஆனால் அவங்க நினைத்ததையே சொல்லணும் என்று எதிர்பர்பாங்க  .ஆனால் கடைசியில் கணவர் சொன்னதை பெரும்பாலும் எடுக்க மாட்டங்க ..அதுக்கு ஏன் கேட்கணும் என்ற கோபம் இருக்கும் நிறைய கணவர்களுக்கு !!இந்த மாதிரி ஷாப்பிங் அனுபவம் நிறைய இருக்கு .

நிறைய தடவை எதாவது ஒன்றிற்காக ஷாப்பிங் போயிருப்போம் .ஆனால் அதை வாங்கவே மறந்துபோய் தேவை இல்லாத நிறைய பொருட்களை வங்கி வந்திருப்போம் .சரி நான் இப்போ சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன் ..ஒரு நாள் இப்படி ஷாப்பிங் போன பொழுது நான் புடவை செலக்ட் பண்ணிக்கிட்டு இருந்த பொழுது என் இரு பிள்ளைகளும் என் பக்கத்தில் இருந்து விளையாடி ஒண்டு இருந்தனர் .கடையிலோ நிறைய கூட்டம் தான் .என் கணவர் என் கிட்டே இருந்து தப்பி எங்கோ போய் விட்டார் அந்த நேரத்தில் ...என் மகன் அப்பொழுது தெரியாமல் பக்கத்தில் இருந்த பெண்மணியின் காலில் மிதித்து விட்டன் ..ஒரு கல்லூரி மாணவி மாதிரி தான் இருந்தது ..என் மகன் இரண்டாவது படிக்கிறான் .அவன் கூட சாரி ஆண்ட்டி!!  சாரி ஆண்ட்டி !! என்று பணிவாக சொல்கிறான் .அதற்கு அந்த பெண் ஷிட் ஷிட் என்று அவ்வளவு ஒரு கோர முகத்துடன் என் மகனிடம் கடிந்து கொள்கிறாள் .என் மனதால் தங்கவே முடியவில்லை ..இவ்வளவு படித்து என்ன பயன் ? இரண்டாவது படிக்கும் என் மகனுக்கு தெரியும் பண்பு கூட இருபது வயதை கடந்திருக்கும் அந்த பெண்மணிக்கு புரியவில்லை .பண்புகள் இயல்பாகவே வரும் .வளர்ப்பில் வரணும் .அந்த பெண்மணியின் அறியாமை என்று நினைத்து கொள்ள வேண்டியது தான் !!

அது போல இன்றைய சூழ்நிலையில் நிறைய குழந்தைகளை மாடர்ன் ஆக வளர்க்கிறேன் என்று நிறைய பெற்றோர்கள் அடிப்படை பண்புகளை சொல்லி தர மறந்து விடுகிறார்கள் .கிராமத்தில் பிள்ளைகளுக்கு முறை சொல்லி கூப்பிட சொல்லி தறாங்க அம்மாக்கள் .அத்தை ,சித்தி ,சித்தப்பா ,மாமா என்று !!! பெரிய ஊர்களில் எல்லாம் எல்லோரும் அங்கிள் ..எல்லோரும் ஆண்ட்டி தான் ..ஊருக்கு போனால் சித்தி யும் ஆண்ட்டி தான் ..அத்தை யும் ஆண்ட்டி தான் .என்ன கொடுமை சாமி இது ? என்னோட பிள்ளைகளும் அபப்டி தான் .பிள்ளைகள் தனியாகவே வளர்கிறார்கள் .அதனால் சொந்தங்களை பற்றி தெரியல ..அம்மா அப்பா தான் சொல்லி தரனும் .பாட்டி தாத்தா பெயர் கூட தெரிவதில்லை .கூட்டு குடும்பம் என்பது இந்த கால கட்டத்தில் சாத்தியம் இல்லை தான் .இருந்தாலும் சொந்தங்களை உறவுகளை பாசங்களை சொல்லி தந்தே ஆகணும் .அது நமது கடமை ஆகும் ..




10 comments:

  1. //கூட்டு குடும்பம் என்பது இந்த கால கட்டத்தில் சாத்தியம் இல்லை தான் .இருந்தாலும் சொந்தங்களை உறவுகளை பாசங்களை சொல்லி தந்தே ஆகணும் .அது நமது கடமை ஆகும் ..//

    கடமையை விட நமது பொருப்பும் அவசியமுமாகும்

    நல்லா எழுதியிருக்கீங்க அருமை

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. உண்மை தான்.. இன்னும் இது போன்று இருந்து கொண்டிருக்கிறார்கள்... எவ்வளவு படித்தும் மனிதாபிமானமில்லாத முட்டாள்களாய்.....

    ReplyDelete
  3. பெரிய ஊர்களில் எல்லாம் எல்லோரும் அங்கிள் ..எல்லோரும் ஆண்ட்டி தான் ..ஊருக்கு போனால் சித்தி யும் ஆண்ட்டி தான் ..அத்தை யும் ஆண்ட்டி தான் .என்ன கொடுமை சாமி இது ?


    .....எனக்கும் இந்த ஆண்டி கான்செப்ட் புரியல.... ஹி,ஹி,ஹி,ஹி...

    ReplyDelete
  4. ///முதலில் பில் ..இரண்டாவது பிள்ளைகளை தூக்கி சுமப்பது .உச்சா வந்து கூட்டி செல்ல ,மூன்றவது செலக்ட் பண்ண சொலவங்க மனைவி மார்கள்.. ஆனால் அவங்க நினைத்ததையே சொல்லணும் என்று எதிர்பர்பாங்க .ஆனால் கடைசியில் கணவர் சொன்னதை பெரும்பாலும் எடுக்க மாட்டங்க ..அதுக்கு ஏன் கேட்கணும் என்ற கோபம் இருக்கும் நிறைய கணவர்களுக்////

    ஹா ஹா ஹா... மதி.. சூப்பர்... போங்க.. ROFL :-)))

    ReplyDelete
  5. சரியா சொன்னிங்க மதி.. நிறைய பேருக்கு, இப்போல்லாம் பொறுமை, பண்பு இதெல்லாம் இருக்கறதே இல்லை... :(

    ReplyDelete
  6. //ஊருக்கு போனால் சித்தி யும் ஆண்ட்டி தான் ..அத்தை யும் ஆண்ட்டி தான் .என்ன கொடுமை சாமி இது ? /

    உங்க ஆதங்கம் நியாயமானது அக்கா !

    ReplyDelete
  7. //நமது கடமை//... உண்மைதான்.. மிக சரியா சொல்லி இருக்கிங்க!

    ReplyDelete
  8. சின்னப்பசங்களுக்கு இருக்கும் பண்பும் சில பெரியவர்களுக்கு இல்லாமல் போவது கொடுமைதான்!நியாயமான ஆதங்கம்தான் மதி!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. பண்புகள் இயல்பாகவே வரும் .வளர்ப்பில் வரணும் .அந்த பெண்மணியின் அறியாமை என்று நினைத்து கொள்ள வேண்டியது தான் !!//

    இதுதான் உண்மைங்க....

    உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. உண்மைங்க.உறவு,மரியாதை,பண்பு எல்லாம் நாம் ஊட்டி வளர்க்கும் விதத்தில் தான் இருக்கு.
    கணவன்மார்களை பற்றி கருத்து நிசம்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete