3/25/11

வெயில்



நிழலை எல்லோரும்
 நினைக்கும் நேரம் 
வந்தாச்சு ...
தர்பூஷினியும் சாலைகளில் கொட்டியாச்சு !!
குளிர் சாதன பெட்டியின் 
விற்பனையும் கூடியாச்சு !!
முத்து முத்தாய் வேர்வையும் 
பூத்தாச்சு ..!!!
பருத்தி ஆடைக்கு எல்லோரும் 
மாறியாச்சு !!
சந்தனம் பேசியல் போட்டாச்சு ...


அயோ ..சொல்லிகிட்டே போகலாம் ..இப்படி வெயில் பத்தி. வெயிலின் கொடுமை ரொம்பவே இருக்குங்க ..இந்த வெயில் காலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ் தருகிறேன் ...


*  முதலில் வெயிலில் போவதை தவிர்க்க வேண்டும் .
*.  அபப்டியே போக நேர்ந்தால் கலர் குடைகளை உபயோகிக்கலாம் .
      வண்டியில் போகும் போது என்ன செய்ய என்று கேட்பது கேட்கிறது ....
      கேப் வெச்சுக்கலாம் ... சன் கண்ணாடிகள் .அப்படி ஏதாவது..

*.நிறைய ஜூஸ் குடிக்கணும் .முக்கியமா எலுமிச்சை ,சாத்துக்குடி .

*.காலையில் வெறும் வயிறில் 500 மில்லி குடித்தால் உடம்பு dehyration   ஆகாமல் இருக்கும் .

* வெந்தயம் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்தால் உடல் சூடு தணியும் .
* வெள்ளரிக்காய் நிறைய சாப்பிடலாம் .
*    தர்பூசணி ஜூஸ் தினமும் குடித்தால் ரொம்ப நல்லது .
* எல்லோரும் வாங்கி சாப்பிடும்  விலையில் கிடைக்கிறது..
* ஜில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம் .
* பனை விசிறியில் இருந்து வரும் காற்று குளிராக இருக்கும் .
* மோர் குடிக்கலாம் .


இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கும் ..தெரிந்தால் என்னுடன் பகிருங்கள் ...


2/6/11

கிறுக்கல்

கண்ணில் விழும் தூசி
கூட உன் கைகளை தேடுகிறது..
நான் தேட கூடாதா ??

---------------------------------------------------------------------------------------------------
உன் முகம் காணவே
விரும்புகிறேன் ...
என்னை காணும்
போதும் !!!

----------------------------------------------------------------------------------------------------
பிறந்த நாள் காணும்
நாள் ...ஒரு வயது
கூடி வயதானாலும்
என் அம்மாவிருக்கு
என்றும் நான்
குழந்தையே !!!

----------------------------------------------------------------------------------------------------






1/6/11

பண்புகள் அவசியம் !!

ஒரு சின்ன சம்பவம் என்னை மிகவும் வருத்த படுத்தியது ...அத்தை எல்லோர் கிட்டேயும் பகிர விரும்புகிறேன் ..ஒரு நாள் என் கணவர் ,பிள்ளைகளுடன் ஷாப்பிங் சென்றோம் ...ஊரே அங்கு தான் என்பது போல ஒரே கூட்டம் வழிந்தது .நாங்களும் அந்த கூட்டத்தில் நாம் நினைத்த வண்ணத்திலே புடவை எடுத்து விடனும் என்ற குறிக்கோளில் அங்கும் இங்குமாய் தெரிந்து கொண்டு இருந்தேன் ..பிள்ளைகள் ஒரு பக்கமாய் ஓடி ஆடி விளையாடி கொண்டு இருந்தனர் .இந்த கணவர்களுகெல்லாம் ஷாப்பிங் என்றால் அவ்வளவு பயம் ...என்ன என்று கேட்கிறீங்களா ? முதலில் பில் ..இரண்டாவது  பிள்ளைகளை தூக்கி சுமப்பது .உச்சா வந்து கூட்டி செல்ல ,மூன்றவது செலக்ட் பண்ண சொலவங்க மனைவி மார்கள்.. ஆனால் அவங்க நினைத்ததையே சொல்லணும் என்று எதிர்பர்பாங்க  .ஆனால் கடைசியில் கணவர் சொன்னதை பெரும்பாலும் எடுக்க மாட்டங்க ..அதுக்கு ஏன் கேட்கணும் என்ற கோபம் இருக்கும் நிறைய கணவர்களுக்கு !!இந்த மாதிரி ஷாப்பிங் அனுபவம் நிறைய இருக்கு .

நிறைய தடவை எதாவது ஒன்றிற்காக ஷாப்பிங் போயிருப்போம் .ஆனால் அதை வாங்கவே மறந்துபோய் தேவை இல்லாத நிறைய பொருட்களை வங்கி வந்திருப்போம் .சரி நான் இப்போ சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன் ..ஒரு நாள் இப்படி ஷாப்பிங் போன பொழுது நான் புடவை செலக்ட் பண்ணிக்கிட்டு இருந்த பொழுது என் இரு பிள்ளைகளும் என் பக்கத்தில் இருந்து விளையாடி ஒண்டு இருந்தனர் .கடையிலோ நிறைய கூட்டம் தான் .என் கணவர் என் கிட்டே இருந்து தப்பி எங்கோ போய் விட்டார் அந்த நேரத்தில் ...என் மகன் அப்பொழுது தெரியாமல் பக்கத்தில் இருந்த பெண்மணியின் காலில் மிதித்து விட்டன் ..ஒரு கல்லூரி மாணவி மாதிரி தான் இருந்தது ..என் மகன் இரண்டாவது படிக்கிறான் .அவன் கூட சாரி ஆண்ட்டி!!  சாரி ஆண்ட்டி !! என்று பணிவாக சொல்கிறான் .அதற்கு அந்த பெண் ஷிட் ஷிட் என்று அவ்வளவு ஒரு கோர முகத்துடன் என் மகனிடம் கடிந்து கொள்கிறாள் .என் மனதால் தங்கவே முடியவில்லை ..இவ்வளவு படித்து என்ன பயன் ? இரண்டாவது படிக்கும் என் மகனுக்கு தெரியும் பண்பு கூட இருபது வயதை கடந்திருக்கும் அந்த பெண்மணிக்கு புரியவில்லை .பண்புகள் இயல்பாகவே வரும் .வளர்ப்பில் வரணும் .அந்த பெண்மணியின் அறியாமை என்று நினைத்து கொள்ள வேண்டியது தான் !!

அது போல இன்றைய சூழ்நிலையில் நிறைய குழந்தைகளை மாடர்ன் ஆக வளர்க்கிறேன் என்று நிறைய பெற்றோர்கள் அடிப்படை பண்புகளை சொல்லி தர மறந்து விடுகிறார்கள் .கிராமத்தில் பிள்ளைகளுக்கு முறை சொல்லி கூப்பிட சொல்லி தறாங்க அம்மாக்கள் .அத்தை ,சித்தி ,சித்தப்பா ,மாமா என்று !!! பெரிய ஊர்களில் எல்லாம் எல்லோரும் அங்கிள் ..எல்லோரும் ஆண்ட்டி தான் ..ஊருக்கு போனால் சித்தி யும் ஆண்ட்டி தான் ..அத்தை யும் ஆண்ட்டி தான் .என்ன கொடுமை சாமி இது ? என்னோட பிள்ளைகளும் அபப்டி தான் .பிள்ளைகள் தனியாகவே வளர்கிறார்கள் .அதனால் சொந்தங்களை பற்றி தெரியல ..அம்மா அப்பா தான் சொல்லி தரனும் .பாட்டி தாத்தா பெயர் கூட தெரிவதில்லை .கூட்டு குடும்பம் என்பது இந்த கால கட்டத்தில் சாத்தியம் இல்லை தான் .இருந்தாலும் சொந்தங்களை உறவுகளை பாசங்களை சொல்லி தந்தே ஆகணும் .அது நமது கடமை ஆகும் ..




12/31/10

HAPPY NEW YEAR !!



எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !!! நம் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களும் சந்தோசங்களும் அவ்வபோது வந்து வந்து போகும் ..கடந்த வருடங்களில் நடந்த கஷ்டங்களை எல்லாம் தூக்கி போட்டு விட்டு வரும் புது வருடத்தை இனிதாய் ... மகிழ்ச்சியாய் வரவேற்போம் !!! எல்லோரும் ஏதாவது பழக்க வழக்கங்களை மாற்ற RESOLUTION     எடுப்பார்கள் ..அப்படி எதோ ஒன்று எடுப்போம்..அதை கடை பிடிப்போம் .இந்த புது வருஷத்தில் நம் ஆடம்பரமாக கொண்டாடினாலும் ..யாரோ ஒரு ஏழை பிள்ளைக்கு இனிப்பு வாங்கி கொடுத்தால் அதன் மகிழ்ச்சியில் நம் புத்தாண்டு இனிதாய் பிறக்கும் .. என்னை மிகவும் மாற்றிய ஒரு சின்ன தத்துவம் .அதை எல்லோருடனும் பகிர விரும்புகிறேன் ..



" விட்டு கொடுபவர்கள் கெட்டு போவதில்லை !!!
 கெட்டுபோபவர்கள்  விட்டு கொடுப்பதில்லை !!! "


நான் இதை  பின்பற்ற போகிறேன் ....நீங்க ?



12/28/10

மார்கழி மாதம் !!

இது மார்கழி மாதம்!!  நாம் எல்லோருக்கும் தெரியும் ..எனக்கு  என்னவோ இந்த மாதத்தை கொஞ்சம் கூட  பிடிக்காது . ஏன் என்றால் ..சீக்கிரமே எழும்பி கோலம்  போடணுமே ... இந்த மார்கழி மாதம்  பஜனைகள், அழகு கலர் கோலங்கள் என   கிராமங்களில் நன்றாக பின்பற்றுவார்கள்..
 
என்னுடைய பாட்டி வீடு இருந்தது ஒரு கிராமம் .அங்கு அதிகமாக கிறிஸ்துமஸ் 
விடுமுறயில் தான் அதிகமாக   செல்வது வழக்கம் .அந்த மாதிரி  விடுமுறையில் தான் காலையில் கொஞ்ச அதிக நேரம் தூங்க முடியும்  ஆனாலும்  தூங்கவே விட மாட்டங்க .காலையில் நாம் தூங்கினாலும் அந்த பஜனை   சத்தத்தில் தூக்கமும் வராது.
 
ஆனால் மெல்லிய ஓசையுடன் கூடிய அந்த சத்தம்  இனிமையாக இருக்கும். அந்த சத்தத்தில் தூக்கம் கலைந்து பார்த்தால் என்னுடைய அத்தை  கோலம் போட்டு கொண்டு இருப்பாங்க .. எனக்கும் ஆசையா இருக்கும் ..ஆனால் சின்ன பிள்ளை நீ எல்லாம் போட கூடாது  என்று சொல்லிடுவாங்க . உள்ளுக்குள்ளே திட்டி கொண்டு பாட்டி கிட்டே போய் புகார் சொல்லிடுவேன் . அடுத்து எனக்கு என்று கொஞ்சம் கோல மாவு கொடுத்து ஒரு ஓரமாக கோலம் போட சொல்லுவாங்க .. எதோ பெரிய வெற்றி கிடைத்த சந்தோசம்  மனதில் இருக்கும் ..ஆனால் கோலம் என்னவோ ஒரு மாதிரி தான் இருக்கும் ...சின்ன பிள்ளைக்கு அவ்ளோ தான் தெரியும் .
 
இதெல்லாம் நடந்தது எனது ஐந்தாம் வகுப்பில் ...அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புத்தகத்தில் வரைந்து பழகினேன் .. எங்க வீட்டில் வீடு முற்றத்தில் போட்டு பழகுவேன் ..ஒரு பத்தாம் வகுப்பில் ஓரளவிற்கு கோலம் போல வந்தது .அடுத்து அழகாக வரும் கல்லூரி படிக்கும் போது . ஆனால் நிறைய சோம்பேறி தனம் எனக்குள் வந்து விட்டது .எங்க அம்மா என்னை கொஞ்சம் கோலம் போட்டு வாம்மா !! என்று ..எப்படி ??? என்னை வேண்டாம் என்று சொல்வீங்க ..இப்போ மட்டும் ஏன் என்னை எழுப்றீங்க என்று நான் கேட்ட நாட்கள் இப்போ என் கண் முன்னே !!
 
அப்போ எங்க வீடில் முற்றம் பெரியது .எவ்ளோ பெரிய கோலம் என்றாலும் போடலாம் .ஆனால் போட விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறேன் ..இப்போ எங்கே இந்த காலத்தில் எல்லாம் இருக்கவே இடம் இல்லை .இதில் கோலத்திற்கா ? என்று கேட்கிறாங்க ?
 
இந்த கோலம் போடுவதில் நிறைய மருத்துவ குறிப்புகள் இருக்குது .காலையில் சுத்தமான காற்று !! சுவாசிப்பதால் நல்ல ஆரோக்கியம் ..அடுத்து கோலம் குனிந்து  போடுவாங்க அந்த காலத்தில் எல்லாம் .அது ஒரு உடற்பயிற்சி போல ..இப்போ எல்லாம் ஸ்டூல் ,முக்காலி  போன்றவை கொண்டு போடுறாங்க .(நானும்  தான் ) ..இடமா பற்றி சொல்லிக்கிட்டு இருந்தேன் ..
 
இப்போ எல்லாமே பிளாட் என்பதால் ..அடுத்த வீடுக்கும் பக்கத்துக்கு வீடுக்கும் கொஞ்சம் தான் தூரமே ..அதில் எங்கு கோலம் போடறது.. அதனால் இப்போ ஆசை நிறைய இருக்கு கோலம் அழகாய் போட ..ஆனால் இடம் இல்லை ..அப்போ இடம் இருந்தது ..ஆசை இல்லை !! விஜய் வசனம் மாதிரி இருந்தால் அடிக்காதீங்க ...இருந்தாலும் அப்போ அப்போ கோலம் போடுவேன் .கோலங்கள் சில ..உங்கள் பார்வைக்கு !!!


இது நான் கார்த்திகை அன்று போட்ட கோலம் !!




இது   நான்  தீபாவளிக்கு  போட்டது ...




12/24/10

MERRY MERRY CHRISTMAS !!!




எல்லோருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் !!!


12/18/10

TOP 10 SONGS !!! 2010 .

இந்த 2010      இப்போ தான் தொடங்கின மாதிரி இருந்தது .இப்போ தான் ஹாப்பி நியூ இயர் !!! சொன்னோம் .அதுக்குள்ளே அடுத்த வருஷம் ..சொல்லபோன இந்த பிளாக்கர் பத்தி தெரிந்து ஒரு வருஷம் என்று  கூட  சொல்லலாம் 
எவ்ளோ வலை பக்கங்கள் படித்திருக்கிறேன் .நிறைய செய்திகள் அறிந்திருக்கிறேன் .இப்போ அதிகம் வலைபக்கங்களில்  பெண் குரலை பத்தி படித்தேன் .நிறைய பாடல்கள் தெரியா வந்தது ..இந்த வருடத்தில் வந்த பாடல்களை கொஞ்சம் அலசலாமே எல்லோரும் என்று தோனுச்சு .அதான் இந்த பதிவு ..இசை நம் எல்லோரிடம் ஊறி போனது என்றே சொல்லுவேன் .காலையில் வேலை பார்க்கும் போது பாடல்கள் பின்னாடி படித்தால் சீக்கிரமாய் வேலை முடியும் ..கல்லூரி காலங்களில்  தேர்வு நேரங்களில் பாடல்கள் கேட்டுகொண்டே படிப்பது வழக்கம்
.இந்த ஒரு வருஷத்தில் எவ்ளோ சந்தோசங்களை  கடந்திருக்கலாம் ..சோகங்களை கூடவும் ..
சந்தோசம் என்றாலும் சரி ...சோகம் என்றாலும் சரி நாம் எல்லோருமே இசை கேட்க விரும்புவோம் இல்லையா ? இசையை யாரும் வெறுப்பதாய் தெரியவில்லை..இந்த வருடத்தில் நிறைய படங்கள் வெளியாகின ..அதில் எனக்கு பிடிச்ச பத்து பாடல்களை சொல்கிறேன் .பின்னாடி இருந்து போகலாம் சரியா ??




10 . நாணயம் : ( பிரசன்னா நடித்தது ..பாடியவர் : S .P .B , சித்ரா ) 
------------------------- 



நான் போகிறேன் மேலே மேலே ...


9 . சுறா :( தலைவர் விஜய் ஆடி கலக்கியது )
-----------------


நாம் நடந்தால் அதிரடி ...

8 .  சிங்கம் :( சூர்யா ,அனுஷ்கா )
-------------------

என் இதயம் இதுவரை துடித்ததில்லை ....

7 ..அங்காடி தெரு :( புது முகங்கள் வாழ்ந்த ஒரு படம் )
-----------------------------



அவள் அப்படி ஒன்றும் அழகில்லை .....


6 . கோவா :( ஏர்டெல் சூப்பர் சிங்கர் இல் வெற்றி பெற்ற அஜீஸ் பாடியது ) 
----------------------



இதுவரை இல்லாத  உணர்விது....இதயத்தில் உண்டான கனவிது ...


5 .   மெட்ராஸ்பட்டினம் : ( ஆர்யா )
-----------------------------------

பூக்கள் போகும் தருணம் ...ஆருயிரே பார்த்த தாரும் இல்லையே ....
    

4 .   மாஸ்கோவின் காவேரி ...( படம் ஹிட் இல்லை... ஆனாலும் சுசி வாய்ஸ் சூப்பர் )
--------------------------------------------



கோரே கோரே ...



3 . பையா :( கார்த்தி செமயா இருப்பர் இந்த பாடல் இல் ...யுவன் குரல் அருமை )
-------------------




என் காதல் சொல்ல நேரம் இல்லை... 

2 .    எந்திரன் .( சூப்பர் ஸ்டார் ..டான்ஸ் அருமை ...)
---------------------


கிளிமஞ்சாரோ ...

1  . விண்ணை தாண்டி வருவாயா :
---------------------------------------------------------




இந்த படம் பற்றி சொல்லியே ஆகணும் .படத்திருக்கு முக்கிய காரணம் இசை தான்..எல்லா பாடல்களுமே அருமை ..எல்லாவற்றிற்கும் இடம் குடுத்து விட்டால் .மற்ற பாடல்களுக்கு இடம் இருக்காது ..ஆகவே ஒரு பாடல் மட்டும் குறிப்பிடுகிறேன்..எல்லாமே முதல் இடம் தான் ...

மன்னிப்பாயா ... ஹோசன்னா , ஓமான பெண்ணே ... 


இன்னொரு படலை விட மனசே இல்ல ...அதனால் இதையும் குறிப்பிடுகிறேன் ...





ஆயிரத்தில் ஒருவன் : ( மாலை நேரம் மழை தூவும் காலம்..என் ஜன்னல் ஓரம் --) 

                                                       இந்த பதிவை தொடர ...

                                                            நான் அழைப்பது....

                                                                   வெறும்பய 
                                                                       சிவா 

                                                                    சௌந்தர் 

12/16/10

எனக்கு பிடிச்ச ஒரு பாடல் !!!

கனவில் தான் !!!






குமரேசன்.. இவர் பார்க்கும் அத்தனை படங்களிலும் இவர் தான் கதாநாயகன். நாற்ப்பது வயதாகியும் பத்து வயதில் தொற்றிக்கொண்ட சினிமா பைத்தியத்தை விடாமல் தன்னுடனே வளர்த்து கொண்டிருக்கும் ஒரு கனவு தொழிற்சாலை. கொஞ்சம் முட்டைக் கண் , நேர் வகிடெடுத்து முன் நெற்றி தெரிய சீவி , சோடா புட்டி கண்ணாடி போட்டு சைடு சீன்களில் வந்து போகும் காமெடி நடிகர் போல இருப்பார். ஆனால் மனதில் அந்த கால ஜெமினி முதல் இந்த கால ஜெயம் ரவி போல தன்னை அழகன் என்று நினைப்பவர். 

தன் இளம் வயதில் சினிமாவில் போல் தன்னை யாராவது காதலிப்பார்கள் என்று முயற்சிகள் செய்தது தொடர்  தோல்விகளை மட்டுமே வெற்றியாக பெற்ற போராளி.  அவராக பத்து பதினைந்து பெண்கள் பின்னாடி சுற்றியும் தோல்வி. ஆனால் சினிமாவில் போல் செருப்படி வாங்குவதில்  மட்டும் தோல்வி கிடைக்கவில்லை.  பார்த்தார் குமரேசன்! பேசமால் சினிமாவில் வரும் கதாநாயகிகளை காதலிக்கத் தொடங்கினர்.  செருப்படியும் மிஞ்சியது.  எல்லா கதாநாயகிகளும் இவரைக் காதலித்தே ஆக வேண்டும்.  ஏனென்றால்  இவர் காதலிப்பது கனவுகளில் மட்டும் தான்.  ஆமாம் கதாநாயகிகள் அனைவரும் இவரின் காதலிகள்.


குமரேசன் சினிமா பைத்தியமாக இருந்தாலும் ஒரு வழியாக படித்து பட்டம் பெற்று ஒரு சிறிய கம்பெனியில் அக்கௌன்ட் பார்க்கும் பணியில் இருந்தார்.   இவர் கண்ட கனவுகளை அடுத்த நாள் ஆபீசில் எல்லோரிடமும் ரொம்ப சுவாரசியமாய் சொல்லுவார்.  மற்றவர்களும் இவரின் கனவுகளைக் காமடி பீஸ் என்று சிரிப்பார்கள்.  ஆனால் குமரேசன் இதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை.  இப்படியே போனால் தன் பிள்ளை தறுதலை பிள்ளை ஆகி விடுவானோ என்று குமரேசனின் அப்பா தன் தூர உறவு செல்லம்மாளை இவனுக்குப் பெண் பார்த்தார்.  

தனக்கு கல்யாணம் என்றதுமே குமரேசன் தன் மனைவி ஒரு சினேகா அல்லது ஒரு தாமனா போல என்று கற்பனை பண்ணினான்.  இவனின் குணம் தெரிந்து கல்யாணம் அன்று மட்டுமே பெண்ணைக் காட்டினார்கள்.  குமரேசனின் கல்யாண கனவு எல்லாம் வீணாகப் போனது.  செல்லம்மா " கோபுரங்கள் சாய்வதில்லை " " அருக்காணி " போல் இருந்தாள்.  இருந்தாலும் என்ன செய்ய ! கல்யாணமும் முடிந்தது.  கல்யாணமானாலும், குமரேசன் செல்லமாளிடம் முகம் கொடுத்து பேசுவதே இல்லை. தினமும் ராத்திரி ஷோ படம் பார்த்து பார்த்து தன் கதாநாயகிகளுடன் குடும்பம் நடத்தினான்.  இதில் பெரிய கூத்து என்னவென்றால் தன் கனவுகளை தன் மனைவியிடமே சொல்லூவான். செல்லம்மா ஒன்றும் எதுவும் கூறுவதில்லை. அவளும்  இந்த கிறுக்கு மாமாவுக்கு தன்னை விட்டால் வேறு எவளும் கிடைக்க மாட்டாள் என்று சிரித்துக் கொள்வாள்.

இப்போது  ! "விண்ணை தாண்டி வருவாயா " திரிஷாவை பாக்க இன்று நாற்பதாவது   தடவை போகிறார்  இந்த நாற்பது  வயது குமரேசன்.  படம் வந்தும் நாற்பது  நாள் தான் ஆகிறது.  இப்பல்லாம் தினமும் இரவு திரிஷா முகம் தான் இவர் கனவில் . இன்றும் வழக்கம் போல் தூங்க தொடங்கினர் குமரேசன்!  

அடுத்த நாள்  அவரின் முகம் ரொம்ப வாட்டமாய் இருந்தது.  செல்லம்மாளுக்கு புரியவே இல்லை.  ஆபீஸ் போனதும் குமரேசன் தன் கனவை வழக்கம் போல் சொல்லுவான் என்று நண்பர்கள் பார்த்தார்கள்.  குமரேசனும் சொன்னான் - வழக்கம் போல் கனவு வந்துச்சு. ஆனால் எந்த கதாநாயகி என்று தான் தெரிய வில்லை.  ரொம்ப பழகிய முகம். ஆனால் நினைவுக்கே வரவில்லை எனக்கு என்றார்.  எல்லாரும் அவரை பாவமாய் பார்த்தார்கள்.  குமரேசன் நாள் முழுவதும் அந்த முகத்தையே யோசித்தார்.  

சாயங்காலம் குமரேசன் வீட்டுக்கு போனார்.  எதிரே செல்லம்மா வந்தாள். குமரேசன் அப்பாவியாய் அவளிடமே தன் கனவை சொல்லி யாராக இருக்கும் என்றார்.  செல்லமாவுக்கு வந்ததே பாருங்க கோபம்.  அவரை ஒரு மேலும் கீழுமாய் பார்த்தாள்..சிரிப்பதா அழுவதா இல்லை அவனை போட்டு மிதிப்பதா என்று தெரிய வில்லை.ஏன் என்றால் அவன் கூறிய அடையாளங்களை வைத்து பார்க்கும் பொது கனவில் வந்ததோ அவளின் முகம் தான் ..சினிமா நடிகைகள் முகம் பார்த்து சலித்து போன அவனுக்கு தன் மனைவியின் முகம் வந்திருக்கு ..அவள் சந்தோஷத்தில் .." மாமா என் முகமா என்று பாருங்க " என்றாள் ..குமரேசனுக்கு தன் கனவில் யார் வந்தாள் என்று தெரிந்ததில் சந்தோசம் .மனைவிக்கு கணவனின் கனவில் ஒரு நாளேனும் வந்தாச்சு என்பதில் சந்தோசம் ...குமரேசன் அன்று முதல் தன் மனைவியை  நேசிக்க தொடங்கினான் செல்லமாவின் நீண்ட நாள் பொறுமைக்கு பதில் கிடைத்தது ...கனவில் எப்போவுமே செல்லம்மா தான் !!! ( வடை போச்சே என்று  அவர் ஏங்கின நாட்கள் நமக்கு எங்கே தெரிய போகுது )

12/13/10

சிட்டி !!!!



ஹலோ எல்லோருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி ஒன்னு சொல்ல போறேன் ..என்ன தெரயுமா? கொஞ்சம் யோசிங்களேன் ...நான் முதல் மதிப்பெண் எல்லாம் வாங்கல!! என் பொண்ணு இன்று நான் சொன்னதை எல்லாம் கேட்கல ..எனக்கு கோபம் வராமல் இல்ல !!!
நான் சமைத்ததை சூப்பர் என்று சொல்ல வில்லை  என் கணவர் !!! என் நண்பர்கள் எல்லோரையும் மொத்தமாக மீட் பண்ணவும்  இல்ல !!! அப்புறம் என்ன சந்தோசம் என்று கேட்கிறீங்கள ??? சொல்றேன் ...ஓவர் பில்ட் அப்  என்று சொல்வது கேட்கிறது என் காதில் ..... சொல்றேன் ..எனக்கு செல்ல பிராணி வளர்க்கணும் என்று ரொம்ப நாளா ஆசை ..இடம் அமைய வில்லை ...மீன்கள் மட்டும் வளர்க முடிந்தது.. நாய் என்றால் ரொம்ப பிடிக்கும் ...ஏனோ முடியவே இல்ல ...எங்க அம்மா கிட்டே கேட்டு இருக்கேன் ..வளர்க்கணும் என்று ? அம்மா உன்னை வளர்க்கவே கஷ்டபடுகிறேன் ...இதில் அதையுமா ?? என்று சொல்லி விட்டார்கள் ..திருமணத்திற்கு பிறகு ...என் கணவரையே பெட் ஆக்கி கொண்டேன் . :-) என் பிள்ளைகள் கேட்கிறாங்க இப்போ ...என் அம்மா சொன்ன அதே வசனம் தான் ...உங்களையே பர்த்துக முடியல ...இதிலே அது வேறயா ??? என்று ..என்ன ஒரு மனித குணம் பாருங்க ..குரங்கு போல ...எனக்கு குரங்கு ரொம்ப பிடிக்கும் ...சரி என்ன சந்தோசம் என்று  சொல்லவே இல்ல பாருங்க ..என் ஆசை என் பிள்ளைகளின் ஆசை எல்லாம் இப்போ நிறைவேறி ஆச்சு ...அபப்டியே உங்க வலது கை சைடு பாருங்க ...உங்க நண்பர்களின் முகம் நியாபகம் வந்தாதா ?? நான் ஒரு குரங்கை என் பெட் ஆக்கிருகேன்  ...பேரு "சிட்டி " சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தப்பா  நினைச்சிகதீங்க ....என் பொண்ணு கிட்டே பேரு கேட்டேன் .ரோபோ வந்ததில் இருந்து சிட்டி சிட்டி தான் ..அதனால் வெச்சுட்டோம் ...பெயர் சூடும் விழ எல்லாம் முடிந்தது ...கூப்பிட முடியல எல்லோரயும் ..

சரி ஏன் குரங்கை ?? என்று நீங்க கேட்பது கேட்கிறது ...நாய் ,பூனை ஆடு ,மாடு எல்லாவற்றையும் வீட்டில்  வளர்க்கலாம் ..ஆனால் குரங்கை முடியுமா ? நம்ம ப்ளாக் இல் என்றால் நீங்க எல்லோருமே நல்லா  பர்த்துகுவீங்க..சாப்பாடு  எல்லாம்  நான் போடா விட்டாலும் நீங்க போடலாம் .more   என்று இருக்குல அதை கிளிக் பண்ணி குடுக்கலாம் .சமத்தாக சாப்பிடும் ..சரி எங்க சிட்டி ...இல்ல இல்ல நம்ம சிட்டி எப்படி என்று நீங்க தான் சொல்லணும் .

12/10/10

சமைத்து தான் பாருங்களேன் !!!!

நிறைய பேர் வேலைக்காக வெளியூர்களில் இருப்பதுண்டு .அவர்களில் பலர் அம்மா சமயலையோ அல்லது மனைவியின் சமயலையோ மிஸ் பண்ணுவதுண்டு .அந்த பலருக்காக சின்ன சின்ன சமையல் குறிப்புகள் சொல்லலாம் என்று ஒரு ஆசை நீண்ட நாள் இருந்தது .அதற்காக வெளியூர் ல இருபவங்க தான் சமைத்து பார்க்கணும் என்று இல்லை. அம்மாவிற்கோ மனைவிக்கோ சமைத்து குடுத்து அடி... சாரி பாராட்டை பெறலாமே ?? முதலில் அடிப்படை பாடம் தான் ..அதற்காக சுடுதண்ணி எல்லாம் வைக்க சொல்லி குடுக்கல ..சிம்பிள் ஆக ஒரு வெரைட்டி ரைஸ் ..தக்காளி சாதம்...ஒரு 15       நிமிடங்களில் சமைக்கலாம் ....என்ன எல்லோரும் ரெடி தானே ?




தேவையான பொருட்கள் :
-----------------------------------------
பாஸ்மதி ரைஸ் : ஒரு கப் ..( பாஸ்மதி இல்லையெனில் பச்சரிசி )

ONION  -------  2
தக்காளி ------- 2

இஞ்சி பூண்டு விழுது --- 1  ஸ்பூன்
கொத்தமல்லி இலை
புதினா இலை ( கொஞ்சமாக )
கரம் மசாலா தூள் --- 2  ஸ்பூன்
மிளகாய் தூள் -- 1  ஸ்பூன்
மஞ்சள் தூள் --- 1   /  2  ஸ்பூன்       

ஏலக்காய் -- 2        
பட்டை -- 1            
கிராம்பு - 3
தண்ணீர் -- 1   கப் அரிசி என்றால் ஒன்னரை கப் தண்ணீர் எடுக்க வேண்டும் .
(பிரியாணி கும் இதே அளவு தான்..அரிசி 2  கப் எடுத்தால் ..2   * 1  1 /2  ) கணக்கும் படிக்கணும் போல சமைப்பதற்கு !!!            

இதை எல்லாம் ரெடி பண்ணிகோங்க...எப்படி என்று சொல்கிறேன் .நல்ல கேட்டுகோங்க .

1  ..  முதலில் தேவையான அளவு அரிசியை ஒரு 15        நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்
குக்கர் இல் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் ..பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் எல்லாவற்றயும் போட்டு தாளிக்கவும் ..கரிகிவிடாமல் பார்த்து கொள்ளவும் ( சிம் இல் வைத்து கொள்ளலாம் ).. .
2   . வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும் .
3 . தக்காளியும் சேர்த்து வதக்கவும் ..மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள்
 கரம்மசாலா எல்லாவற்றயும் சேர்க்கவும் .
4  நன்கு வாசனை வரும் வரை வதக்கவும் .
5 .    தேவையான .  அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கணும் ...அதை மறந்தால் கஷ்டபட்டது எல்லாமே குப்பையில் தான் ...உப்பு ஒரு 1  ஸ்பூன் போதும் .
6 .ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு ..சேர்க்கவும் .கொத்தமல்லி புதினா இலை சேர்த்து மூடவும் ..வெயிட் போடாமல் ஆவி வரும் வரை வெயிட் பண்ணிட்டு.வந்ததும் அடுப்பை சிம் இல் வைத்து .5  நிமிடங்கள் கழித்து ஆப் பண்ணவும் .
மொத்தமாக ஆவி போனதும் திறக்கவும் ..
7     .கொஞ்சம் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும் .


( இப்போ பார்த்த அதே செய்முறை தான் சிக்கன் பிரியாணி கும் .தக்காளி சேரத் பின்னர் ..சிக்கன் யும் சேர்த்து வதக்கவும் ..கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கவும் (3      ஸ்பூன் ))
VEG  பிரியாணி என்றால் தேவையான காய்கறிகளை சேர்க்கவும் தக்காளி வதக்கும் போது      )
 உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறன் ..நீங்க தான் சொல்லணும் ..எப்படி என்று ??

12/5/10

என் மனதினில் ...


அழகான காலங்கள் ...
அழியாத சந்தோசங்கள் !!!
என் கல்லூரி காலங்கள் ..
சண்டை போட்ட
மறு நிமிடம்
பேசி கொண்ட அந்த
நாட்கள் .....ஏன் ?
இல்ல இன்று !!!

கேட்காமலே வருகின்றன
கோபங்களும் ...
ஏமாற்றங்களும் !! என்னிடம் ...

கடந்த காலங்கள் ...
நினைத்து ...நிகழ்
காலங்களை தொலைக்கிறேன் !!!

----------------------------------------------------------------



என் நினைவுகளால்
உன்னை செதுக்கினேன் !!
அழகிய சிலையாய் ..நீ
இன்று ..
என் முன்னே
காதலாய் !!!


..


.

11/27/10

மெகா சீரியலும் நம் மக்களும் !!!




அயோ !!! எதோ கருகிறே வாசம் வருதே !!! என்று மகன் சொல்ல அம்மா அதை கூட கண்டு கொள்ளாமல் 
எங்கேயோ மூழ்கிக்கொண்டு  இருந்தார் ..எங்கு தெரியுமா மெகா சீரியல் என்னும் மெகா கடலில் !!!
இன்று மெகா சீரியல் பார்க்காமல் இருபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .. அந்த ஒரு சிலரில் நானும் ..கொஞ்சம் ஓவர் அஹ தான் இருக்கோ ? .நானும் பார்த்திருக்கேன் சீரியல் ...சித்தி ,மெட்டி ஒலி என்று வெறுத்து போய்  விட்டு விட்டேன் 
சின்ன பிள்ளைகள் கூட மெகா சீரியல் பார்கிறாங்க ..நிறைய காட்சிகள் அருவருக்க வைக்கின்றன .மயங்கி விழுந்தாலே கர்ப்பம் தான்  என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொண்ணுக்கு கூட  தெரியுது .


மேலும் முந்தைய காலத்தில் எல்லாம்  பிரெஷ்  அக  சமையல் எல்லாம் செய்தாங்க .. அந்த மைக்ரோ வாவ்  யாரு கண்டு பிடிச்சாங்களோ ....அதில் இருந்து சூடு பண்றது ஈசி யா போச்சு ...
அடுத்து மெகா சீரியல் பத்தி சொல்லணும்னா நிறைய பேருக்கு ரெண்டு மனைவி இருப்பாங்க..இல்லனா ரெண்டு புருஷன் இருபங்க  

இதை விட கொடுமை என்னன்னா ? முதல் மனைவியின் பொண்ணுக்கு சித்தி யை தான் ரொம்ப பிடிக்குமாம் .என்ன கொடுமை டா சாமி ? அது போல விஷம் வைக்கிறது ...பில்லி சூனியம் வைக்கிறது எல்லாமே சொல்லி கொடுகிரங்க.

ஒரு நடிகர் நடிகையின் கால் சீட்  கிடைக்கலனா அவங்களை கொன்று விடுவாங்க தெரயுமா? ஒரே நடிகையே நிறைய சீரியல் இல் வருவதால்  எங்க பாட்டி குழம்பி போய் இருபங்க சில நேரங்களில் ...
இவ ஏன் இங்கே வந்திருக்க என்று ..

இப்படி நிறைய பேர் மனதில் நீங்க இடம் பிடித்து .கொண்டு இருக்கிறது ..அதனால் எதுவுமே பயன் இல்ல ...மனம் நிம்மதியாக இருக்க தான் டிவி  பார்க்கிறோம் ..பார்ப்பதனால் நிறைய கேட்ட எண்ணங்களே மனதில் தோன்றுகின்றன என்பதை  மறுக்கவே முடியாது ...


அடுத்து ஒரு நிகழ்ச்சி .." நடந்தது என்ன ? " ..நிறைய நல்ல தொகுப்புகள் இருக்கின்றன சில வேளையில்...பேய் ஆவி போன்ற நிகழ்ச்சிகளை இரவு நேரங்களில் தவிர்க்கலாம் இல்லையா ? 

எனக்கு பிடித்த நிகழ்ச்சி என்று சொன்னால் " airtel   சூப்பர் சிங்கர் தான் .மனதை மயக்கும் பாடல்கள் ...நல்ல அறிவுரைகள் படுவர்களுக்கு ...எனக்கு பிடித்தால் அதை பார்க்க சொல்லவில்லை ...இருந்தாலும் ரிலக்ஸ் பண்ணும் நிகழ்சிகளை  பார்க்கலாம் .சீரியல் இல் அவங்களும் அலுரங்க ..நம்மளும் அழ வைகிரங்க..தேவையா ???





.

11/16/10

செல்லமே !!!





என் மகளின் வயதில் நான் இல்ல விட்டாலும் ....
என் மகள் கூட விளையாடும் போது நானும் சின்ன குழந்தை தான் .என் மகளுக்கும்   எனக்கும் ...நிறைய நேரங்களில்  சண்டை தான் .செல்ல கோபங்கள். சாப்பிட மிகவும் அடம் தான் ..சாப்பிடாமல் விட மனம் கேட்காது .அப்படி இருக்க  ஒரு யோசனை வந்தது ..என்ன பண்ணலாம் ??சின்ன பிள்ளைகளை கை ஆள்வது மிகவும் கஷ்டம் என்றே எண்ணி இருந்தேன் .ஆனால் நிறைய  ஐடியா இருக்கு.அவங்களை நம் வசம் கொண்டு வர .
அவர்களை மிரட்டினால் சொன்னதை  கேட்கவே மாட்டங்க.அவங்க போக்கில் தான் சொல்லணும் ..அதாவது கொஞ்சம் ஐஸ் வைக்கணும் ..நீ குட்டி பிள்ளையில் இப்படி பண்ணுவே ...அப்படி பண்ணுவே என்று சொன்னால் நாம் காரியம் சாதிக்கலாம் .

இப்படி நிறைய முறை என் மகளை என் வசம் கொண்டு வந்திருக்கேன் .குறிப்பாக அவர்களின்  சிறு வயதில் உள்ள புகை படங்களை காட்டலாம் ..அவங்க பண்ணினே குறும்புகளை சொல்லலாம் . சொன்னதையே திருப்பி திருப்பி வேற சொல்ல வேண்டியது வரும் .நமக்கு வேண்டியது சாப்பாடு உள்ளே போகணும் .அவ்வளவு தானே ..சில நேரங்களில் எனக்கே போர் அடிப்பதுண்டு .இருந்தாலும் சொல்லுவேன் ..

இன்னொரு விஷயம் ...குழந்தைகளிடம் நிறைய பாசங்கள் இருக்கும் .அது வெளிபடையாக தெரியாது ..ஆனால் வெளிப்படும் நேரம் வெளிப்படும் ..குழந்தைகள் காய்ச்சலில் படுத்தால் நான் பார்த்து  கொள்கிறேன் .நான் காய்ச்சலில் இருக்கும் போது அவள் கண்களில் உள்ள வருத்தம் நான் அறிவேன் .

பாசம் கட்டும் இடத்தில கோபமும் வந்து விடுகிறது .நான்  சோர்வாக இருக்கும் நேரங்களில் சேட்டை பண்ணும் போது அடித்து விடுகிறேன் 
பின்னர் அழுதுகொண்டே தூங்கும் அவளை கொண்டு நானும் அழுகிறேன் .இப்படி தானே என்னையும் என் அம்மா வளர்த்திருப்பார்கள் .

ஒவ்வொவொரு முறை அவள் செய்யும் சேட்டையையும் ரசிக்க கற்று கொள்கிறேன் ...இதை ரசிக்க கடவுள் எனக்கு வாய்பளிதிருகிறார் என்றே !!! என் செல்ல மம்மி!!! என்று அவள் சொல்லும் போது கிடைக்கும் சந்தோசதிருக்கு அளவே கிடையாது !!!


மழலை ஒன்று 
இருந்தால் ....
எந்த பாலைவனமும் 
சோலை வனம் தான் !!!



11/4/10

என் சிறு வயதில் தீபாவளி !!!





சிறு வயதில் தீபாவளி என்றால் ஒரு மாசத்திருக்கு முன்பே எப்போ வருது ? எத்தனை நாள் லீவ் என்றெல்லாம் பார்க்கும் ஆர்வம் ..என்ன டிரஸ் வாங்கலாம் ..அதற்கு மேட்ச் ஆஹா வளையல் ,செயின் ,கம்மல்  எல்லாம் வாங்கும் வழக்கம் .தீபாவளிக்கு பலகாரங்கள் சுடும் போதே டேஸ்ட் பண்ணி அது சரி இல்ல இது சரி இல்ல என்று நிறைய முறை சொல்லிருக்கேன் .எங்க அம்மாவும் அதை சரி பண்ணுவாங்க .இரவில் விழித்திருந்து கோலங்கள் போட்டு தான் தூங்குவோம் ..காலை தூக்கம் எவ்வளவு சுகம் தெரயுமா? இன்னும் குளிக்காமல் என்ன பண்றே என்று வாங்கும் திட்டுகள் இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றது.சீயகயும் எண்ணெயும் ரெடி அக இருக்கும் . நன்கு குளித்துவிட்டு ..சாப்பிட வருகையில் இட்லி கூட கைமா குருமாவும் மணக்குமே .....அயோ ரொம்ப சூப்பர் தெரயுமா ?

ஒரு பிடி பிடித்து விட்டு ...புது டிரஸ் போட்டுகிட்டு வெளியில் வருகையில் என் மனதில் இருக்கும் சந்தோசம் நிறைய !!! ஒரு 100  

வாலா சரவெடி வெச்சுட்டு " ஹாப்பி தீவாளி " என்று சொல்லி கொண்டாடிய நாட்கள் மறக்கவே முடியாது ..ஆசை தீர வெடித்து விட்டு எல்லா சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு ...நல்ல மதிய உணவை சாப்பிட்டு  விட்டு ..ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு
மாலை மறுபடியும் இன்னொரு புது டிரஸ் போட்டுகிட்டு ..கலர் கலர் மத்தாப்புகள் போட்டு ..வானம் ஜொலிப்பதை கண்ட நாட்கள் மிகவும் அருமையான நாட்கள் ...

இன்று ...நிறைய பொறுப்புகள் ..என் அம்மா செய்த எல்லாவற்றையும் நான் செய்ய வேண்டிருக்கு .நானே பலகாரங்கள் பண்ணி நானே சாப்பிட வேண்டிருக்கு .அன்று என்னை சாப்பிட வைக்க கெஞ்சிருகாங்க..இன்று என் மகளை !!! நான் குறை சொன்ன காலங்கள்  
சாப்பாட்டின் மீது ..இன்று என் மகள் சொல்கிறாள் ..வாழ்கையில் எவ்வளவு சுழற்சிகள் ...அது போலவே நிறைய கஷடங்கள் வாழ்கையில் வரும் அனால் கடந்து போகும் ..ஒரு கஷ்டம் என்றால் அதன் பின் சந்தோசமே !! 

இந்த தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக அமைய 
நல் வாழ்த்துக்கள் !!!

10/21/10

கற்பனையில் ஓர் உலகம் !!!



அஞ்சலி ! பத்து வயது சுட்டிப் பெண். சின்ன வயது என்றாலும் கொஞ்சம் பக்குவமான பெண்.  ஏன் என்றால் அவள் பிறந்தது ஏழைக் குடும்பத்தில் தான்.  அவளின் அம்மா அப்பா அவளுக்கு வீட்டு கஷ்டங்களை அவ்வப்போது எடுத்து சொல்வார்கள்.  எனவே தான் அந்த பக்குவம்.  அம்மா அப்பா ஏழை என்றாலும் அவளுடைய நல்ல நண்பர்கள். அது அவள் செய்த பாக்கியம் என்றே நினைத்தாள்.  பக்கத்து வீட்டு மது ! அஞ்சலியின் தோழி ! பள்ளித் தோழியும் கூட.  மது நல்ல வசதியான பெண்.  அவள் அணியும் ஆடை, வளையல், கம்மல் பாசி என்று எல்லா பொருளிலும் அவளின் வசதி தெரியும்.  அஞ்சலி சின்ன பொண்ணு தானே. தனக்கு இப்படி இல்லையே என்று அவளின் குட்டி மனதும் அசைப் படத்தான் செய்யும்.

அஞ்சலி தன் அம்மாவிடம் எல்லா விசயங்களையும் சொல்லுவாள்.  ஏன் மது பற்றி கூட சொல்லுவாள்.  ஆனால் எனக்கும் அவள் மாதிரி டிரஸ், பாசி வேண்டும் என்று தன் ஆசைகளை மட்டும் காட்டிக் கொள்வதில்லை.  அம்மா அப்பா வருத்தப் படுவார்கள் என்று எண்ணுவாள்.  இருந்தாலும்  அவள் மனதில் உள்ளதை தனக்கென்ற ஒரு கற்பனை உலகில் இருப்பதாய் எண்ணி அதில் செல்ல தொடங்கினாள்.

அது ஒரு குட்டி கற்பனை உலகம்.  அங்கே அவள் ஒரு குட்டி ராணி.  அவள் கேட்டது எல்லாம் கிடைத்தது.  தோழி மதுவை  விட அழகான டிரஸ், நகைகள் என்று எல்லாம்
ஏராளம் ஏராளமாய்.  அஞ்சலிக்கு தன் நிஜ உலகை விட கற்பனை உலகம் மிகவும்
பிடித்துப் போனது.

அஞ்சலி தன் அம்மா அப்பாவிடம் இருந்து தனிமையில் இருக்க ஆரம்பித்தாள். மகளின் மாற்றம் ஏழைப் பெற்றோர்களுக்குப் புரிய வில்லை.  தன்னுடைய கற்பனை வாழ்வில் நிஜ வாழ்வை தொலைக்க ஆரம்பித்தாள்.  மனதளவில் ஓடிய அஞ்சலியின் கற்பனை வாழ்வு தூக்கத்தில் புலம்பலாய் வரத் தொடங்கியது.   அம்மாவுக்கு கொஞ்சம் புரியத் தொடங்கியது.

அம்மா ஒரு நாள் அஞ்சலியிடம் ஆறுதலாய் பேசினாள்.  " அஞ்சலி ! கற்பனை வேறு. நிஜம் வேறு.  கற்பனையில் வாழும் வாழ்க்கையை நிஜத்தில் அனுபவிக்க முடியாது.  கற்பனை வாழ்வில் உழைப்பே இல்லாமல் எல்லாம் வாங்கி விட முடியும்.  ஆனால் நிஜத்தில் நீ உழைத்தால் தான் எல்லாம் கிடைக்கும்.  கற்பனை செய்.  ஆனால் அதிலேயே வாழ நினைக்காதே.  கற்பனையை நிஜமாக்க நன்றாக படி.  இன்று நம்மிடத்தில் இருக்கும் ஏழ்மை தொடர் கதை அல்ல.  உன் உழைப்பு கூட அதை மாற்ற முடியும்."

இருந்தாலும் அஞ்சலியால் தன் கற்பனை வாழ்வில் இருந்து உடனே வெளி வர முடிய வில்லை.  அவளின் அம்மா அப்பா அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே கொண்டு வருகிறார்கள்.

அஞ்சலியைப் போல இன்று நிறைய பிள்ளைகள் தன் ஏக்கங்களை மனதில் சுமந்து கொண்டே வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.  அவர்களின் மனமறிந்து அவர்களை  அரவணைத்து கொண்டு செல்வது பெற்றோர்களின் கடமையே !!!



10/17/10

நினைவை அழிக்காதே !



 

என்னுடன் பேசாத உன்
உதடுகள் என்ன

சொல்கின்றன ?

என் பெயரை தானே ??

@@

என் நினைவை

நினைக்காத உன் மனது

யாரை தேடுகின்றன ?

நம் நினைவுகளையா ? ?

@@

உன்னுடன் பேசிய

வார்த்தைகளும்

உன்னுடன் வாழ்ந்த

என் மனதும் ...இன்று

என்னையே வெறுக்கின்றன ??

@@

நாம் கடந்த சாலைகள்

நாம் ரசித்த பாடல்கள்

இன்று புதிதாய் ...

கண்ணீரை தருகின்றன

காணிக்கையாய் !!!

@@

உன் நினைவுகளில்

என் நினைவுகள்

இல்லாது போனாலும் ...

என் நினைவுகளில்

உன் நினைவுகள்

அன்றும் .

இன்றும் .

என்றும் .!!!

@@@

10/15/10

மரங்களை வெட்டுங்கள் ....



உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
 

மண்ணின் வில்லன்



அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.



இதன் கொடூரமான குணங்கள்



இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது,
( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!
இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக
மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்



இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும்
உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.



காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது
.


அறியாமை



நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.



கேரளாவின் விழிப்புணர்வு



நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.
ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.



நல்ல மரம் ஆரோக்கியம்



வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம்
.


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?



இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.


மரங்களை
வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....!!! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!!


( ( இது எனக்கு வந்த மெயில் தான் . இருந்தாலும் எல்லோருடனும் பகிர விரும்புகிறேன் )

10/14/10

Auto Draft

மீன் குழம்பு ..( ஆற்று மீன் )

 


விரால் மீன் --  ஒரு கிலோ

சாம்பார் வெங்காயம் -- 10 உரித்து முழுசாக

வற்றல் ---  10

சீரகம் -- 8 ஸ்பூன் .

புளி - கால் கப் கரைத்தது .




செய்முறை :

---------------------



*  வற்றல் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும் .

( அம்மியில் அரைத்தால் கூடுதல் சுவை .)


*  புளி கரைத்தது ,மசாலா அரைத்தது இரண்டையும் ஒரு அடி கனமான பாத்திரத்தில் கலக்கவும்


*சாம்பார் வெங்காயத்தை தட்டி எடுத்து கொள்ளவும் .


* அதையும் மசாலா கலவையில் சேர்க்கவும் .


*100 ml நல்லெண்ணெய் சேர்க்கவும் கலவையில்


* தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்


* மஞ்சள் தூள் சேர்க்கவும் .


* உப்பு சேர்க்கவும் .


* எல்லவற்றையும் கைகளால் நன்றாக கலந்து அடுப்பில் வைக்கவும் .


* நன்றாக கொத்தி வந்ததும் சிம் இல் வைத்து .சிறிது எண்ணெய் பிரிந்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும் .


* 5 mins கழித்து அடுப்பை அணைக்கவும் .


* மீன் குழம்பு ரெடி .


( இந்த மீன் குழம்பு முறை ...விருதுநகர் ஸ்பெஷல் .தேங்காய் சேர்க்காமல் செய்வது .வித்தியாசமான ஒன்று .மறு நாள் வரை கெடாமல் இருக்கும் .மறு நாள் சாப்பிடும் போது கூடுதல் சுவை தாங்க !!!!)